WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பிறந்த நாளன்று தனக்குரிய www.mahindarajapaksa.lk இணையத்தளத்தை வெளியிட்ட மகிந்த!

    கொழும்பு: ஆட்சியை இழந்த பின்னர் துவண்டு போயிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த, கடந்த ஆண்டு மெல்ல மெல்ல அதில் இருந்து மீண்டுவந்திருந்தார். தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் கொடுத்த தன்னம்பிக்கையும், தற்போதைய அரசாங்கம் விடும் சில சிக்கல்களையும், தனக்குச் சாதகமாக மாற்றி மீண்டும் மக்களை தன் பக்கம் இழுக்கும் முழு முயற்சியில் இறங்கியிருக்கிறார் மகிந்த ராஜபக்ச.

  • இறந்த 14 வயது சிறுமியின் உடலை ‘கிரையோஜெனிக்’ முறையில் பாதுகாக்க லண்டன் ஹைகோர்ட் அனுமதி

    லண்டன்: பிரிட்டனைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கிய நிலையிலும் எதிர்காலத்தில் உயிர்பிழைக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறி தனது உடலை உறைநிலையில் பாதுகாக்க விரும்பினார். ஆனால், ஏற்கனவே விவாகரத்து பெற்றிருந்த அவளது பெற்றோரிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் இந்த விவகாரம் லண்டன் ஹைகோர்ட்டுக்கு சென்றது. மரணப் படுக்கையில் இருந்த அந்த சிறுமி தனது விருப்பம் குறித்து நீதிபதிக்கு கடிதம் எழுதினாள். அதில், “எனக்கு இப்போது 14 வயதுதான் ஆகிறது. நான்…

  • மருந்தாளர் நியமனம்

    சப்னி அஹமட் திருகோணமலை: கிழக்கு மாகாணத்திலுள்ள 10 பேருக்கான மருந்தாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (17) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் அமைச்சில் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் 77 வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் 19 பேருக்கான நியமனத்தினை வழங்குவதாகவும் மற்றைய 56 வெற்றிடங்களை ஜனவரி மாதத்திற்குள் நிரப்ப உள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

  • சுமனரத்ன தேரரின் மறுமுகம்!!

    மட்டக்களப்பு: 1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு மங்களாராம விகாரைக்கு அவர் பொறுப்பேற்றார். சிங்கள குடியேற்றங்களை செய்கிறார் என்கிற குற்றச்சாட்டில் விடுதலைப் புலிகளால் வாகரைக்கு அழைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார். இன்று இவரால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மட்டக்களப்பில் மாத்திரம் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். கிழக்கில் நில ஆக்கிரமிப்பை முன்னின்று நடத்துபவர் அவர்.

  • திருகோணமலை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

    எம்.ரீ. ஹைதர் அலி திருகோணமலை: கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத் தலைவருமான ஆர்.எம். அன்வரின் தலைமையில் திருகோணமலை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் 2016.11.16ஆந்திகதி கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னான்டோவை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், ஆளுநரின் செயலாளர் திருமதி. முரளிதரன், உதவிச் செயலாளர் செல்வி.

  • அதிர்ந்தது பாராளுமன்றம்!!

    கொழும்பு: கடந்த கால கொள்ளையர்களின் ஆட்சியை மறந்து விட்டீர்களா? சிறையில் இருக்க வேண்டிய நீங்கள் எல்லாம் தற்போது பாராளுமன்றத்தில் இருக்கின்றீர்கள், என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆவேசமாக கூறினார். வரவு செலவு திட்ட விவாதத்திற்காக இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

  • வதந்திகள் விடயத்தில் அவதானம் தேவை

    – AK 49 கொழும்பு: நாட்டில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் சிறு அச்ச சூழலில், வட்ஸ்அப் குரூப் மூலமாக கடுமையான வதந்திகள் காட்டுத் தீ போல் பரவப்படுகின்றன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. நாட்டில் குழப்பத்தைத் துண்டிவிட்டோர் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள டொன் பிரசாத் மற்றும் அப்துர் ராசிக் ஆகியோரின் விடுதலைக்காக அந்தந்த அமைப்புக்கள் கூட்டங்கள் கூடி, விடுதலைக்காக முயற்சித்து வருகின்றன.

  • முஸ்லிம் தனி சட்ட சீர்திருத்தத்திற்காக குரல் கொடுக்கும் பெண்களுக்கு அச்சுறுத்தல்

    கொழும்பு: முஸ்லிம் தனியாள் சட்ட சீர்திருத்தத்திற்காக நாடளாவிய ரீதியில் குரல் கொடுத்து வருகின்ற பெண் செயற்பாட்டாளர்கள் தனிப்பட்ட நபர்களாலும், குழுக்களாலும் அச்சுறுத்தப்படுவதை பொது அமைப்புக்களைச் சேர்ந்தோரும், சமூகத்தின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களும், ஊடகத்துறை சார்ந்தவர்களும் தனி நபர்களுமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து கண்டித்திருக்கின்றனர்.

  • சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப்போட்டிகள்” -2016 (பேர்ண் மாநிலத்தில்)

    அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே.. Sehr geehrte Tamilen in der Schweiz .. “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்”, முதன்முறையாக, எதிர்வரும் 18.12.2016 அன்று “சுவிஸ்வாழ் அனைத்து தமிழ் மாணவ, மாணவியர்க்கான அறிவுப்போட்டி” ஒன்றை நிகழ்த்தி, அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து, 28.01.2017 அன்று பேர்ண் மாநிலத்தில் நடைபெறும் “வேரும் விழுதும்” விழாவில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன், பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.

  • உணர்ச்சிபூர்வமாக கையாளுவதை விட அறிவுபூர்வமாக கையாள்வோம்..

    – முஹம்மது மஸாஹிம் தற்போது எமது தாய்நாட்டின் சமாதான சூழலை விரும்பாத சில சக்திகள், சில அரசியல் மற்றும் சுயலாப நோக்குடன் மறுபடியும் ஒரு அசாதாரண சூழலுக்குள் நாட்டையும் மக்களையும் தள்ளிவிட பிரயத்தனங்கள் மேற்கொள்வதையும், மற்றுமொரு இனக் கலவரத்துக்கான முஸ்தீபுகள், பிரச்சாரங்கள் முன்னெடுக்கப் படுவதையும் சமூக வலைத்தளங்கள், செய்தி இணையங்களில் பார்க்க முடிகின்றது.

  • முஸ்லிம்களையும், சீனாவையும் கடுமையாக விமர்சித்த டொனால்ட் ட்ரம்ப் இப்போது மாறிவிட்டாரா..?

    வோஷிங்டன்: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு கோடீஸ்வர வர்த்தகரான டொனால்ட் ட்ரம்ப வெற்றி பெற்றுள்ளார். அவர் அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக அடுத்தாண்டு பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி பிரச்சார காலங்களில் டொனால்ட் ட்ரம்ப்பினால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்துள்ளன.

  • ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட முன்வரல் வேண்டும்!

    முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு பின்னால் பல்கோண, பல்பரிமாண அரசியல் இராஜதந்திர பின்புலன்கள் இருக்கின்றன, அவற்றிற்கு முகம் கொடுக்கும், சாணக்கியம், திராணி, தகைமை எமது முஸ்லீம் அரசியல் தலைமைகளிடம் இல்லை என்பது யதார்த்தம், பல கூறுகளாக பிளவுப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல், சமூகம் எதிர் கொள்ளும் சவால்களில் ஒரு பகுதியாக அன்றி தீர்வுகளின் அங்கமாக இல்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

←Previous Page
1 … 155 156 157 158 159 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar