-
அமரதேவவின் உடலை சுமந்து சென்ற ஜனாதிபதி
கொழும்பு: கொழும்பில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் காலமான டபுள்யு.டி.அமரதேவவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைக்கப்பட்டது. பொரள்ளையிலுள்ள தனியார் மலர்சாலையிலிருந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கி வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது உடல் கொண்டு வரப்பட்டது.
-
மலையக மக்களும் GSP + சலுகையும்
முஸ்லிம்களின் திருமண சட்டத்தை மாற்றினால் தான் GSP + என்று சொல்லும் ஐரோப்பிய அரசு மலையக மக்களுக்கு 1000 ரூபா கொடுக்கவேண்டும் மற்றும் வீடு கல்வி போன்ற வசதிகள் செய்து கொடுக்கவேண்டும் என்றும் அப்படி கொடுக்காவிட்டால் GSP + தருவதில் சிக்கல் உண்டு என்று ஏன் சொல்லவில்லை?
-
ஜனாஸா அறிவித்தல்
காத்தான்குடி 5, சுலைமான் மோதினார் ஒழுங்கையைச் சேர்ந்த யூசுப் ஆலிம் என அழைக்கப்படும் மௌலவி கே.எம்.யூசுப் பஹ்ஜி (92) இன்று (4-11-2016) வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்). அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் சனிக்கிழமை (05-11-2011) காலை 8மணிக்கு காத்தான்குடி 5ம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆப்பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
-
கராபிட்டிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு 700 மில்லியன் சேகரித்த மஹேல
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவின் முயற்சியால், தென்பகுதி நகரான காலியிலுள்ள கராப்பிட்டிய மருத்துமனையில் புற்று நோய்ப்பிரிவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
-
சமூகம் அல்லது மக்கள் இல்லை என்றால் பொலிஸ் சேவையானது இல்லை: மட்டு -மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கருணாநாயக்க
பழுலுல்லாஹ் பர்ஹான் ஆரையம்பதி: சமூகம் அல்லது மக்கள் இல்லை என்றால் பொலிஸ் சேவையானது இல்லை என மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யூ.பி.ஏ.டி.கே.கருணாநாயக்க தெரவித்தார். பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் நடமாடும் பொலிஸ் காவலரனை ஆரையம்பதி ராஜதுரை கிராமத்தில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-
வற் வரி- மக்களுக்கு பாதிப்பா?
கொழும்பு: வற் (VAT)வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பன (1) முதல் அமுலுக்கு வருகின்றன. கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இதற்கான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனடிப்படையில் முன்பு 11 சதவீதமாக இருந்த வற் வரி, 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
ஓர் புகழ்பெற்ற நடிகையின் இறுதித் தருணம் (படிப்பினைக்காக…)
நிஷா.. இவர் பெயரைக் கேட்டாலே இளவட்டங்கள் குஷி ஆகிவிடுவார்கள். கமல்,ரஜினி துவங்கி சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா.. சிவராஜ் குமார் , விஷ்ணுவர்தன் சன்னிதியோல், கோவிந்த, அணில் கபூர் என ஐந்து மொழிகளில் பட்டையை கிளப்பியவர் நிஷா. கமலுக்கு இவர் மிகவும் ராசியான நாயகி. டிக்டிக்டிக் துவங்கி நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.உட்கார நேரமின்றி பறந்து கொண்டே இருந்தார்..!
-
’’பாம்புகளின் தலைகள் வெட்டப்படும்’’ – ஈராக் பிரதமர்
மொசூல்: மொசூல் நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை எதிர்த்து, கடும் போர் நடத்தி வருகின்ற ஈராக் சிறப்பு படைப்பிரிவுகள் மொசூல் புறநகர்ப் பகுதிகளில் நுழைந்துள்ளன. ஏவுகணை குண்டு தாக்குதல்கள், மோர்ட்டர் மற்றும் சிறிய ஆயுதக் குண்டு தாக்குதல்களோடு, தற்கொலை கார் குண்டு தாக்குதல்களையும் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நடத்தி வருகிறார்கள்.
-
வரலாறு படைத்த வங்கதேச அணிக்கு சங்கக்கார பாராட்டு
கொழும்பு: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த வங்கதேச அணிக்கு குமார் சங்கக்காரா பாராட்டு தெரிவித்துள்ளார். இங்கிலாந்து- வங்கதேசம் அணிகள் மோதிய 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. இதில் 108 ஓட்டங்களால் வெற்றி பெற்ற வங்கதேசம் முதன் முறையாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. இதனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 1-1 என கணக்கில் சமன் செய்ததது.
-
வட்சப்பில் பாலியல் அவமானத்துக்கு ஆளான பெண் தற்கொலை
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் பல நன்மைகளை அடைந்துள்ள போதும், சம அளவில் தீமைகளும் வளர்ந்து வருகின்றன அதில் பெரும்பாலானவை பெண்களையே பாதிக்கின்றன. குறிப்பாக பாலியல் குற்றங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகின்றன.
-
அஷ்ஷேஹ் .A.C.அகார் முஹம்மத் அவர்கள் பயணித்த கார் கெலிஓய பகுதியில் விபத்துக்குள்ளானதில் அவரது மனைவி காலமானார்
கொழும்பு: அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதி தலைவரும், பேருவளை ஜாமியா நழீமியா கலாபீட பிரதி தலைவரும் இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் முக்கியஸ்தருமான அஷ்ஷேஹ் .A.C.அகார் முஹம்மத் அவர்கள் பயணித்த கார் கெலிஓய பகுதியில் விபத்துக்குள்ளானதில் அவரது மனைவி காலமானார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
-
யார் இந்த ‘ஆவா’ குழு?
யாழ்ப்பாணம்: கடந்த சில வாரங்கங்களாக வடபகுதியில் அசாதாரண சூழ்நிலை காணப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் ஆவா என்ற குழு செயற்படுவதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆவா குழு என்பது அரசியல் நோக்கம் கொண்ட குழுவா என்பது தெளிவற்ற சிலரின் கருத்து பரிமாற்றங்களால் ஊடகங்களில் வெளியிடப்படுகிறது.