யார் இந்த ‘ஆவா’ குழு?

avaயாழ்ப்பாணம்: கடந்த சில வாரங்கங்களாக வடபகுதியில் அசாதாரண சூழ்நிலை காணப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் ஆவா என்ற குழு செயற்படுவதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆவா குழு என்பது அரசியல் நோக்கம் கொண்ட குழுவா என்பது தெளிவற்ற சிலரின் கருத்து பரிமாற்றங்களால் ஊடகங்களில் வெளியிடப்படுகிறது.

ஆவா குழுவுக்கும் அரசியல் சார்ந்த எந்தவித மோதல்களுக்கும் தொடர்பில்லை என்பது யதார்த்தம். கொள்ளை, கடத்தல், கட்டப்பஞ்சாய்ந்து போன்ற விடயங்களில் இந்த குழு ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த வாரம் யாழில் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையின் பின்னணியில் இந்த குழு செயற்பட்டதாக பல ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் வடக்கில் இளம் ஆயுத குழுவொன்று உருவாகுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அரசாங்க புலனாய்வு சேவை மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவு, ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

ஆவா குழு என்ற பெயரில் பொதுவாக அடையாளப்படுத்தும் போதைப்பொருள் குழுக்கள் சிலவற்றினால், மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் கடந்த காலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த கும்பல்களுக்கு ஆவா என்ற பெயர் 2014ஆம் ஆண்டு முதல் உள்ள நிலையில், பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இவ்வாறான கும்பல்களின் தலைவர் ஆவா என அழைக்கப்பட்டமையினால் இந்த கும்பல் ஆவா குழு என அழைக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் இந்த குழு தென் இந்திய திரைப்படங்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு சமூக பிரச்சினைகளின் போது அச்சுறுத்தல் விடுப்பதற்காகவும், அச்சுறுத்தல்களின் போது பதிலளிப்பதற்காக இயங்கியுள்ள ஒரு சிறிய குழுவாகும்.

ava

கடந்த காலங்களில் இந்த நாட்டில் நிதி நிறுவனம் ஒன்று தனது வாடிக்கையாளர்களின் கால காப்பீடு நிதியை பெற்றுக் கொள்வதற்காக இந்த கும்பலின் உதவி பெற்றுக் கொண்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் கடனுதவிகளை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் நிதியை சேகரிப்பதற்காக இவர்களை பயன்படுத்தியுள்ளனர்.

இந்த கும்பல் ஆயுதமாக வாள், கத்திகள், முதலியன பயன்படுத்துகின்ற நிலையில் மோட்டார் சைக்கிள் குழுவாக இந்த தாக்குதல் குழு செயற்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய விடயமாக காணப்பட்ட பாடசாலை மாணவி வித்யாவின் கொலை சம்பவத்தின் பின் வடக்கில் ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலைகளுக்கு பின்னணியிலும் இந்த குழு செயற்பட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த பின்னர், பொலிஸ் அதிகாரிகள் இருவர் தாக்கப்பட்டமையும் இந்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு செயற்பாடாகும். போரின் பின்னரான காலப்பகுதியில் இவ்வாறான குழுவொன்று வடக்கில் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அந்த குழு மற்றும் தற்போது உருவாகியுள்ள குழுவுக்கும் இடையில் சம்பந்தம் இல்லை என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஆரம்ப காலங்களில் வடக்கில் சுற்றிய குழுவினர் இராணுவ அதிகாரி ஒருவரினால் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவினரை பயன்படுத்தி தெற்கின் அரசியல் அவசியத்திற்காக வடக்கில் அச்சுறுத்தும் செயற்பாடொன்றை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளதென பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு முறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இவ்வாறான குழுவில் இராணுவத்தினர் இருவர் இருந்ததனை தொடர்ந்து, இது ராஜபக்ச ரெஜிமென்டின் உத்தரவுக்கு அமைய நடத்தி செல்லப்பட்டுள்ளதென உறுதியாகியுள்ளது.

எனினும் விடுதலை புலிகள் செயற்பட்ட காலப்பகுதியில் இவ்வாறான குழுக்கள், பாதாள குழுகள் என்பன காணாமல் போயிருந்தன. தற்போது வடக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரணமாக சூழ்நிலையில் சமூகத்தில் உள்ள இளைஞர்கள் இவ்வாறான கும்பலாக இணைய கூடும் எனவும் வடக்கு மாகாண பாதுகாப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கல்வி பிரிச்சினை, தொழில் பிரச்சினை ஆகியவை தொடர்பில் இன்னமும் வடக்கு இளைஞர்களுக்கு தீர்வு கிடைக்காத நிலைமையினுள் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் உருவாக்கங்களை தடுப்பது கடினம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் ஊடாக கிடைக்கும் பணத்தில் மாத்திரம் வாழ வேண்டிய நிலையில் அதிக இளைஞர்கள் வடக்கில் வாழ்கின்றனர். எப்படியிருப்பினும் இந்த குழுவினர் அரசியல் அவசியத்திற்கமைய செயற்படுகின்றதென இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இவ்வாறான 13 குழுக்கள் கைது செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 17 – 29 வயது இளைஞர்களாகும். அதன் ஒரு குழுவுக்கு தலைமை வழங்கிய குமரேசன் வினோதன் என்பவர் 21 வயதுடைய இளைஞராகும். ஆவா என்ற பெயரில் அந்த குழு இயங்கியுள்ளது. அந்த குழு மானிப்பாய், கோப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய பிரதேசங்களில் செயற்பட்டுள்ளது. பின்னர் செந்தூரன் மற்றும் டான்ரொக் என இரண்டு குழுவின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s