திருகோணமலை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

  • எம்.ரீ. ஹைதர் அலி

trincoதிருகோணமலை: கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத் தலைவருமான ஆர்.எம். அன்வரின் தலைமையில் திருகோணமலை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் 2016.11.16ஆந்திகதி கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னான்டோவை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், ஆளுநரின் செயலாளர் திருமதி. முரளிதரன், உதவிச் செயலாளர் செல்வி.

காலிதா பேகம், இலங்கை இஸ்லாமிய ஆசிரிய சங்கத்தின் தேசிய தலைவர் அனஸ், திருகோணமலை மாவட்ட தலைவர் சாலி (பிரதி அதிபர்), மாவட்ட இணைப்பாளர், மாவட்ட செயலாளர் நவ்சாத் உட்பட உறுப்பினர்களான ஏனைய பாடசாலைகளின் அதிபர்களும் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின்போது பின்வரும் விடயங்கள் ஆராயப்பட்டன.

01. பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை.

02. தேசிய பாடசாலைகளிலுள்ள ஆசிரியர்களின் பதவி உயர்வு.

03. அண்மையில் நியமனம் வழங்கப்பட்ட கல்வியற்கல்லூரி ஆசிரியர்களை தேவைப்பாடுள்ள பாடசாலைகளுக்கு நியமித்தல்.

04. எதிர்காலத்தில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் போது வயதெல்லையை 45 யாக உயர்த்துதல்.

05. கஷ்டப்பிரதேசங்களில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகளை
நிவர்த்தி செய்ய அப்பிரதேசத்திலுள்ள க.பொ.தா (உ /த) மற்றும் (சா/த)
தகைமை உடையோரிடம் இருந்து போட்டிப்பரீட்சையின் மூலம்
ஆசிரியர் உதவியாளராக நியமித்தல்.

06. முறையான ஆசிரியர் இடமாற்றம்.

07. திரியாய் சந்தியில் அமைக்கப்படவுள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தின் கட்டிடத்தை தீர்மானத்தின்படி வேறு இடத்திற்கு நகர்த்தாமல் உரிய இடத்தில் நிறுவுதல்.

08. ஹஜ் யாத்திரைக்காக செல்லும் ஆசிரியர்களுக்கு உத்தியோக விடுமுறை வழங்குதல்.

09. குச்சவெளி பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம்.

10. எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர்களை கஸ்டப் பிரதேச மற்றும் பின் தங்கிய பாடசாலைகளுக்கு நியமித்தல். போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன

இவ்விடங்களுக்கு பதில் அளித்த ஆளுநர் அவர்கள் ஆசிரியர் நியமனம் தொடர்பாக முற்று முழுதாக கல்வி அமைச்சிற்கே கொடுக்கப்பட்டது எனவும்,

பட்டதாரிகளின் வயதெல்லை தொடர்பாக 35 வயது தொடக்கம் 40 ஆக மாற்றப்பட்டுள்ளதுடன் குறித்த 40 வயதெல்லையானது இம்முறை மாத்திரமே வழக்கப்பட்டுள்ளதாக கூறிய ஆளுநர் அதற்க்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் கிழக்கு மாகாணம் கடந்த முற்பது வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்டபோது அதிகமான பட்டதாரிகள் நாட்டை விட்டு புலம்பெயர்ந்ததால் அவர்களால் உரிய காலத்தில் இணைத்துக்கொள்வதில் இடையூர்கள் நிலவியது மேலும் அவர்களுடைய நிலைமையை கருத்தில் கொள்ளாவிட்டால் இனிவரும் காலத்தில் பட்டதாரிகளை முடித்துக்கொண்ட அவர்களால் வாழ் நாளில் எந்தவிதமான அரச தொழிலையும் பெறமுடியாத துர்பாக்கிய சாலிகளாக மாறிவிடுவார்கள் எனவே அவர்களை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

trinco

மேலும், முறையான இடமாற்றம் தொடர்பாக அரசியல்வாதிகளில் சிலர் தலையீடே காரணம் அவைகள் குறைக்கப்பட்டால் சரியாகிவிடும் எனவும், திரியாய் சந்தியில் அமைக்கப்படவுள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தின் கட்டிடத்தை தீர்மானத்தின்படி வேறு இடத்திற்கு நகர்த்தாமல் உரிய இடத்தில் நிறுவவேண்டும் என கேட்டபோது

கல்வி அமைச்சின் செயலாளரால் ஆளுநருக்கு ஒப்பமிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறித்த ஆசிரியர் பயிற்சி நிலையம் திரியாய் சந்தியில் இருந்து பன்குளம் பகுதியை நோக்கிய வீதிக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்ட இடத்தில் திரியாய் சந்தியில் கொமாரன்கடவை கல்வி வலய கட்டிடம் மற்றும் கணனி பயிற்ச்சி நிலையம் என்பன அமைக்க இருப்பதால் ஆசிரியர் பயிற்ச்சி நிலையம் பன்குள வீதிக்கு நகர்த்தப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிக்கை சமர்ப்பித்திருப்பதாக தெரிவித்த ஆளுநரின் கருத்திற்கு பதில் அளித்து பேசிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் திரியாய் சந்தியில் அமைக்க திட்டமிட்டுள்ள கொமாரன்கடவை கல்வி வலய கட்டிடம் மற்றும் கணனி பயிற்ச்சி நிலையம் என்பன கொமாரன்கடவை பிரதேசத்திற்கு மாத்திரமே சொந்தமானதாகும்.

ஆனால் ஆசிரியர் பயிற்ச்சி நிலையம் என்பது மூவினங்களை சார்ந்த மக்களுக்கு மாத்திரமல்லாமல் பதவி ஸ்ரீ புரம், புல்மோட்டை, குச்சவெளி, திரியாய், நிலாவெளி மற்றும் இறக்கக்கண்டி போன்ற தூரப்பிரதேச ஆசிரியர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்ற செயலாகும் அத்துடன் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் தீர்மானத்தை மாற்றுவது எந்த விதத்தில் நியாயம் என மாகாண சபை உறுப்பினர் கேள்வி எழுப்பினார் இதனை கருத்திற்கொண்டு உடனடியாக மாகாண சபை உறுப்பினர் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களுக்கு நியாயங்களை கோரி கடிதம் ஒன்றை அனுப்பும்படி ஆளுனரால் அவரின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

குச்சவெளி தனியான கல்வி வலயம் தொடர்பாக நியாயமான காரணங்கள் மற்றும் கல்வி அமைச்சின் பரிந்துரையுடன் வரும்பொழுது அங்கீகரிக்கப்படும் எனவும் கூறியதுடன், சந்திப்பை ஏற்படுத்திய மாகாண சபை உறுப்பினர் அன்வர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரிய சங்கத்தின் தேசிய தலைவர் அனஸ் அவர்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s