WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தங்களது சிறுநீரகங்களை விற்று அவுஸ்திரேலியா பயணிக்கும் அகதிகள்! அதிர்ச்சித் தகவல்!!

    இதேவேளை ஒவ்வொரு வருடமும் மனித உடலுறுப்புகளை பெற்றுக்கொள்வதற்காக இஸ்ரேல், மலேசியா, மாலைத்தீவு என்று பல நாடுகளின் சுமார் 1000 பொதுமக்கள், இலங்கைக்கு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது சிட்னி: அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் செல்வதற்காக இலங்கை அகதிகள், தமது சிறுநீரகங்களை விற்பனை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவின் நியூஸ்கோப் என்ற செய்திசேவை, இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக தாம் மேற்கொண்டு ஆய்வின்படி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த சேவை குறிப்பிட்டுள்ளது.

  • வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே தொடரப் பிரகடனம் வெளியீடு

    கல்முனை: உத்தேச அதிகாரப் பகிர்வில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே தொடர்ந்தும் இருக்க வேண்டும். என கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் ஓன்றியத்தினால் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி 24 மணி நேரத்திற்குள் கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் சம்மேளனம் இந்த பிரகடனத்தை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.

  • பசில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

    கொழும்பு: நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்படிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை பிணையின் கீழ் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திவிநேகும தினைக்கலத்திற்கு சொந்தமான சுமார் 36 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதியை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன் படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு போலீசாரால் பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.

  • கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் வயதெல்லையின்றி விண்ணப்பிக்கலாம் -முதலமைச்சரின் முயற்ச்சிக்குப் பலன்

    திருகோணமலை: கிழக்கு மாகாணத்தில் கடந்த வாரம் ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பட்டதாரிகளின் வயதெல்லை 35க்குள் மட்டுப்படுத்தப் பட்டிருந்தமை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மேற்கொண்ட அதிரடி முறைப்பாட்டு நடவடிக்கை தொடர்பில் சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளன என்று முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று தெரிவித்தார், தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்:

  • ரியோ ஒலிம்பிக்கில் பிரான்ஸ் நாட்டு வீரருக்கு கால் முறிந்த சோகச் சம்பவம்

    ரியோ: ரியோ ஒலிம்பிக்கில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரருக்கு கால் முறிந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேசில் நாட்டில் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். அது போல ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டி ரியோ மாநகரில் நடைபெற்றது.

  • “இந்தியாவின் அழுத்தங்களால் தான், கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த வேண்டியேற்பட்டது”

    அரசாங்கம் முதல்முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறது கொழும்பு: இந்தியாவின் அழுத்தங்களால் தான், கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த வேண்டியேற்பட்டது என்ற உண்மையை, தற்போதைய அரசாங்கம் முதல்முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில், இடைநிறுத்தப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை, மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ள போதிலும், இதுவரை அந்தப் பணிகள் தொடங்கப்படவில்லை.

  • காத்தான்குடி பாவா ஒழுங்கை புனரமைப்பு

    M.T. ஹைதர் அலி காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள பாவா ஒழுங்கையினை புனரமைப்பு செய்வதற்காக கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் அவ்ஒழுங்கை உள்வாங்கப்பட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. இவ்ஒழுங்கையானது பல வருட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக கற்கள் நிறைந்து காணப்படுகின்றது. மழை காலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக அப்பகுதி மக்களும் அவ்ஒழுங்கையினை பயன்படுத்துகின்றவர்களும் பல்வேறு இடர்களுக்கும், அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர்.

  • அட்டாளைச்சேனையில் நடைபெற்ற கார் ஓட்டப்போட்டி

    சப்னி அஹமட் அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை பிரதேசத்தில் SOUTHERN MOTOR SPORTS CLUB இன் RALLY SRI LANKA – 2016 இற்கான கார் ஓட்டப் பந்தய நிகழ்வின் இறுதி நிகழ்வும் (07) இடம்பெற்றது. நேற்று (06) ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வும் அம்பாரை மாவட்டம் தமணைப் பிரதேசத்திலிருந்து 8 ஆம் கட்டை வழியாக ஆலம்குளச் சந்தியிலிருந்து திரும்பி ஆலம்குளம், கொச்சிக்காச்சேனை, சம்பு நகர், முல்லைத்தீவினூடாக புதிய அட்டாளைச்சேனை பிரதேசத்தை மாலை வந்தடைந்து இன்று நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றது.

  • கிழக்கு மாகாண சபையின் ஆசிரியர் நியமன வயது வரம்பில் சர்ச்சை

    திருகோணமலை: கிழக்கு மாகாண சபையினால் புதிதாக நியமனம் பெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு அநீதி இழக்கப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் உட்பட பல்வேறு தரப்பினராலும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 – 35 என பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான வயது எல்லை வரையறுக்கப்பட்டுள்ளதால், நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கும் தகுதியை இழந்துள்ளனர்.

  • “அரசியல் கைதிகளை விடுதலை செய்வது காலத்தின் கட்டாயம்”- ஹிஸ்புல்லாஹ்

    கொழும்பு: எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி பல வருட காலமாக சிறைச்சாலைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளை நிபந்தனையின் அடிப்படையிலாவது விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை கோரி நாளை திங்கட்கிழமை கொழும்பு மற்றும் யாழ்ப்பாண பகுதிகளில் இருவேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

  • அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்

    பா.திருஞானம் நுவரெலியா: வெளிமாவட்ட மாணவர்களை இறுதி நேரத்தில் அனுமதித்தமை தொடர்பில் அதிபர்களை விசாரணைக்கு உட்படுத்துவது போல அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

  • தமிழ்- முஸ்லிம்கள் பேசித் தீர்க்க வேண்டியவை எவை?

    எம்.ஐ. முபாரக் தமிழ்- முஸ்லிம் மக்களுக்குப் பெரும் ஆபத்தாக விளங்கி வந்த மஹிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும் தமக்கு இருக்கின்ற பிரச்சினைகள் அனைத்தையும் புதிய அரசின் ஊடாகத் தீர்த்துக்கொள்வதற்கான முயற்சியில் இன்று அந்த மக்கள் ஈடுபட்டுள்ளனர். அரசால் கொண்டு வரப்படவுள்ள அரசியல் தீர்வு தமது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு பொறிமுறையாக இருக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகின்றனர். இந்த வருடத்துக்குள் அரசியல் தீர்வு வழங்கப்படும் என அரசு அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

←Previous Page
1 … 180 181 182 183 184 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar