-
“கோஹ்லியை காலி செய்வேன்”- ஆட்டோ ஓட்டுனர் மகன் சவால்
ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் விராட் கோஹ்லி, ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என ஆட்டோ ஓட்டுனரின் மகன் முகமது சிராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுனரின் மகனான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ 2.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ், இந்தியா ஏ அணிக்காகவும் விளையாட உள்ளார்.
-
அமெரிக்கா சென்று சாதிக்க காத்திருக்கும் காத்தான்குடி இளம் விஞ்ஞானி
காத்தான்குடி: இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகிலும் காணப்படும் முக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியொன்றை கண்டுபிடித்து இலங்கை மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் காத்தான்குடி நகரத்தைச் சேர்ந்த இம்ஹாத் முனாப் என்ற மாணவரே குறித்த கருவியை கண்டுபிடித்துள்ளார்.
-
வரலாற்றில் முதல் முறையாக ரூபாவுக்கு எதிராக டொலர் அதிகரிப்பு
கொழும்பு: வரலாற்றில் முதல் முறையாக நேற்று (21) அமெரிக்க டொலருக்கான விற்பனை பெறுமதி 153 ரூபாவை கடந்துள்ளது. அதற்கமைய நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 149.68 ரூபாயாகவும், விற்பனை விலை 153.44 ரூபாகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் தினசரி நாணய மாற்று வீதத்தில் இந்த தரவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அத்துமீறிய பகிடிவதை
கண்டி: பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் புதிய மாணவர்கள் எட்டு பேரையும் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியதோடு, தாக்கியுள்ளனர் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. விவசாயப் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் பேராதனை பொலிஸ் பிரதேசத்தில் மெகொட கலிகமுவ என்ற இடத்தில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகின்றனர். இவர்களில் சிலர் புதிய மாணவர்கள் 8 பேரை கடத்திச் சென்று இந்த வாடகை வீட்டில் வைத்து நிர்வாணமாக்கி பல வகையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதுடன் தாக்கியுமுள்ளனர்.
-
“ஜனாதிபதியின் நல்லிணக்க முயற்சிகளுக்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்”
வெலிமடை: இனங்களுக்கிடையில் ஒற்றுமை- நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு முஸ்லிம்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வெலிமடையில் தெரிவித்தார்.
-
நடுவானில் தகவல் தொடர்பை இழந்த ஜெட் எயார்வேஸ் விமானம்
லண்டன்: கடந்த வியாழனன்று, மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்த ஜெட் எயார்வேஸ் விமானம், ஜெர்மனி வான்வெளியில் பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென ஜெர்மனி நாட்டு விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின.பொதுவான நடைமுறையில், ஒரு விமானம், ஒவ்வொரு நாட்டின் வான்வெளி பகுதியை கடந்து செல்லும் போது, சம்பந்தப்பட்ட நாட்டின் விமான கட்டுப்பட்டு அறைக்கு தகவல் அளிக்கவேண்டும்.
-
ஹக்கீமின் சத்திய வாக்குறுதிகளை ஒப்புவிக்க ஹசன் அலி உம்ரா பயணம் ?
– மீரா அலி ரஜாய் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி அவர்கள் இன்று (15/02/2017) புனித உம்ராக் கடமையை நிறைவேற்ற மக்கா மா நகருக்குச் செல்கின்றார் .
-
கல்முனையில் பாடசாலை மாணவர்கள் சிலர் ‘மாவா’வுக்கு அடிமை
– அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை: “கல்முனை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் சிலர் ‘மாவா’ எனப்படும் போதைவஸ்த்துக்கு அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்” என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் கே.எல்.எம்.ரயீஸ் தெரிவித்தார்.
-
சசிகலாவுக்கு 4 வருட சிறை; 10 வருடம் அரசியலுக்கு தடை
பெங்களூரு: சசிகலா நடராஜன் உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 இலட்சத்துக்கும் அதிகமான சொத்து சேர்த்ததாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியயோர் குற்றவாளிகள் என உச்சநீதின்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
அதிக டக் அவுட்! உமர் அக்மல் சாதனை!!
லாஹூர்: பாகிஸ்தான் துவக்க துடுப்பாட்டகாரராக களமிறங்கி விளையாடி வந்த 26 வயதான உமர் அக்மல் 24 முறை டக் அவுட் ஆகியுள்ளார். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்காக உமர் அக்மல் விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற பெஷாவர் ஷல்மி அணிக்கெதிரான போட்டியில் உமர் அக்மல் டக் அவுட் ஆனார்.
-
இலங்கை மாணவன் தாய்லாந்தில் சாதனை
திம்புலாகல: உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற போட்டி ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். திம்புலாகல – சிறிபுர மத்திய மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் எம்.யொமால் விஸ்வஜித் சிறிவர்தன என்ற மாணவனே இந்த சாதனையை படைத்துள்ளார். புதிய கண்டுபிடிப்பாளர்கள் தினத்தையொட்டி கடந்த 2ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை தாய்லாந்தில் உலகளாவிய ரீதியாக போட்டி ஒன்று இடம்பெற்றது.
-
பாகிஸ்தான் தலைநகரில் காதலர் தினத்திற்கு தடை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றம் ஒன்று, தலைநகர் இஸ்லாமாபாத்தில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது; காதலர் தினம் முஸ்லிம் கலாசாரத்தில் இல்லை என்ற அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.