Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி இளைஞர் விபத்தில் காலமானார்

    காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் சாதிக் எனும் 31 வயதுடைய இளைஞர் நேற்று 03-04-2016 மூதூரில் இடம்பெற்ற விபத்தில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்க விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

  • “முஸ்லிம் பெண்களின் திருமண வயதை நிர்ணயிப்பது கடினம்”

    கொழும்பு: முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் குறைந்த வயதில் திருமணம் செய்து வைக்கப்படுவதை தடுப்பது மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சால் மட்டுமே இயலாது என அமைச்சர் சந்திராணி பண்டார ஊடகங்களிடம் தெரிவித்தார். 18 வயதுக்குட்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பில் அந்த சமூகத்திலிருந்தே எதிர்ப்புகள் வருகின்றன என்று அவர் கூறுகிறார்.

  • மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வரலாற்று வெற்றிக்குரிய அந்த நான்கு சிக்ஸர்கள் (காணொளி)

  • “ஃபேக் ஐடி” மனிதர்கள்

    முகமட் நிஷவ்ஸ் ஒதுங்கிக் கிடப்பாரடி ஒரு சேவை செய்யாரடி வதங்கி வாடுவோர்க்கு வாழ்வு தர வருவோரை பேக் ஐடி திறந்து பீற்றிக் கிழிப்பாரடி ஆக்கபூர்வ வேலைகளை அசிங்கம் செய்வாரடி.

  • உலகக்கிண்ண சாதனை வெற்றியில் மேற்கிந்தியத் தீவுகள்

    கொல்கத்தா: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் பட்டங்களை மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் வென்றுள்ளனர்.மேற்கிந்தியத் தீவுகளின் அணியின் ஆடவர் இரண்டாவது முறையாக டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளனர்.

  • தென் கடற்பரப்பில் பிடிப்பட்ட ஹெரோயின் மதிப்பு 75 லட்சம் டொலர்

    கொழும்பு: தென் கடற்பரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் 75 லட்சம் டொலர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்தப் போதைப் பொருளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சிறிய கப்பல், ஈரானியர்களுக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

  • காத்தான்குடி ஆற்றங்கரை மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசிய நுளம்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆட்கொல்லி டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாக காத்தான்குடி-05 ஆற்றங்கரைப் பகுதி இன்று 01 வெள்ளிக்கிழமை மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

  • காத்தான்குடியில் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட 3 அடி முதலை மட்டு வாவியில் விடுவிப்பு!

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி-06 ஆம் குறிச்சி டீன் வீதியிலுள்ள நீர் ஓடை ஒன்றில் இருந்து சுமார் 3அடி சிறிய முதலை பொது மக்களால் (31) வியாழக்கிழமை இரவு வேளை மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த முதலையை மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று 01 வெள்ளிக்கிழமை காலை காத்தான்குடியில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

  • ஏறாவூரில் பாரிய கைத்தொழில் பேட்டை ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: ஏறாவூரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிழக்கு ஆடைத் தொழிற்சாலை ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் ஏப்ரல் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான அமைச்சர் ரவூப் ஹக்கீம்,

  • மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயில் நிருவாக சீர்கேடுகள். நடப்பது என்ன? (ஆய்வறிக்கை)

    முஹம்மது நியாஸ் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஜாமிஉஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயில் நிருவாகம் தொடர்பில் அண்மைக்காலமாக குறித்த பள்ளிவாயில் மஹல்லாவாசிகளான ஜமாஅத்தார்கள் மற்றும் சந்தாதாரர்களான அந்நகரில் தொழில் புரியக்கூடிய வர்த்தகர்கள் மத்தியில் பாரிய அதிருப்திகள் தோன்றியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

  • கத்தாரில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றனர்

    டோஹா: கத்தாரில் 2022 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கால்ப்பந்து உலகக்கோப்பை போட்டிகளை முன்னிட்டு அங்கு கட்டட வேலைகளில் தொழிலுக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்கள் திட்டமிட்ட வகையில் பரவலான துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுப்பதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

  • சொந்த மண்ணில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி

    மும்பை: உலகக் கோப்பை டி 20 போட்டியின் அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிரடியாக ஆடி இந்திய அணியை வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. அவர்களின் மகளிர் அணியும் இறுதி ஆட்டத்தில் ஆடுகின்றனர். மும்பையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்திய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

←Previous Page
1 … 233 234 235 236 237 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar