Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அமெரிக்காவுக்கு சவுதி எச்சரிக்கை

    நியூயோர்க்: அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற பங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் தாங்கள் மீது பொறுப்பு சுமத்தப்பட்டால் கடும் பெருளாதார விளைவுகள் ஏற்படும் என சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.அந்தத் தாக்குதல்களுக்கு சவுதி அரேபியாவே பொறுப்பு எனக் குற்றஞ்சாட்டும் வகையிலான மசோதாவொன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • மனிதநேய மருத்துவ உதவி கோரல்

    தற்பொழுது இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நான்கு மாதமாக சிகிச்சை பெற்று வருகின்ற அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.ஹமீட் 26 வயது இளைஞருக்கு அவசரமாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் கூறியுள்ளார்கள். இச் சத்திரசிகிச்சை செய்வதற்கு 300,0000 (முப்பது இலட்சம்) தேவைப்படுகிறது.

  • பாகிஸ்தான் பயிற்சியாளராகிறார் இன்சமாம் உல் ஹக்?

    AF-90 லாஹூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைப் பயிற்சியாளராகும் வாய்ப்பு முன்னாள் தலைவர் இன்சமாம் உல் ஹக்குக்கு பிரகாசமாகியுள்ளது. அவரது பெயரை தற்போது தலைமைப் பயிற்சியாளர்களுக்கான பரிந்துரைப் பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது. அதேசமயம் இன்சமாம் உல் ஹக்குடன் வாரியத் தலைவர் ஷஹாரியார் கான் ஏற்கனவே பேசி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஹக் தலைமைப் பயிற்சியாளராகும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

  • யூத சதித்திட்டங்களும் தகர்த்தெறியப்படும் கணவன் மனைவி உறவும்

    காத்தான்குடி: புதிய காத்தான்குடி பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் இயங்கிவரும் அல் பத்ர் இஸ்லாமிய நிறுவனத்தின் ஏற்பாட்டில் ” யூத சதித்திட்டங்களும் தகர்த்தெறியப்படும் கணவன் மனைவி உறவும் ” எனும் தலைப்பில் மாபெரும் விஷேட மார்க்க சொற்பொழிவு நிகழ்வு இன்ஷா அல்லாஹ் 2016 ஏப்ரல் 16 இன்று சனிக்கிழமை 04.00 மணியளவில் புதிய காத்தான்குடி பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.

  • கிண்ணஸ் சாதனைபடைத்த நாகராஜை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடியில்

    எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: நீண்ட தூரம் 14 197.55 km துவிச்சக்கர வண்டி சவாரி செய்து சாதனை படைத்து கிண்ணஸில் இடம் பிடித்த இந்தியாவைச் சேர்ந்த அர்கோட் நாகராஜ் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடியில் மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாறுக் அவர்களின் காரியாலயத்தில் இடம்பெற்றது.  மாகாண சபை உறுப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டு சாதனை புரிந்த நாகராஜ் அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

  • ஜப்பானில் அடுத்தடுத்து மிகவும் சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள்

    டோக்யோ: ஜப்பானின் குவாமோட்டோ நகருக்கு அருகே இன்று சனிக்கிழமை அதிகாலை இரண்டு மிகக்கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. மிகவும் சக்தி வாய்ந்த 7.1 மற்றும் 7.4 அளவு கொண்ட இரண்டு நிலநடுக்கங்கள் அங்கு அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளன. தொடர்ச்சியான அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன. இதையடுத்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஒரு மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பக் கூடும் எனவும் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

  • ‘பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் இலங்கையர்களின் அளப்பரிய சேவை பாராட்டுக்குரியது’- டேவிட் கமரூன்

    லண்டன்: பிரிட்டனில் இலங்கையர்களின் பங்களிப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூன் புகழாரம் சூட்டியுள்ளார். பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் சிங்கள, தமிழ் இலங்கையர்களின் அளப்பரிய சேவை பாராட்டுக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

  • சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம்

    சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்டு சிறிது நேரத்தில் மீண்டும் சிங்கப்பூர் ஷேங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் மீண்டும் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது. யு.எல்.309 என்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமான நேற்று சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சற்று நேரத்தில் தரையிறக்கப்பட்டது.

  • முகநூலில் கேலிக்குள்ளான மகிந்த ராஜபக்ச (காணொளி)

    ஹம்பாந்தோட்டை: சமூக வலைத்தளங்கள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்சவின் பேஷ்புக் கணக்கின் ஊடாக புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க முயற்சித்து மீண்டும் கேலிக்குள்ளாகியுள்ளார். டெலி புரேம்டர் உதவியுடன் விமல் வீரவன்ஸ போன்றவர்கள் எழுதி கொடுக்கும் உணர்ச்சி பொங்கும் உரைகளை நிகழ்த்தினாலும், மகிந்த ராஜபக்சவினால் நேரடியாக சில வார்த்தைகளை கூட கோர்த்துப் பேச முடியாதுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிந்துள்ளது.

  • ‘பாதணி உற்பத்திகள் தரமானதாக இருந்தும் அதனை சந்தைப்படுத்த பாரிய சிக்கல்களை உற்பத்தியாளர்கள் எதிர் கொள்கின்றனர்’- ஷிப்லி

    M.T. ஹைதர் அலி காத்தான்குடி: தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் வீதிக்கு ஒருநாள் எனும் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்கும் வேலைத்திட்டதினூடக மக்களுடைய குறைகளை கண்டறியும் நடவடிக்கையின் பலனாக அதிகமான இளைஞர்கள் காத்தான்குடி பிரதேசத்தில் பாதணி கட்டும் தொழிலில் பிரதானமாக ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதை அறியக்கிடைத்துள்ளது.

  • தாறுஸ்ஸலாமின் முடிச்சு அவிழ்க்கப்படுமா? முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்குப் பகிரங்க மடல்

    தலைவர் அவர்களே! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் இறையடி எய்து 15 வருடங்கள் கடந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் கட்சி அடையாளச் சின்னமான தாறுஸ்ஸலாம் – சாந்தி இல்லத்தின் நிருவாகம் தொடர்பாக சில வினாக்களை உங்கள் முன் வைக்கின்றோம். இதற்குப் பதில் அளிப்பது உங்களின் தார்மீகக் கடமையும் கூட.

  • போதைப் பொருட்களுக்கு பதிலாக பாலாடையைக் கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள்

    லண்டன்: போதைப் பொருட்களை நுகர்ந்து கண்டுபிடிக்க வேண்டிய மோப்ப நாய்கள், விமானப் பயணிகளிடமிருந்து பாலாடைக்கட்டி மற்றும் பன்றிக்கறி சொசேஜ்களை மட்டுமே கண்டுபிடிக்கின்றன என்பதை ஒரு அறிக்கை கண்டறிந்துள்ளது. வடக்கு இங்கிலாந்திலுள்ள மன்செஸ்ட்டர் விமான நிலையத்தில் சட்டவிரோத போதைப் பொருட்களை கண்டறிய ஆறு உயர்ரக நாய்கள் உள்ளன.

←Previous Page
1 … 229 230 231 232 233 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar