“காத்தான்குடி இளைஞர் சமுதாயமும் போதைப் பாவனையும்” – ஜூம்ஆ குத்பா

“சில இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி வந்ததும் அவர்களை பரிசோதிக்கும் போது போதையில் இருப்பதை உறுதிப்படுத்த முடிகிறது”

jammiyya 2நமது பிரதேச மாணவர்களதும் இளைஞர்களதும் ஒழுக்க, கலாசார விழுமியங்களை மீளக்கட்டியமைக்கும் வகையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 28.10.2016ம் திகதிய இடம்பெறவுள்ள குத்பா பிரசங்கத்தை குறித்த தலைப்பிலே முழுமையாக இடம்பெறச் செய்வதற்காக அன்றையதினம் குத்பா பிரசங்கம் மேற்கொள்ளவுள்ள கதீப்களுக்கு இது தொடர்பான விடங்களை எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் தெளிவுபடுத்தும் ஒரு செயலமர்வு ஜம்இய்யாக் காரியாலயத்தில் 26.10.2016ம் திகதி இஷாத் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது. அச்செயலமர்வின்போது வழங்கப்பட்ட குத்பா உரைக் குறிப்புக்கள்.

போதைப்பொருள் பாவனையும் முஸ்லிம் இளைஞர்களும் அல்குர்ஆன் வசனம்

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (5:90)

انَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ‌ ۚ فَهَلْ اَنْـتُمْ مُّنْتَهُوْن

நிச்சயமாகத் தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (5:91)
அல் ஹதீஸ்
رواه مسلم في صحيحه عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: كُلُّ مُسْكِرٍ خَمْرٌ، وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ.
‘போதையை ஏற்படுத்தும் அனைத்தும்; மதுபானமாகும். அனைத்து மதுவும் ஹராமாகும்.’ (முஸ்லிம்)

அறிமுகம்

• இன்று வளர்ந்து வரும் உலகில் பல்வேறுபட்ட பிரச்சினைகளில், மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம்பெறுகின்றது. இதில் குறிப்பாக படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சினை பலராலும் பேசப்படுகின்றது.

• பாடசாலைக்குச் சென்று பல்கலைக்கழகம் முடித்து பட்டதாரிகளாக வருவதற்குப் பதிலாக போதைக்கு அடிமையாகி பரிதாபகரமாக காட்சித் தருகிறார்கள்.

• மாணவர்கள் தங்களது இளமைப் பருவத்தில் நடாத்தும் அட்டகாசங்களைப் பற்றி சிந்திக்கிறார்களே தவிர அதனால் ஏற்படும் விபரீதங்களைப் பற்றி சிந்திப்பதில்லை. இதன் விளைவாகவே போதைக்கு ஆளாகுகின்றார்கள்.

• எந்தவொன்றையும் அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் சில நேரம் அவர்களது அழிவுக்கே காரணமாகி விடுகின்றது.

காத்தான்குடி இளைஞர் சமுதாயமும் போதைப் பாவனையும்

• காத்தான்குடி மாணவர் சமுதாயம் மற்றும் இளைஞர் சமுதயாயமும் இதற்கு விதிவிலக்கல்ல. சில உதாரணங்கள்.

• மாணவர்கள் மத்தியில் இன்று போதை கலந்த மாத்திரைகள் அறிமுகமாகி வருகின்றது இதில் பெற்றார்களும் ஆசிரியர்களும், சிறுவர் அபிவிருத்திக்காக வேலை செய்யும் உத்தியோகத்தர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

• காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் 30.06.2016 காத்தான்குடியில் ஆறாம் குறிச்சி டீன் வீதியில், கஞ்சா கட்டு வைத்திருந்த ஒருவரை மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் நேற்று (18.7.2016) மாலை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

• இதேவேளை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் காத்தான்குடி கர்பலா வீதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞர் கஞ்சாவுடன் நடமாடுவதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து தடுப்புப்பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து, 4340 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுளார். சந்தேக நபரான இளைஞர் 18 வயதான காத்தான்குடியை சேர்ந்தவர் எனவும், மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சில சம்பவங்கள்

வைத்தியர் ஒருவரின் கருத்து :

‘சில இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி வந்ததும் அவர்களை பரிசோதிக்கம் போது போதையில் இருப்பதை உறுதிப்படுத்த முடிகிறது’

‘வெள்ளிக்கிழமை மறறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆரையம்பதி, மண்முனைத்துறை மற்றும் கல்லடி மதுபானச் சாலைகளில் அதிகம் கொள்வனவு செய்பவர்களாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள்’

இலங்கையிலும் உலகிலும் போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்டு வரும் விளைவுகள்

• இலங்கையில் தினமும் 80 பேர் போதைப்பொருள் பாவனையால் மரணமடைகின்றனர். அதில் 60 பேர் புகையில பாவனையினால் மரணம்.

• வருடத்துக்கு சுமார் 20000 பேர் உயிரிழக்கின்றனர்.

• சுகாதார அமைச்சின் மொத்தச் செலவில் 1/3 பங்கு போதை வஸ்து சம்பந்தமான நோய்களுக்கே செலவிடப்படுகிறது. வருடாந்தம் சுமார் 12000 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

• புற்றுநோய் அபாய நாடுகளில் ஆசியாவில் இலங்கைக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. வருடம் ஒன்றுக்கு இலங்கையில் 2600 பேர் வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

• தினமும் உலகில் சுமார் 15 பில்லியன் சிகரட்கள் உலகில் புகைக்கப்படுகின்றன. இதனால் சுமார் 300 பில்லியனுக்கும் அதிகமான ரூபாய்கள் வீண்விரயம் செய்யப்படுகிறது.

• வருடாந்தம் புகைத்தல் தொடர்பான நோய்களினால் 2.5 மில்லியன் மக்கள் வயதாவதற்கு முன்னதாகவே இறப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவிக்கிறார்.

• அதாவது ஒவ்வொரு 13 வினாடிகளுக்கும் ஒரு மரணம் இதன் மூலம் சம்பவிக்கிறது.

• மற்றுமோர் ஆய்வின்படி புகைப்பதனால் தினமும் 300 பேர் கொல்லப்படுகிறார்கள்.
• இன்னுமோர் ஆய்வின்படி தினமும் இரண்டு சிகரெட்டுக்கு மேல் புகை பிடிப்பவர்களில் நான்கில் ஒருவர் வயதாவதற்கு முன்பே இறக்கிறார்.

• 90% க்கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய், புகைப்பிடிப்பதனால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

• தொண்டை அல்லது வாய்ப்புற்று நோய் அபாயத்தை புகைப்பிடித்தல் தோற்றுவிக்கிறது.

• மேலும் புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் உணவுக்குழல், இரைப்பைப் புற்றுநோயினால் இறக்கும் அபாயம் அதிகம் இருக்கிறது.

• புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஆகியவற்றாலும் தாக்கப்படும் ஆபத்தும் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.

• புகைப்பிடித்தல் இதய நோய்களுக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது. புகைக்கப்படும் சிகரெட்டின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் தீவிரமடைகிறது.

• சிகரெட்டில் நிகோடின் அடங்கலான 4000 கேடு விளைவிக்கும் இரசாயனப் பொருட்கள் இருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது.

போதைப் பொருள் பாவனை குறித்த இஸ்லாமிய நிலைப்பாடு

• மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதை பாவனைக்கு ஆளாகுவதற்குப் பிரதான காரணங்களாக வீட்டுச் சூழல், சமூக சூழல், குடும்பப் பிரச்சினை, போட்டி சூழலுக்கு முகம்கொடுக்க முடியாமை, மீடியாக்களின் தாக்கம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். குறிப்பாக சினிமாக் கலாசாரம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியள்ளது.

• எல்லா போதைப் பொருட்களும் தீமை பயக்கவல்லவை. அவற்றை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

• போதைப்பொருட்கள் பாவிப்பது இஸ்லாத்தில் முற்றிலும் ஹராம். அது பெரும்பாவங்களில் ஒன்றாகம். உலகிலும் மறுமையிலும் அதற்கு தண்டணையுண்டு.

• ஜாஹிலிய்யாக்கால மக்கள் மதுபானப் பிரியர்களாக இருந்தனர். இஸ்லாம் மதுபானத்தை கட்டம் கட்டமாக, படிப்படியாக தடைசெய்து, இறுதியில் மதுப் பழக்கத்தை முற்றாக ஒழித்தது. ஆரம்பத்தில் மதுபானத்தில் உள்ள நன்மைகளை விட தீமைகள் அதிகம் என்று அல்குர்ஆன் கூறியது. அடுத்த கட்டமாக போதையுள்ள நிலையில் தொழுகைக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தது. மூன்றாம் கட்டமாக ஸுரா அல்மாயிதாவின் 90, 91ஆம் வசனங்கள் இறங்கின:

• அல்லாஹதஆலா இந்த இரு வசனங்களிலும் மதுபானத்தையும் சூதாட்டத்தையும் ‘pர்க்குடன் இணைத்துக் குறிப்பிட்டுள்ளான். அறுவருக்கத்தக்க செயல்கள் என்றும் வர்ணிக்கின்றான். மதுவையும், சூதையும் தவிர்ப்பதை வெற்றிக்கான வழி என்றும் கூறுகின்றான். மேலும் இவை இரண்டின் மூலமாகவும் ஏற்படும் சமூக ரீதியான தீங்குகள் என, உறவுகள் அறுக்கப்படுவதையும், பகைமையும் வெறுப்பும் தோன்றுவதையும் குறிப்பிட்டுள்ளான். மேலும் திக்ர், தொழுகை முதலான ஆன்மீக சன்மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக இவை இரண்டும் அமைகின்றன எனக் கூறி இவற்றினால் விளையும் ஆன்மீகக் கேடுகளையும் அல்லாஹ் விளக்குகின்றான்.
• இந்த அல்குர்ஆன் வசனங்களை நம்மில் எந்தளவு தாக்கம் செலுத்தியுள்ளது. நபித் தோழர்கள், இந்தக் கட்டளையை செவிமடுத்தவுடன் மதுக் கிண்ணங்களை கையில் வைத்துக் கொண்டிருந்தோர் அப்படியே அவைகளை தரையில் தூக்கி எறிந்தார்கள். வீதிகளில் இருந்த மதுபானப் பீப்பாக்களை உடன் கொட்டி வீதிகளில் ஓடவிட்டார்கள். ஆனால் நமத நமது சமுதாயத்தில் போதைப்பாவனை குறைந்தபாடில்லை.

• இஸ்லாம் மதுபானத்தை ஹராமாக்கியுள்ளமைக்கான காரணம் அது போதையை ஏற்படுத்துகின்றது என்பதாகும். எனவே, ஒரு பானம் எந்தப் பொருளில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் சேர்மானங்கள் எதுவாக இருந்தாலும் அது போதையை ஏற்படுத்தும் என்றிருந்தால் அது ஹராமாகக் கொள்ளப்படும்.

• ஒரு முறை நபியவர்களிடம் தேன், அல்லது பார்லி அல்லது கோதுமை முதலானவற்றில் தயாரிக்கப்படும் ஒருவகை மதுபானம் பற்றி வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள்,; பின்வருமாறு கூறினார்கள்: ‘போதையை ஏற்படுத்தும் அனைத்தும் ‘கம்ர்’ எனும் மதுபானமாகும். அனைத்து ‘கம்ரும்’ ஹராமாகும்’ (முஸ்லிம்)

• மேலும் அதிக போதை ஏற்படுத்தக்கூடிய மதுபானங்கள் மட்டுமன்றி குறைவாகப் போதையைக் கொடுப்பவையும் ஹராமானவையாகும். இதுபற்றி நபி மொழி ஒன்று பின்வருமாறு கூறுகின்றது. ‘அதிக போதை ஏற்படுத்தக் கூடியதை குறைவாக உட்கொள்வதும் ஹராமாகும்’ (அஹ்மத், அபூதாவுத், திர்மிதி).

• போதைப்பொருள்; பாவிப்பது மட்டுமன்றி அதை விற்பனை செய்வதும் ஹராமானதாகும். ஒரு முஸ்லிம் போதைப்பொருள் உற்பத்தி செய்யவோ, விற்கவோ, விற்கும் இடத்தில் வேலை செய்யவோ முடியாது. மதுபானம் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள், அதனை வடிப்பவர், விற்பவர், வாங்குபவர், குடிப்பவர், சுமப்பவர் உட்பட மதுபானம் பரிமாறப்படுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களிப்புச் செய்யும் பத்துப் பேரை சபித்தார்கள். இது தொடர்பான ஹதீஸ், ஸுனன் திர்மிதி, ஸுனன் இப்னுமாஜா ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

• இன்று வேறு பெயர்களில் போதைவஸ்துக்கள் பரிமாறப்படுகின்றன. போதை மாத்திரகைள், உற்சாக பானங்கள், பியர்கள் என பாவிக்கப்படுகின்றன. இவற்றில் குறைந்த பட்சம் சிறிதளவு மதுசாரமாவது (யுடஉழாழட) உண்டு என்பதை மறுக்க முடியாத காரணத்தினால் அதனை அருந்த ஆகுமான பானமாகக் கொள்ள முடியாது. ஒரு குடிவகை சமூகத்தில் மதுபானமாகக் கருதப்படுவதில்லை என்பதை வைத்து, அதற்கு அங்கீகாரம் வழங்க முடியாது. இதனையிட்டு நபி (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு எச்சரித்துள்ளார்கள்

‘எனது சமூகத்தில் சிலர் மதுபானம் அருந்துவர், ஆனால், அதனை அவர்கள் வேறு பெயர் கொண்டு அழைப்பவர்களாக இருப்பர்’ (நஸாஈ)

• நோய்களுக்கு மருந்தாகவும் மதுபானத்தை, போதைப் பொருட்களை பாவிக்க முடியாது. அடிப்படையில் போதைப்பொருட்களை மருந்தாகப் பயன்படுத்துவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

• ஒருமுறை ஒருவர் தான் மருந்துக்காக மதுபானம் தயாரிப்பதாகக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்: ‘அது மருந்தல்ல. உண்மையில் அது நோயாகும்’ என்றார்கள். (முஸ்லிம்)

• மற்றொரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:
‘அல்லாஹ் நோயையும் அதற்கான மருந்தையும் இறக்கியுள்ளான். எனவே, மருந்து உபயோகிப்பீர்களாக. ஹராமானதைக் கொண்டு சிகிச்சை பெறாதிருப்பீர்களாக’ (அபூதாவூத்)

போதைப் பொருட்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:

‘அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக்கியவற்றில் (நோய்களுக்கான) நிவாரணத்தை அமைத்து வைக்கவில்லை’ (புகாரி)

• மதுபானத்தைப் போலவே கஞ்சா, அபின், ஹெரோய்ன் போன்ற போதை வஸ்துக்களும் ஹராமானவையாகும்.

• மதுபானம் அருந்தியவருக்கு இஸ்லாமிய சட்டத்தின் படி (ஹத்) தண்டனை நிறைவேற்றப்படும். 40 கசையடிகள் மதுபானம் அருந்தியவருக்கு வழங்கப்படும். ஏனைய போதைவஸ்துக்களை பாவிப்போருக்கும் இதே தண்டணை வழங்கப்பட வேண்டும். மதுபாவனை அதிகரித்த போது உமர் (ரழி) அவர்கள் 80 கசையடிகள் தண்டணை வழங்கினார்கள்

• الخمر أم الخبائث என உஸ்மான் (ரழி) குறிப்பிட்டார்கள்.

• மேலும் ஹெரோயின் போன்ற மிக ஆபத்தான போதைப் பொருட்களை கடத்துபவர்கள், வியாபாரம் செய்பவர்கள், ஆகியோருக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்பது நவீன கால இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் பத்வாவாகும்.

• போதை வஸ்து பாவனையாளர்களுக்கு மறுமையிலும் தண்டணை
قد روى الشيخان من حديث عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: ‘من شرب الخمر في الدنيا ثم لم يتب منها حرمها في الآخرة’

• புகைப்பிடித்தல் பற்றிய தற்கால ஷரீஅத் நிலைப்பாடு ஹராம் என்பதாகும். புகைத்தல் ஹராமானது என்பதற்கு நியாயமான பல காரணங்களைக் காணமுடிகிறது. புகையிலை, நிகொடின் என்பன போதையை ஏற்படுத்தக் கூடியன. சோர்வு, உடல் நலக் கேடு ஏற்படுவதால் நம்மை நாமே அழிவுக்குட்படுத்துவதை இஸ்லாம் தடுத்துள்ளது. புகைப்பிடித்தல் ஒரு வகையில் தற்கொலைக்குச் சமமானது. தற்கொலை இஸ்லாத்தில் ஹராம்.
ولا تلقوا بأيديكم إلى التهلكة ). سورة البقرة 195)

‘உங்களை நீங்களே கொல்ல வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகவும் அன்புடையோனாக இருக்கின்றான்’ (அந்நிஸா: 25)

• புகைப்பழக்கத்தினால் புகைப்பவர் மாத்திரமன்றி அருகிலிருப்போரும் பாதிக்கப்படுகின்றனர். சூழலை மாசுபடுத்துகின்றனர். எனவே நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு பதில் சொல்வதோடு பல மனிதர்களுக்கும் பதில் சொல்ல வேண்டி ஏற்படும்.

• போதைப்பொருளுக்கான செலவு வீண்விரயமாகும். வீண்விரயம் செய்வது ஹராமாகும்.
‘வீண் விரயம் செய்யாதீர்கள், ஏனெனில் மிதமிஞ்சிச் செலவு செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்கள்’

• போதைவஸ்துப் பாவனையால் இன்று விபத்துக்களும் அதிகரித்துள்ளன. இதனால் அடுத்த மனிதர்களின் உரிமைகளில் கைவைக்கும் நிலமை உருவாகியுள்ளது.
எனவே நம் இளைஞர் சமுதாயத்தை இந்த கொடிய போதை எனும் நோயிலிருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.

அந்த வகையில்

பெற்றோரின் கடமை என்ன?

சமூக நிறுவனங்களின் கடமை என்ன?

பள்ளிவாயல்களின் கடமை என்ன?

என்பதை தெளிவுபடுத்துவோம்…

தஃவா, நல்லிணக்கம் மற்றும் கல்விக்குழு.
ஜம்இய்யதுல் உலமா, காத்தான்குடி.
26.10.2016

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s