Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • வெளிநாட்டுப் பயணங்களில் ஜனாதிபதியாக மாறும் மகிந்த

    கொழும்பு: கடந்த காலங்களில் ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த தற்போது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராகவே பதவி வகிக்கின்றார். அரசியல் யாப்பின்படி அதி உயர் பதவியை வகித்த ஒருவர் கீழ்நிலை பதவிக்கு தள்ளப்படும் போது, அவர் வகித்த அதி உயர் பதவிகளின் வரப்பிரசாதங்களும் சேர்ந்தே இழக்கப்படும் என்பதே உண்மை. ஜனாதிபதி பதவியினை இழந்த பின்னரும் விமானப் பயணங்களை மேற்கொள்ளும் போது தன்னை ஓர் ஜனாதிபதியாக பாவனை செய்துகொள்ளும் மஹிந்தவிற்கு வெளிநாடுகள் உயர்ந்த வரவேற்பினையே கொடுக்கின்றது.

  • டெல்டா விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட முஸ்லிம் தம்பதி

    AF-90 பரீஸ்: அமெரிக்காவை சேர்ந்த முஸ்லிம் தம்பதி சந்தேகத்திற்கிடமான வகையில் செயல்படுவதாக விமான பணிப் பெண் கூறிய புகாரையடுத்து அவர்கள் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டு தலைநகர் பரீசிலிருந்து அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்திலுள்ள சின்சின்னாடி விமான நிலையத்திற்கு டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பவிருந்தது. அவ்விமானத்தில் பைசல் அலி மற்றும் அவரது மனைவி நசியா ஆகியோர் தங்களது இருக்கையில் அமர்ந்து செல்போனை பார்த்துக்கொண்டிருந்தனர். நசியா தனது பெற்றோருக்கு தாங்கள் புறப்பட்ட தகவலை எஸ்எம்எஸ் மூலம்…

  • கைதாகியிருந்த தனது அணு விஞ்ஞானிக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றம்!

    தெஹ்ரான்: கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கைது செய்து சிறை வைக்கப்பட்டிருந்த ஈரான் அணு விஞ்ஞானிக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிய வந்துள்ளது.ஈரானின் அணு திட்டங்கள் பற்றி ஆழமாக அறிந்திருந்ததாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்ற ஷாக்ராம் அமிரி என்பவர், 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து ஈரான் திரும்பியபோது, பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்.

  • பிரத்தியேக வகுப்புக்கு செல்லும் மாணவிகளுக்கான பஸ் சேவை மக்களின் கருத்தினை கோருகின்றார் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

    M.T. ஹைதர் அலி காத்தான்குடி: காத்தான்குடியில் இருந்து மட்டக்களப்பு நகரத்திற்கு பிரத்தியோக வகுப்பிற்காக சனி ஞாயிறு தினங்களில் செல்லுகின்ற பெண் மாணவிகளுக்கு பிரத்தியேகமாக (விசேடமாக) ஒரு பேரூந்து சேவை ஒன்றினை நடாத்துவதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆலோசித்து வருகின்றார்.

  • “தலைக்கவசம் பாவிப்பது எங்களுக்கல்ல, உங்களின் பாதுகாப்புக்காகவே அணியச் சொல்கின்றோம்”

    எம். எச். எம் அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் குற்றச்செயல்களை குறைக்கவும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காட்டி பொலிசாரின் உதவியுடன் அக்குற்றச் செயல்களை தடுப்பதற்காகவும் சிவில் குழுக்கழுடன் கலந்துரையாடலும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி 165 ஏ பிரிவில் சிவில் பாதுகாப்பு குழுவின்தலைவர் எம் ஐ எம் ஹாரிஸ் தலைமையில் இடம்பெற்றது.

  • கம்ப்யூட்டர் கீபோர்டில் உள்ள F மற்றும் J-யில் மட்டும் கோடு இருப்பது ஏன்?

    – SHM லண்டன்: கம்ப்யூட்டர் கீபோர்டில் இம்மாதியான கோடு கடந்த 15 வருடங்களாகத் தான் உள்ளது. இதற்கு முன்பு அப்படி ஒன்றும் இருத்ததில்லை.கம்ப்யூட்டர் கீபோர்டின் F மற்றும் J-யில் உள்ள கோடு, ஒருவர் வேகமாக டைப் செய்வதற்காக அமைக்கப்பட்டது ஆகும். இரண்டு கையிலும் உள்ள ஆள்காட்டி விரலை இந்த F மற்றும் J-யின் மீது வைத்து டைப் செய்வது தான் டைப்பிங் செய்வதன் சரியான நிலையாகும். சரியான நிலையில் வைத்து டைப் செய்தால் பார்க்காமல் டைப் செய்யலாம்.

  • ரங்கன ஹேரத்தின் அசத்தலான ஹட்ரிக்

  • இரு கால்களும் செயலிழந்த நிலையிலும் பட்டதாரியான இளைஞர்

    கொழும்பு: இரு கால்களும் செயலிழந்த நிலையில், பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர் ஒருவர் அங்கு தனது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு முகாமைத்துவ, வர்த்தகத்துறை பட்டதாரியாகியுள்ளார். மாத்தறை தெலிஜ்ஜவில என்ற இடத்தைச் சேர்ந்த கசும் சாமர என்ற இந்த இளைஞர் தனது பட்டப்படிப்பை ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்திலேயே தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.

  • 7 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு

    நுவரெலியா: மலையகத்திலுள்ள பெருந்தோட்டம் ஒன்றின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க இந்த தீர்ப்பை வழங்கினார். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் உடன் பிறந்த சகோதரர்கள். ஏனைய மூன்று பேரும் இரு சகோதரர்களின் பிள்ளைகள் என தெரிவிக்கப்படுகின்றது.

  • மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கு புதிய அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் நியமனம்

    M.T. ஹைதர் அலி மீராவோடை: மட்டு மாவட்டத்தின், கல்குடாத்தொகுதியின், மீராவோடை கிராமத்தில் அமைந்துள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக டொக்டர் எம்.எச்.எம். முஸ்தபா அவர்கள் கடமையாற்றி வருகின்றார். வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்களின் பெயர் விபரம்

  • பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான (WEDF) அமைப்பினால் விதவைகளுக்கான நோய் நிவாரணக் காப்புறுதித் திட்டம்

    WEDF காத்தான்குடி: பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான (WEDF) அமைப்பினால் விதவைகளுக்கான நோய் நிவாரணக் காப்புறுதித் திட்டம் நேற்று அமுல்படுத்தப்பட்டது. இது கடந்த 2015 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இம் முறை இரண்டாவது தடவையாக நடைபெறுகின்றது. இந்த திட்டமானது அமானா தகாபுல் நிறுவனத்துடன் இணைந்து விதவைகள் , நோயாளிகள் , 65 வயதுக்கு உட்பட்டவைத்தியசாலையில் தங்கி இருந்து வைத்தியம் பெறுபவராக இருந்தால் ஒரு நாளைக்கு ரூபாய் 1000 வீதம் வருடம் ஒன்றிற்கு ரூபாய் 25,000 வரையிலும் அதேபோன்று வைத்தியசாலை…

  • மைத்திரி,மஹிந்த, சந்திரிகா மூவரையும் ஒரே மேடையில் கொண்டுவரும் கனவு தோல்வி

    கொழும்பு: மாகாண சபைத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா குமாரணதுங்க ஆகிய மூவரையும் ஒரே மேடையில் கொண்டுவரும் எமது கனவு இனிமேலும் மெய்படும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லையென அதன் பொதுச் செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.

←Previous Page
1 … 181 182 183 184 185 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar