அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • பா.திருஞானம்

nuwara eliya schoolநுவரெலியா: வெளிமாவட்ட மாணவர்களை இறுதி நேரத்தில் அனுமதித்தமை தொடர்பில் அதிபர்களை விசாரணைக்கு உட்படுத்துவது போல அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நுவரெலியா மாவட்டத்தில் வெளிமாவட்ட மாணவர்களை இறுதி நேரத்தில் பாடசாலையில் உள்வாங்கி அவர்களுக்கு க.பொ.த உயர்தரத்தில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை தொடர்பில் அதிபர்களை விசாரணைக்கு உட்படுத்தினால் மட்டும் போதாது சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் விசாரணைக்கு உடபடுத்த வேண்டும்.

நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குறித்த கல்வி வலயத்திற்கு சென்று வலய கல்விப்பணிபாளரிடம் ஒரு நீ;ண்ட பட்டியலை கையளித்தேன்.அந்த பட்டியலில் வெளிமாவட்ட மாணவர்கள் தொடர்பாக அனைத்து தகவல்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இது தொடாபாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டிருந்தேன் ஆனால் குறித்த அதிகாரி இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளையோ அல்லது விசாரணகளையோ முன்னெடுக்கவில்லை.அவர்களும் கண்டும் கானாதது போலவே நடந்து கொண்டார்கள்.அப்படியானால் எனக்கு ஒரு சந்தேகம் ஏற்படுகின்றது இந்த அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பார்களோ என்று?.

nuwara eliya school

எனவே அதிபர்களை மாத்திரம் விசாரணக்கு உட்படுத்தாமல் அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்தி அவர்கள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இந்த விடயம் தொடர்பாக நுவரெலியாவில் தமிழ் சிங்கள பெற்றோர்கள் அனைவரும் ஒன்று சோந்து ஒரு போராட்டத்தை நடாத்தினார்கள்.அதன் பின்பு வெளிமாவட்ட மாணவர்களை நுவரெலியா பாடசாலைகளில் உள்வாங்கும் விடயம் கைவிடப்பட்டிருந்தது.ஆனால் மீண்டும் அந்த நிலை ஏற்பட்டிருப்பதானது எமது மலையக மாணவர்களின் கல்வியில் மீண்டும் பாதிப்பை எற்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s