பாலஸ்தீன தூதரகம் அமைக்க கொழும்பில் காணி வழங்கியமைக்கு பாலஸ்தீன அமைச்சர் நன்றி தெரிவிப்பு

– ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

palestine_flag[1]கொழும்பு: இலங்கைக்கான பாலஸ்தீன தூதரகமனது தற்பொழுது வாடகை கட்டத்தில் இயங்கி வருகின்றமையினாலும் எதிர்காலத்தில் பாலஸ்தீனத்திற்கும் இலங்கைக்கைக்கும் இடையிலான நட்புரவினை மேலும் கட்டி எழுப்பும் நோக்கத்தின் அடிப்படையில் இலங்கைக்கான பாலஸ்தீன தூரகமானது தனது சொந்த கட்டிடத்தில் செயற்படு முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவினால் பாலஸ்தீன அரசாங்கத்திற்கு கொழும்பு 7ல் பெருமதிமிக்க 15 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டிருந்தது.

குறித்த 15 பேர்ச்சஸ் காணி ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டமை சம்பந்தமாக பாலஸ்தீன் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் றியால் அல்-மல்கி தனது நன்றியினை இலங்கை சோசலிச குடியரசின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனவிற்கு தெரிவித்ததோடு பாலஸ்தீன தூதரம் கட்டுவதற்காக குறித்த காணியானது இலங்கை அரசாங்கத்தினதும், ஜனாதிபதியின் அனுமதியும் கிடைக்க பெறுவதற்கு முக்கிய காரணமாய் இருந்த பாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் பெளசான் அன்வருக்கும் தனது நன்றியினை தெரிவித்து கொண்டார்.

குறித்த பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சரின் நன்றி செலுத்தும் நிகழ்வானது பாலஸ்தீனத்திற்காக உத்தியோகபூர்வ விஜயத்தினை மெற்கொண்டிருக்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உடனான இலங்கை பாராளுமன்ற குழுவினரை சந்தித்த வேலையிலே இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் குறித்த நிகழ்வில் உரையாற்றிய பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சர். இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான நட்புரவானது பல தசாப்பதங்காளாக இருந்து வருவதாகவும், பாலஸ்தீன மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களுடைய அடிப்படை உரிமைகள் இஸ்ரேலிய அரசாங்கத்தினால் சூரையாடப்பட்டு வருகின்றமைக்கு எதிரான கருத்துக்களையும், இராஜதந்திர ரீதியான எதிர்ப்புக்களை ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்து வருகின்றமைகு நன்றி செலுத்தும் முகமாக இலங்கை அரசாங்கத்தினையும் மக்களையும் ஞாபகப்படுத்தி கொள்வதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு அமைச்சர் ராஜித சேனாரத்ன குழுவினருக்கு பாலஸ்தீனத்தில் தற்பொழுது இடம் பெற்று வருக்கின்ற இஸ்ரேலிய இராணுவத்தின் அத்து மீறல்கள், ஆக்கிரமிப்புக்கள் சம்பந்தமாக அதிகளவான விளக்கமளிகபட்டதுடன், முஸ்லீம்களை பொறுத்தவரையில், சவூதி அரேபியாவில் மக்கா, மதினா மசூதிகளுக்கு அடுத்து, ஜெருசலாத்தில் உள்ள அல் அக்சா மசூதி திகழ்கிறது என தெரிவித்தார். ஜெருசலேத்தின் பழைய நகரின் மூலை முடுக்குகள் எல்லாம், இஸ்ரேலிய காவல்துறையும், இராணுமும் இரவு பகலாக கடமையில் குவிக்கப்பட்டு பாலஸ்தீன மக்கள் அடக்கு முறைக்குள் தள்ளப்பட்டு கொண்டே வருக்கின்றனர்.

இஸ்ரேலியர்கள் எப்பொழுதும் அபாயகரமான போர் சூழலினை உருவாக்கி விட்டு அதிலிருந்து தாங்கள் நினைப்பதினை சாதிக்க நினைக்கின்றார்கள். பாலஸ்தீனியர்களுக்கு அளிக்கப்படும் மிருகத்தனமான கொடுரம் பற்றி மனிதன் என்ற ரீதியில் அவர்கள் சிந்திப்பதில்லை. அவர்கள் சமாதானத்தை விரும்புவர்களாக உலகிற்கு காட்டிக்கொண்டு அனைத்துப் புறங்களிலும் இராணுவ கவச வாகனங்களும், போர் உருவாகுவதற்கான அடாவடித்தனங்களை தளமாகக் கொண்ட கட்சிகளைத்தான் பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேலியர்கள் திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார்கள். ஒட்டு மொத்த பாலஸ்தீன நிலத்தினை சுவீகரித்துக் கொள்வதே அவர்களுடைய. முக்கிய நோக்கமாகவும் நிலைப்பாடாகவும் இருகின்றது.

பாலஸ்தீனமக்களின் வாழ்க்கையினை பார்ப்போமானால் அங்குள்ள பள்ளிவாசல்கள் அடிக்கடி இஸ்ரோலின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.. கைத்தொழில் செய்பவர்கள், சிறிய மூலதனத்தில் தொழில் செய்பவர்கள், மீன் பிடிப்பவர்கள், சிறு பாத்திகளில் விவசாயம் செய்பவர்கள், குண்டுகள் விழுந்து நொறுங்கும் கட்டிடங்களின் இடிபாடுகளை எல்லைப் பகுதிக்கு எடுத்து வந்து, மீண்டும் அதனைக் கட்டிடம் கட்டும் கச்சா பொருளாக மாற்றுபவர்கள் என பலதப்பட்ட தொழில்களைச் செய்பவர்கள் அனைவரும்பாதிகப்பட்டே காணப்படுகின்றனர். வியாபாரிகள் ஆயிரக்கணக்கில் சுரங்கம் அமைத்து, அது வழியாகத்தான் எல்லாப் பொருட்களையும் இங்கு எடுத்து வருகிறார்கள். எகிப்து – ரஃபா பக்கம் இருக்கும் சுரங்கத்தின் வாயிலில் உள்ளே நுழையும் பொருள், காஸாவுக்கு வரும்பொழுது அதன் விலை பல மடங்காக உயர்கிறது. ‘சுரங்கம் வெட்டுதல்’ அங்கு ஒரு மிகப்பெரும் தொழிலாகவே உள்ளது. இந்தச் சுரங்களின் மீது கூட ஏவுகணைத் தாக்குதல் நடப்பது மிகவும் சகஜமானது.

அதேபோல் இங்கு மின்சாரம்தான் பெரும் தட்டுப்பாடான விஷயம். மின்சாரத்தை மிக கவனமாகவே செலவிடுகிறார்கள். இங்கு பல மணிநேரம் மின்வெட்டு உள்ளது. ஹமாஸ் தேர்தலில் வெற்றிபெற்ற அடுத்த நாள், காஸாவின் முக்கிய மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. எகிப்து, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளில் இருந்துதான் பெரும் விலை கொடுத்து மின்சாரமும், எண்னையும் வாங்கப்படுகின்றது. உலகம் முழுவதிலிருந்தும் இங்கு ஏராளாமான குழுக்கள் பலவித நிவாரணப் பொருட்களைக்கொண்டு வந்து தந்தாலும், இங்கு எவருக்கும் கட்டுமானப் பொருட்களையோ, மின்சாரம் தயாரிக்கும் ஜெனரேட்டர்களையோ எடுத்துச் செல்ல முடியாதபடி தடை விதிக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் இங்குள்ள பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும் பெரிய அளவில் சிதைக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் கல்வித்துறைகளில் அம்மக்களுக்கு ஏதேனும் உதவிகள் கிடைக்காதா என்று கனவு காணுகின்ற நிலைமே எங்கள் மத்தியில் முக்கிய விடயமாக காணப்படுகின்றது.

மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகம் ஆகியவை பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. பல்கலைக் கழகங்களின் ஆய்வுக் கட்டிடம் தான் இஸ்ரேலிஅ இராணுவத்தின் முதன்மை இலக்கு. மருத்துவமனைகளும் அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்தது இல்லை. படுக்கை வசதிகள் இல்லாததால், ஏராளமான நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டிய பலர் மருந்துகளும், கருவிகளும் இல்லாததால் தினமும் செத்து மடிகிறார்கள். உயிர் காக்கும் பலவகை மருந்துகள் தொடர்ந்து இல்லை அல்லது பற்றாக்குறையாகவே உள்ளது. ஆனால் அங்குள்ள மருத்துவர்களும் செவிலியர்களும், பிற ஊழியர்களும், இராணுவ வீரர்கள் போல் சுறுசுறுப்புடன் பணியாற்றுகிறார்கள். இலட்சக்கணக்கானவர்களுக்கு மருத்துவ உதவி கிடைத்தால் இன்னும் கொஞ்ச காலம் நிம்மதியாக வாழ்ந்து மடிவார்கள்.

அரபு நாடுகள் பல விதங்களில் பிளவுபட்டு கிடப்பதுதான் இஸ்லாமைச் சூழ்ந்துள்ள பெரும் நெருக்கடியாக நான் பார்க்கிறேன். அமெரிக்க ஏகாதிபத்தியமும், ஐரோப்பாவும் வளைகுடா நாடுகளை ஒரு சந்தையாக மட்டுமே பாவித்து வருகின்றன. அமெரிக்கா எண்ணெய்கான யுத்தம் என்பதை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஜனநாயகத்துடன், மக்களுக்கான அடிப்படை உரிமைகளுடன் திகழ வேண்டிய நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் கைப்பாவைகளாக அரசுகளை நிறுவி, கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைப்படித்தான் இந்தப் பகுதி மாற்றி மாற்றி அடுக்கப்படுகிறது.

ஏற்கனவே மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளின் அடிப்படையில், நான் பயணித்த நாடுகளில் எல்லாம், பாலஸ்தீன் பிரச்சினை என்பது அவர்களின் சொந்தப் பிரச்சினையகவே கருதப்படுகிறது. எனவே இலங்கைக்கும் பால்ச்தீனத்தீனத்திற்கும் பல தசாப்தங்களாக இருந்து வருக்கின்ற நட்புறவின் அடிப்படையிலும் தற்பொழுது இலங்கையில் உருவாகக்பட்டுள்ள புதிய அரசாங்கம் சம்பந்தமாக உலகலாவிய ரீதியில் இருக்கின்ற நம்பிக்கை மற்றும் வெளி நாட்டு கொள்கை திட்டமிடலின் ஊடனான சர்வதேச காய் நகர்த்தல்கள் போன்ற விடயங்களின் அடிப்படையில் பாலஸ்தீனத்திற்கான தூதரகம் இலங்களியில் அமைப்பதற்கு இலங்ககை அரசாங்கத்தினல் காணி வழங்கப்பட்டுள்ளமையானது மேலும் இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான நட்புறவினை வலுப்படுத்ய்தும் என தெரிவித்தார் பாலஸ்தீன வெளிவிவகா அமைச்சர் டாக்கர் றியால் அல்-மலீக்கி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s