-
முஸ்லீம் ஆசிரியைகள் ‘அபாயா’ உடை அணிந்து செல்வது தொடர்பாக சர்ச்சை
மட்டக்களப்பு: கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள முஸ்லீம் ஆசிரியைகள் ‘அபாயா’ உடை அணிந்து செல்வது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. ”முஸ்லீம் ஆசிரியைகள் அபாயா உடை அணிந்து பாடசாலைக்கு வரக் கூடாது. சேலை அணிந்தே வர வேண்டும் ” என அதிகாரிகளினால் நிர்ப்பந்திக்கப்படுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சிப்லி ஃபாரூக் தெரிவித்தார்.
-
கிண்ணியா சூரங்கல் -சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த நளீம் ஜனூபா (15வயது) கர்ப்பிணி பெண் கொலை
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரங்கல் பகுதியில், குளியலறையில் வழுக்கி விழுந்து, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாகக் கூறப்பட்ட பெண், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
-
டுபாயில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்
டுபாய்: இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து டுபாய்க்கு வேலைக்காக செல்லும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களுக்கான மருத்துவ காப்புறுதியை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு மருத்துவ காப்புறுதி பெற்றுக் கொள்ளாதவர்கள் மாதாந்தம் 500 திர்ஹம் அபராதமாக செலுத்த வேண்டும் என டுபாய் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
-
“நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 240ஆக அதிகரிக்க வேண்டும்”- பிரதமர்
கொழும்பு: நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 240ஆக அதிகரிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே பிரதமர் இதை தெரிவித்தார். தற்போது நாடாளுமன்றத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.
-
அங்கும்புற துப்பாக்கிச்சூடு சம்பவம் ; சந்தேக நபர் கைது
கண்டி, அங்கும்புற பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
-
நிருவாகத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பொலிஸார் பலவந்தமாக CCTV தொகுதியை எடுத்துச் சென்றுள்ளனர்
கொழும்பு: பெபிலியான, ‘பெஷன் பக்’ ஆடை விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை இரவு பரவிய திடீர் தீ விபத்தை தொடர்ந்து, நிறுவனத்தின் CCTV தொகுதியை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர். நிருவாகத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பொலிஸார் பலவந்தமாக CCTV தொகுதியை எடுத்துச் சென்றதாக ‘பெஷன் பக்’ முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
-
கண்டி லைன் பள்ளி வீதியின் தொடக்கத்திலுள்ள பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளது
“பௌத்த மதத்தை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் பௌத்த அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடுசெய்த பேரணி இன்று கண்டியில் நடைபெற்றது. கெட்டம்பே மைதானத்தில் இன்று பி.ப. 2.30 மணியளவில் ஒன்றுகூடிய பௌத்த அமைப்பினர் அங்கிருந்து தளதா மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றுள்ளனர்.
-
ஐ.எஸ் அமைப்போடு இலங்கை முஸ்லிம்கள் யாருக்கும் தொடர்பில்லை – ரிஷாத் பதியுதின்
கொழும்பு: உலக பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் ஐ.எஸ் .ஐ.எஸ் அமைப்புடன் இலங்கையிலுள்ள எந்தவொரு முஸ்லிம் அமைப்போ அல்லது தனி நபரோ தொடர்புகள் வைத்திருக்கவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதின் கூறுகின்றார்.
-
ஆசிரியர்களுக்கு, பாடசாலை மாணவர்களினால் பெற்றுக் கொடுக்கப்படும் பரிசுகளை தடை செய்வதற்கான சுற்றறிக்கை
கொழும்பு: ஆசிரியரகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் பொருட்டு, மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடுதல், பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் அது தொடர்பில் வற்புறுத்தல் போன்றவை தடை செய்யப்படும் என அடுத்த வருடம் தொடக்கம் ஆசிரியர்களுக்கு, பாடசாலை மாணவர்களினால் பெற்றுக் கொடுக்கப்படும் பரிசுகளை தடை செய்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
-
டான் பிரசாந்தின் கைதின் பின்னர் சிங்கள மக்கள்…
AK-49 கொழும்பு: பொதுபலசேனாவுக்குப் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் மீது நேரடியாகத் துவேசத்தைப் பரப்பி, திடீரென புகழ் உச்சிக்குப் போய் விடலாம் என நப்பாசை கொண்ட “காமரசன்” டான் பிரசாந்த் கடந்த வாரம் காவல் துறையால் கைது செய்யப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
இவ்வார மின்னல் நிகழ்ச்சியில் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்
எம்.ரீ. ஹைதர் அலி 2016.11.20ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ள இவ்வார சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் எம். ஷிப்லி பாறுக் கலந்துகொள்கின்றார்.