-
கம்பி எண்ணிய கோத்தபாய
கொழும்பு: அவன்கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுத களஞ்சியத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய காரணத்திற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை 30/09 நடைபெற்றது. இதன் போது சந்தேகநபரான கோத்தபாய ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எனினும் பிணை வழங்கப்படும் வரையில் நீதிமன்றில் கைதிகளை தடுத்து வைக்கும் கூண்டில் கோத்தபாய தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
-
வெளியேறும் இந்தியா – பாக். எல்லைகளில் வசிக்கும் கிராமவாசிகள்
பஞ்சாப்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே வசிக்கும் கிராமவாசிகள், இருநாடுகள் இடையேயான உறவு மேலும் மோசமாகும் என்பதால் தங்கள் வீடுகளைவிட்டு உடமைகளுடன் வெளியேறி வருகின்றனர். இவர்களை போன்று பாகிஸ்தானிலும் எல்லையோரம் வசிக்கும் கிராமவாசிகள் தங்கள் வீடுகளை காலி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
“இந்திய திரைப்படங்களை திரையிடப் போவதில்லை”
கராச்சி: பாகிஸ்தானில் முக்கிய திரையரங்குகள் இந்தியப் படங்களை திரையிடப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளன. இரு நாடுகளுக்கிடையே ராணுவ பதற்ற நிலை அதிகரித்ததை அடுத்து, பாகிஸ்தானின் ராணுவத்துக்கு ஆதரவாக தாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அவை கூறுகின்றன. லாகூர், கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய பெரு நகரங்களில் இந்தியப் படங்களுக்குத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
“மக்களின் நலன் கொண்டதாகவே அபிவிருத்திகள் இடம்பெற வேண்டும்”- பொறியியலாளர் ஷிப்லி
எம்.ரீ. ஹைதர் அலி காத்தான்குடி: கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நஸீர் அஹமட் பணிப்பின் பேரில் அவரின் பங்குபற்றுதலுடன், காத்தான்குடி நகரசபையின் எல்லைக்குள் செய்யப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பான விடயங்களை கலந்துரையாடும் பொருட்டும் கல்விமான்கள், மதத்தலைவர்கள் உட்பட அனைத்து துறைசார்ந்தவர்களையும் உள்ளடக்கியதாக புதிய அபிவிருத்தித் திட்டமிடல் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டும் அபிவிருத்திக் குழு அங்குரார்ப்பண கூட்டமொன்று அன்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
அமெரிக்காவின் நியூ ஜெர்சி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மோதி விபத்து
நியுஜேர்சி: அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில்இ ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பல பயணிகள் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளுர் நேரப்படி வியாழக்கிழமை காலை 8.40 மணிக்கு ஹோபோகன் ரயில் நிலையத்தில் வேகமாக வந்த பயணிகள் ரயில், கட்டுப்பாட்டை இழந்து ரயில் நிலையம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
-
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த முதலாவது கார் கப்பல்
கொழும்பு: மோட்டார் வாகனங்களை காவிச் செல்லும் பாரிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.பாரிய அளவு மோட்டார் வாகனங்களுடன் “ஸ்ப்ரிங் ஸ்கை” என்ற கப்பலே கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது. இது மோட்டார் வாகன போக்குவரத்துக்கு (Car Carrier) மாத்திரமே பயன்படுத்தப்படும் கப்பலாகும்.
-
“தாக்குதல்களைத் தொடரும் திட்டம் இல்லை”-இந்தியா
ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தை ஒட்டிய, கட்டுப்பாட்டுக் கோடு அருகே பயங்கரவாதிகளின் இயங்குதளங்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக, இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் ரன்பிர் சிங் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அந்தத் தாக்குதல் நடவடிக்கை புதன்கிழமை இரவு இடம் பெற்றதாகவும், அது நிறைவடைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
-
அமானுல்லாஹ் வீதி வடிகான் புனரமைப்பிற்காக 17 இலட்சம் ரூபா நிதி ஒதிக்கீடு
காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் முயற்சியினால் கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமானுல்லாஹ் வீதி வடிகான் புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த திங்கள் (26.09.2016) இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கெளரவ ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், ஏனைய அதிதிகளாக நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் இணைப்பாளர் ULM.…
-
University of Ceylon: வாழ்நாளில் ஒரு தடவையேனும் போய்ப் பார்த்துவிட வேண்டும்
இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்று தேவை என உணரப்பட்ட காலப்பகுதியில், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தின் இறுதிப்பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்றினை நிறுவுவதற்கான சிறந்த இடமொன்றைத் தேர்வு செய்ய ஒரு குழு அமைத்த போது நீதியரசர் அக்பர் அவர்களின் பரிந்துரையின் பெயரில் பேராதெனிய நகரில் தும்பர பள்ளத்தாக்கில் ஹந்தானை மலைச்சாரலில் அமைப்பதற்காக இடம் தேர்ந்தெடுக்கப் பட்டது.
-
டுபாய் விமான நிலையத்தை அரை மணிநேரம் மூடவைத்த மர்ம விமானம்
டுபாய்: உலகின் மிகவும் சுறுசுறுப்பான டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே இன்று காலை பறந்த ஆளில்லா மர்ம விமானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பீதியால் அரை மணி நேரத்துக்கு விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாள்வதன் மூலம் உலகின் மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம் விளங்கி வருகிறது.
-
இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட அதி விலையுயர்ந்த கார் இதுதான்
கொழும்பு: இலங்கையில் பிரபலங்களுக்காக இறக்குமதி செய்யப்பட்ட கார்களுள் அதி உயர்விலையுடைய கார் இதுதான். ‘ரோல்ஸ் ரொய்ஸ்’- “ரெய்த்” ரக கார் (என்ஜின் அளவு 6.6) ஒன்றே இலங்கையில் முதன் முதல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது
-
ஜாமியுழ்ழாபிரீன் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா 2016
ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பாலர்பாடசாலையின் விளையாட்டு விழா ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் பொறியியலாளர் ஏ.எம் தௌபீக் தலைமையில் (25.09.2016 ஞாயிற்றுக்கிழமை) காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மைதானத்தில் இடம் பெற்றது நிகழ்வின் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்து கொண்டார்.