Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுறுவிய 17 வயது மாணவன் கைது

    கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய 17 வயதுடைய பாடசாலை மாணவனை குற்றப்புலனாய்வு பிரிவின் கணிணிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைப்பிரிவினர் இன்று (29) கைதுசெய்துள்ளனர்.

  • கிழக்கில் சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த ஹிஸ்புல்லாஹ்விடம் விசேட பொறுப்பு

    கொழும்பு: கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கான விசேட பொறுப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சிப் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கையளித்துள்ளனர்.

  • 18 வயது இளைஞனை காதலித்து மணந்து கொண்ட 5 குழந்தைகளின் தாய்

    கோலாலம்பூர்: மலேசியாவின் பியூபோர்ட் பகுதியை சேர்ந்தவர் மொசுத்சுபி அலின்(18). இவர் அதே பகுதியை சேர்ந்த சோபியா குஸ்டி (42) என்ற பெண்ணை கடந்த செவ்வாய் கிழமை திருமணம் செய்துள்ளார். இது குறித்து சுபி அலியின் தந்தையான அலின் கூறியதாவது, இவர்கள் இருவரும் தங்களின் சொந்த முடிவை மேற்கொள்வதற்கு போதிய அளவு முதிர்ச்சி பெற்றுள்ளனர். சோபிய குஸ்டி தனது மகனை காதலித்துள்ளார். திருமணத்திற்கு முன்பு அவர் தன் மகனிடம் மனம்விட்டு பேசியுள்ளார்.

  • நிர்வாணக் கடற்கரையில் உனக்கென்ன வேலை..!

    M. Jalees (UK) பரிஸ்: பிரான்ஸின் உல்லாச ஓய்விட நகரில் சர்ச்சைக்குரிய புர்கினி முழு நீள நீச்சல் உடைக்கான தடையை பிரான்ஸின் உயரிய நிர்வாக நீதிமன்றம் இடைநிறுத்தம் செய்திருப்பதன் மூலம் சுமார் 30 பிரெஞ்சு மேயர்கள் அந்த நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சிவில் உரிமைகளின் அடிப்படையில் கடந்த  வெள்ளிக்கிழமை அன்று வீல்நோவ் லூபெய் நகரில் நடைமுறையாகி வரும் புர்கினி முழு நீள நீச்சல் உடைக்கான தடையை இடைநிறுத்தம் செய்வதாக பிரான்சின் உயரிய நிர்வாக…

  • காத்தான்குடியிலேயே மிக அகலமான கொங்கிறிட் வீதியாக அமையவுள்ள டெலிகொம் வீதியை செப்பனிடுதல் தொடர்பான கலந்துரையாடல்

    எம். எச். எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி டெலிகொம் வீதியை செப்பனிடுதல் தொடர்பான கலந்துரையாடல் (நேற்று28) கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாறுக் தலைமையில் அவரின் காரியாலயத்தில் இடம்பெற்றது. புதிய காத்தான்குடி பதுறியா ஜூம்ஆப்பள்ளிவாயல் மற்றும் அதன் கீழுள்ள சிறிய பள்ளிவாயல் நிருவாகத்தினரும் அப்பகுதியிலுள்ள சமூக விளையாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.

  • சீனாவுக்கு கைமாறிய ஸ்ரீலங்கன்

    கொழும்பு: ஸ்ரீலங்கன் விமான சேவையானது தனியார் நிறுவனத்திடம் கையளிப்பதன் பொருட்டு அரசானது ஹய்னேன் நிறுவனத்துடன் கலந்துரையாடுவதற்கான காரணம் இந்த நிறுவனமானது சலுகைகள், நிபந்தனைகளின் கீழ் விமான சேவையின் நிர்வாகத்தை பொறுப்பேற்பதற்கு இணங்கியமையே காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  • கல்முனை அலியார் வீதியை காபட் பாதையாக புனரமைப்பு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட ஆறு கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது?

    கல்முனை: கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித புனரமைப்புமின்றி, பள்ளம், படுகுழிகளுடன் படுமோசமாக காட்சியளிக்கின்ற கல்முனை அலியார் வீதியை காபட் பாதையாக புனரமைப்பு செய்வதற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சென்ற அரசாங்கத்தினால் சுமார் ஆறு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வீதியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

  • காத்தான்குடி ‘டெலிகொம்’ வீதி அபிவிருத்தி இழுபறி: இனியென்ன செய்வது..? – பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

    NFGG ஊடகப் பிரிவு காத்தான்குடி: மக்களுக்கு மிக அத்தியவசியமான மற்றுமொரு அபிவிருத்தி விடயம் துரதிஸ்டவசமாக மீண்டுமொரு அரசியல் இழுபறியாக மாறிக் கொண்டிருக்கிறது. காத்தான்குடி பிரதான வீதிக்கு அடுத்த மிக முக்கியமான வீதிகளில் ஒன்றான டெலிகொம் வீதி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் ஆகியோருக்கிடையிலான அதிகாரப் போட்டியாக மாறியிருப்பது துரதிஸ்டவசமானதாகும்.

  • கொழும்பு துறைமுக நகரம் நிதி நகரமாக மாற்றம்!

    கொழும்பு: கொழும்பு கடலை சுற்றி நிர்மாணிக்கப்படும் நிதி நகரத்தில் வெளிநாட்டு நாணயங்களை பயன்படுத்தி கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு அமெரிக்கா டொலர்களுக்கு மேலதிகமாக ஸ்ரெலிங் பவுண்ட், ஜப்பானின் யென், இந்திய ரூபாய்கள், யூரோ உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தில் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ள இலங்கையர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

  • ஸ்ரீ ரங்காவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

    கொழும்பு: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவினால் செலுத்தப்பட்ட வாகனம் வீதியை விட்டு விலகி மதில் மேல் மோதியதில், அவருக்கு பாதுகாப்பிற்காக சென்ற பொலிஸ் கான்ஸ்டபில் உயிரிழந்தார். விபத்துக்குள்ளான வாகனம் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிலினால் செலுத்தப்பட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து. விபத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் ரங்கா கைது செய்யப்படவுள்ளார்.

  • மும்பையின் பிரபல தர்காவில் கருவறைக்குள் பெண்கள் நுழைவதற்கான தடை ரத்து

    மும்பை: மும்பையில் உள்ள பிரபல ஹாஜி அலி தர்காவில் கருவறைக்குள் பெண்கள் நுழைய கூடாது என்ற தடையை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஹாஜி அலி தர்கா வழிபட்டு தலத்தில் உள்ள தடையானது பெண்கள் மீது பாரபட்சம் காட்டுவதாகவும், அரசியல் சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தடை கொண்டுவரபட்டது. ஆண் துறவிகளின் சமாதியை பெண்கள் தொட அனுமதிப்பது ‘கடுமையான பாவம்’என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

  • பல கோணங்களில் தொடரும் விசாரணை

    கொழும்பு: பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்தத்கர் ஸாகிப் கொலை தொடர்பில் பொலிஸாரின் விசாரணை வேறு கோணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேகாலை பிரதேசத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பிற்கமைய இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் குழுக்களின் அவதானம்திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 173 174 175 176 177 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar