டான் பிரசாந்தின் கைதின் பின்னர் சிங்கள மக்கள்…

  • AK-49

srilankaகொழும்பு: பொதுபலசேனாவுக்குப் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் மீது நேரடியாகத் துவேசத்தைப் பரப்பி, திடீரென புகழ் உச்சிக்குப் போய் விடலாம் என நப்பாசை கொண்ட “காமரசன்” டான் பிரசாந்த் கடந்த வாரம் காவல் துறையால் கைது செய்யப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டுள்ளார்.

டான் பிரசாந்தை வெளியில் எடுப்பதற்கு இனத்துவேச நிழலில் குளிர்காயும் ஓர் சிலர் முன்வந்தபோதிலும், எத்தனையோ சிங்கள சகோரத இனத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சட்டத்தரணிகள் இருந்தும், தானாக முன்வந்து, டான் பிரசாந்தை வெளியிலெடுக்க அர்கள் எவரும் முன்வரவில்லை.

இந்நிலையில், டான் பிரசாந்தின் மனைவி, ஒரு சில பத்திரிகையாளரை அழைத்து, அழுது, தனது கனவரை வெளியில் கொண்டுவர சிங்கள மக்கள் அனைவரும் பணஉதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்ட காணொளி மற்றும் செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தன.

ஆனால், இனத்துவேச நிழலில் குளிர்காயும் ஓரிரு நபர்களைத் தவிர, பெரும்பான்மையான சிங்கள சமூகம் இவரது இக்கோரிக்கையினை நிராகரித்திருந்தது.

“குடினாரனும், பெண்களுடன் உல்லாசமாகக் களியாட்டங்களில் ஈடுபடுபவனுமான டான் பிரசாந்தை வெளியில் எடுப்பதற்கு வழங்கப்படும் எங்களது பணம், வீண்விரயாமாகுமே தவிர, வேறொன்றையும் செய்துவிடாது” என சிங்கள மக்கள் அதிகமானோர் தெரிவித்திருந்தனர்.

இதனைவிடவும், மிக நீண்ட காலமாக இலங்கை கடற்படை உத்தியோகத்தராக இருந்துவரும், சிங்கள மொழியில் புலமை பெற்ற ஓர் முஸ்லிம் சகோதரரின் சமூக வலைத்தள கோரிக்கைகளும், காணொளிகளும் சிங்கள சமூகத்தை தற்பொழுது சிந்திக்க வைத்திருக்கின்றது.

சமகால பிரச்சினையைக் கண்டு, கொதித்தெழாமல், இந்நாட்டிற்கு தேவைப்படுகின்ற முழு சமூகத்தின் ஒற்றுமை, உணர்வு, ஏழைச் சிறார்களின் கல்வி, குறிப்பாக வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் சிங்கள மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் கடந்த கால யுத்தங்களால் ஏற்பட்ட வடுக்கள் அனைத்தும் எளிதாக இம்மக்களைச் சென்றடையக்கூடியவகையில் தனிச் சிங்கள மொழியில் காணொளிகளை வடிவமைத்துள்ள இச்சகோதரருக்கு நாம் நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்.

பொதுபல சேனாவை சிங்கள சமூகம் எவ்வாறு கண்டுகொள்ளவில்லையோ, இதேபோல்தான் டான் பிரசாந்தையும் கண்டுகொள்ளவில்லை.

இயல்பாக எச்சமூகத்திலும் கொதித்தெழும் ஓரிரு இளைஞர்கள் இருக்கத்தான் செய்வர்.

இவர்களால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s