-
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மலேசியா அரசினால் உயரிய விருது
பெராக்: மலேசியாவின் பெராக் நகரில் நடைபெற்ற PANGLOR DIALOGE AWARD-2016 விருது வழங்கும் நிகழ்வில் மலேசிய அரசினால் வழங்கப்படும் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தித் துறையில் முதன்மையானவர் (Master class in Education & Community Development) எனும் உயரிய சிறப்பு விருது புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
-
அவுஸ்திரேலிய அணி உலக சாதனை
கண்டி: இருபது 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை ஒன்றை படைத்துள்ளது. இலங்கை அணிக்கு எதிராக நேற்று (6) கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி தமது இருபது ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ஓட்டங்களை எடுத்து இந்தச் சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் கென்ய அணிக்கு எதிராக இலங்கை அணி ஒரு போட்டியில் பெற்றிருந்த 260 ஓட்டங்களே இருபது 20 சாதனையாக இருந்தது.
-
குர்ஆன் கற்றுகொடுக்கும் இந்து மாணவி
ஆக்ரா: உத்தரபிரதேசத்தின் ஆக்ராவின் சஞ்சய் நகர் பகுதியில் பூஜா குஷ்வாஹா என்ற 18 வயது நிரம்பிய இந்து சிறுமி குரான் கற்பித்து வருகின்றமை பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கல்லூரி மாணவியாகிய பூஜா மாலை நேரங்களில் குரான் வகுப்பு எடுத்து வருகிறார். அவரிடம் அப்பகுதியில் 35 இஸ்லாமிய குழந்தைகள் குரான் கற்று வருகின்றனர். பூஜாவால் குரானில் இவ்வளவு பாண்டித்யம் பெற முடிந்தது எவ்வாறு என்று வினவியபோது,பல ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம் ஒருவர், இந்து பெண்ணை திருமணம் செய்தார்.
-
எப்பையா வருவீங்க – குப்பையை அகற்ற…?
எப்பையா வருவீங்க குப்பையை அகற்ற ஊரெல்லாம் நாறுது உடலுக்கு ஊறு இது. உக்காத குப்பையை ஊட்டுக்குள் வைக்கட்டாம். கக்காவுடன் பம்பர்ஸை கட்டி வெச்சிருக்காங்க.
-
உள்ளுராட்சி எல்லை நிர்ணயம் தெல்தோட்டைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்
சமூக அபிவிருத்தி ஒன்றியம் பிரதமர், அமைச்சருக்கு கடிதம் தெல்தோட்டை: உள்ளுராட்சி எல்லை நிர்ணயம் மேற்கொள்ளும் போது தெல்தோட்டை வாழ் சிறுபான்மை மக்களுக்கு பாரிய அநீதி ஏற்படவுள்ளதாகவும் அதனால் இவ்விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தி தெல்தோட்டை சமூக அபிவிருத்தி ஒன்றியம் இரு தரப்புக்கும் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
-
ஒரு கோடி 20 இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடி வைத்தியசாலைக்கு நவீன மருத்துவ உபகரணங்கள்
காத்தான்குடி: 100 மில்லியன் ரூபா செலவில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரனையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) ஆகியவற்றுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு வரும் நிலையில், ஒரு கோடி 20 இலட்சம் ரூபா பொறுமதியான மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான மற்றுமொரு ஒப்பந்தம் mg medicals (pvt)ltd நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ளது.
-
சண்டித்தனம் செய்யும் வர்த்தகர்களுக்கு ஒழுக்கம், பண்பாடுகளை கற்றுக் கொடுக்க சாய்ந்தமருது வர்த்தகர் சங்கம் முன்வருமா?
சாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள சில நட்டாமுட்டிகளினால் முழு ஊருக்கும் அபகீர்த்தி ஏற்படுவதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான ஒரு செயற்பாடு காரணமாகவே கல்முனை மாநகர சபையில் கடந்த இரண்டு தினங்களாக கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. யாராக இருந்தாலும் ஒழுக்க வரையறைக்குட்பட்டு பேசவும் தர்க்கிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
-
உயர் ஸ்தானிகர் இப்ராஹீம் ஸாஹிப் அன்ஸார் மீதான தாக்குதல் சகல தரப்புக்களாலும் வன்மையாக கண்டிக்கப் படுதல் வேண்டும்
கலாநிதி மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் முன்னாள் ஜித்தாவிற்கான கொன்ல்ஸ ஜெனரல் மலேஷியாவிற்கான இலங்கைத் உயர் ஸ்தானிகர் இப்ராஹீம் ஸாஹிப் அன்ஸார் மீதான காடையர்களின் தாக்குதல் சகல தரப்புக்களாலும் வன்மையாக கண்டிக்கப் படுதல் வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு இராஜதந்திரியின் கௌரவம் மதிக்கப்படல் வேண்டும், எதிரியின் தேசத்திற்குள்ளும் ஒரு தூதுவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது சகல உலக நாகரீகங்களினதும் வழக்காறாகும்.
-
சிகா வைரஸ்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு
கொழும்பு: நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைத்து பயணிகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சோதனைக்கு உட்படுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் சிகா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், அதனை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவித்துள்ளன.
-
அல்-ஹிறா வித்தியாலயத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்கு சென்ற பொறியியலாளர் ஷிப்லி
எம்.ரீ. ஹைதர் அலி காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், முதலமைச்சர் நசீர் அஹமட் இடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைவாக காத்தான்குடி மட்/மம/அல்-ஹிறா வித்தியாலயத்தின் புனரமைப்பு பணிகளுக்காக 10 இலட்சம் ரூபா மாகாண சபையினூடாக நிதியொதிக்கீடு மேற்கொள்ளப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
நான்கு இலட்சம் அபராதம் விதிக்கப்படும் புதிய சட்டம் சவுதியில் அமுல்படுத்தப்படுகிறது
றியாத்: சவுதி அரேபியாவில் பணிபுரியும் சகலருக்கும் புதிய சட்டதிட்டங்கள் அந்நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய சவுதியில் தொழில் செய்யும் பணியாளர்கள் தாம் பணிபுரியும் இடங்களில் இருந்து தொழிலாளர் அனுமதிப்பத்திரத்துடன் சட்டவிரோதமாக பாய்ந்து சென்று மீண்டும் தமது சொந்த நாடுளுக்கு திரும்புவதன் பொருட்டு அதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற 4 இலட்சம் தண்டப் பணம் செலுத்த வேண்டும் என்பதே அந்தப் புதிய சட்டமாகும்.
-
சு.கவின் எதிர்கால பயணத்துக்கு சிறுபான்மை சமூகம் முழுமையான பங்களிப்பு வழங்கும்
கொழும்பு: 65ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால பயணத்துக்கு வடக்கு – கிழக்கு மற்றும் அதற்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை சமூகம் முழுமையான ஒத்துழைப்பு – பங்களிப்பை வழங்கும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.