WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “காத்தான்குடி இளைஞர் சமுதாயமும் போதைப் பாவனையும்” – ஜூம்ஆ குத்பா

    “சில இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி வந்ததும் அவர்களை பரிசோதிக்கும் போது போதையில் இருப்பதை உறுதிப்படுத்த முடிகிறது” நமது பிரதேச மாணவர்களதும் இளைஞர்களதும் ஒழுக்க, கலாசார விழுமியங்களை மீளக்கட்டியமைக்கும் வகையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 28.10.2016ம் திகதிய இடம்பெறவுள்ள குத்பா பிரசங்கத்தை குறித்த தலைப்பிலே முழுமையாக இடம்பெறச் செய்வதற்காக அன்றையதினம் குத்பா பிரசங்கம் மேற்கொள்ளவுள்ள கதீப்களுக்கு இது தொடர்பான விடங்களை எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் தெளிவுபடுத்தும் ஒரு செயலமர்வு ஜம்இய்யாக் காரியாலயத்தில் 26.10.2016ம் திகதி இஷாத் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.…

  • வருவாயில் முதல் சரிவை அறிவித்தது அப்பிள் நிறுவனம்

    நியுயோர்க்: அப்பிள் நிறுவனம் 2001 ல் இருந்து தனது ஆண்டு வருவாயில் ஏற்பட்ட அதன் முதல் சரிவை அறிவித்துள்ளது. முந்தைய இரண்டு காலாண்டுகளில் உள்ள போக்கை, அமெரிக்க நிதியாண்டில், கடந்த காலாண்டின் முடிவுகள் உறுதிப்படுத்தின. வருவாய் ஒன்பது சதவீதிற்கும் குறைவானதாக இருந்தது.வளரும் சந்தை என்று பார்க்கப்பட்ட, சீனாவில் இருந்து வரும் வருமானம் இதை விடப் பெரிய அளவிலான சதவீதத்தில் சரிந்தது.

  • புத்தர் சிலையில் கால்வைத்ததால் ரொனால்டோ மீது இரசிகர்கள் அதிருப்தி!

    லிஸ்பென்: போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ புத்தர் சிலை ஒன்றின் மீது கால்வைத்த நிலையில் புகைப்படம் ஒன்றை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார். புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள தொட்டியொன்றில் தனது காலை வைத்திருப்பது போன்ற புகைப்படமொன்றை தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

  • மகிந்தவைவிட மைத்திரியின் செலவு அதிகமானது

    கொழும்பு: நாடாளுமன்றத்தில் நேற்று  2017ம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட ஒதுக்கீட்டு வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் ஜனாதிபதியின் உத்தேசிக்கப்பட்ட செலவீனம் 6.45 பில்லியன் ரூபாவாகும். இது 645 கோடி ரூபாவுக்கும் அதிகமானதாகும். 2016 ஆம் ஜனாதிபதியின் உத்தேசிக்கப்பட்ட செலவீனம் 2.3 பில்லியனாகும். இம்முறை அது மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • விமானம் தாமதமானால் இழப்பீடு பெறுவதற்குரிய இலகு வழி அறிமுகம்

    லண்டன்: விமானம் தாமதமானால் அதற்கான இழப்பீட்டு தொகையை பெறுவதற்கு வசதியாக தற்போது ஒரு புதிய மொபைல் அப்ளிகேஷன் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அந்த அப்ளிகேஷனின் பெயர் airFair version 1.1 ஆகும். ஐரோப்பிய நாடுகளுக்குள் மேற்கொள்ளப்படும் பயணங்களில் விமானம் தாமதமாக புறப்பட்டால் அல்லது சேர வேண்டிய இடத்திற்கு தாமதமாக சென்றால், இந்த அப்ளிகேஷன் மூலம் இழப்பீடு கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதை பயணிகள் உறுதி செய்துக்கொள்ளலாம்.

  • ஶ்ரீலங்கனாக மாறும் மிஹின்லங்கா

    கொழும்பு:  மிஹின்லங்கா விமான சேவை பெயர்மாற்றம் செய்யப்பட்டு ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. விமானங்களில் மிஹின் லங்கா எனப் பெயர் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் வர்ணப்பூச்சுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

  • இணையத்தில் பிரபலமாகி வரும் பாகிஸ்தானின் வசீகர டீ விற்பனையாளர்

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு எளிமையான மார்க்கெட் ஸ்டோலில் டீ விற்பவராக வேலைபார்க்கும் , அழகிய தோற்றம் கொண்ட அர்ஷத் கான் என்பவரின் இயல்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி, பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இஸ்லாமாபாத்தில் தேநீரை போட்டுக்கொண்டே, தனது கவர்ச்சி மிகுந்த நீலமும் பச்சையும் கலந்த நிறம் கொண்ட கண்களை கொண்டு கேமராவை முறைப்பது போல் அந்த புகைப்படத்தில் அவர் தோன்றுகிறார்.

  • மீலாத் விழா ஆங்கில பேச்சுப் போட்டியில் கல்முனை பாலிகா மாணவி ஷைரின் முதலிடம்!

    அஸ்லம் மௌலானா கல்முனை: தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு கல்வி அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய, கலாசார திணைக்களம் என்பன இணைந்து நடத்திய ஆங்கில மொழி மூல பேச்சுப் போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (பாலிகா) மாணவி பாத்திமா ஷைரின் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று, தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

  • தனது இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது சவுதி!

    றியாத்: சவுதி அரேபியத் தலைநகர் ரியாதில் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு வாய்ச்சண்டையில் ஒருவரை சுட்டுக்கொன்றதற்காக, சவுதி அரேபிய இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, உள்துறை அமைச்சகம் கூறியது. இளவரசர் துர்க்கி பின் சௌத் அல்-கபீருக்கு ரியாதில் நிறைவேற்றப்பட்ட இந்த மரண தண்டனை எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டோர் பொதுவாக சிரச்சேதம் செய்யப்படுவது வழக்கம்.

  • தனிமையில் அந்நியவருடன் பயணித்த முஸ்லிம் பெண்ணின் மரணம்! உணர்த்தும் உண்மைகள்!!!

    மருதமுனை: மருதமுனை பிரன்ஞ்சிட்டி வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த ஆதம்பாவா சித்தி ஜஹிறா (வயது 27) என்ற பெண்னே உயிரிழந்தவராவார் இவர் ஒரு பிள்ளையின் தாயான நிலையில் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இப்பெண் சில மாதங்களாக கொழும்மில் உள்ள ஆடைத் தொழில்சாலையொன்றில்  மேற்பார்வையாளராக தொழில் புரிந்து வந்துள்ளார் இந்த நிலையிலேயே கடந்த 2016-10-13ஆம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு ரயிலில் பயனித்துள்ளார்.

  • “புதிய கட்சி ஒன்று அமைப்பதற்கு முன்னர் பவித்ராவுக்கு நான் எவ்வாறு பதவி வழங்க முடியும்?”-மஹிந்த

    கொழும்பு: அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிளவு பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியினர் பற்றிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கூட்டு எதிர்க்கட்சி என பிரகடனம் செய்துள்ளதுடன், அதிகாரங்களை பெற்றுக்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

  • பாலஸ்தீன தூதரகம் அமைக்க கொழும்பில் காணி வழங்கியமைக்கு பாலஸ்தீன அமைச்சர் நன்றி தெரிவிப்பு

    – ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் கொழும்பு: இலங்கைக்கான பாலஸ்தீன தூதரகமனது தற்பொழுது வாடகை கட்டத்தில் இயங்கி வருகின்றமையினாலும் எதிர்காலத்தில் பாலஸ்தீனத்திற்கும் இலங்கைக்கைக்கும் இடையிலான நட்புரவினை மேலும் கட்டி எழுப்பும் நோக்கத்தின் அடிப்படையில் இலங்கைக்கான பாலஸ்தீன தூரகமானது தனது சொந்த கட்டிடத்தில் செயற்படு முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவினால் பாலஸ்தீன அரசாங்கத்திற்கு கொழும்பு 7ல் பெருமதிமிக்க 15 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டிருந்தது.

←Previous Page
1 … 160 161 162 163 164 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar