‘பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் இலங்கையர்களின் அளப்பரிய சேவை பாராட்டுக்குரியது’- டேவிட் கமரூன்

david_cameronலண்டன்: பிரிட்டனில் இலங்கையர்களின் பங்களிப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூன் புகழாரம் சூட்டியுள்ளார். பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் சிங்கள, தமிழ் இலங்கையர்களின் அளப்பரிய சேவை பாராட்டுக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்களாகவும், தொழில் தருநர்களாகவும், பாடசாலை ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும் இன்னும் பல தொழில்துறைகளிலும், சேவைகளிலும் இலங்கைச் சமூகத்தினர் பிரித்தானியாவில் ஆற்றி வரும் சேவை போற்றத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என பிரதமர் கமரூன் தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இலங்கையின் முனைப்புக்களுக்கு பிரித்தானியா பூரண அளவில் ஆதரவினை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published by

Leave a comment