Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி வர்த்தக சங்கத்தின் புதிய தலைவராக பரீட் தெரிவு

    – ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி வர்த்தக சங்கத்தின் புதிய தலைவராக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், பிரபல சமூக சேவையாளர் கே.எல்.எம்.பரீட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் இடம் பெற்ற காத்தான்குடி வர்த்தக சங்கத்தின் நிர்வாக சபை கூட்டத்தின் போது மேற்படி தெரிவு இடம் பெற்றதாக அதன் நிர்வாக சபை உறுப்பினர் தெரிவித்தார்.

  • “முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு தீர்மானங்களை எடுத்தால் மட்டுமே முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்”

    கொழும்பு: முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு தீர்மானங்களை எடுத்தால் மட்டுமே முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமெனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும் தேசிய நல்லிணக்க செயலணியின் தலைவியுமான திருமதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க முஸ்லிம் அமைப்புகளும், புத்திஜீவிகளும் அரசியல் தலைவர்களுக்கு இதுவிடயத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

  • ஜெயலலிதா மரணம் : மருத்துவர் குழுவின் 10 முக்கிய தகவல்கள்

    சென்னை: மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து மருத்துவர் குழு வெளியிட்ட 10 முக்கிய தகவல்கள் ஜெயலலிதா, `செப்சிஸ்’ என்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது மிக விரைவாகத் தாக்கும் ஆற்றல் கொண்டது. அதனால், இதயம் பாதிக்கப்பட்டு, சிறுநீர் தொற்றும் ஏற்பட்டு. உடல் உறுப்புக்கள் செயலிழக்கத் தொடங்கின.

  • மடத்திற்குள் லட்சக்கணக்கான மெதம்பெட்டமைன் மாத்திரையை பதுக்கிய பெளத்த பிக்கு கைது

    மியான்மாரில் பெளத்த பிக்குகள் வசிக்கும் ஒரு மடத்திற்குள் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான மெதம்பெட்டமைன் என்ற மாத்திரை மறைத்து வைக்கப்பட்டிருந்ததது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பெளத்த பிக்கு ஒருவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை

    கொழும்பு: இன்று நள்ளிரவு (07) முதல் அமுலாகும் வகையில் அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.தற்போதுள்ள சந்தை விலைகளின் அடிப்படையில், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அரசாங்கம் உச்ச விலையை நிர்ணயித்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

  • இடைநிறுத்தப்பட்டிருந்த உயர்தர பெறுபேறுகளை வெளியிட தீர்மானம்

    கொழும்பு: 2016 ஆம் ஆண்டு தாம் வசிக்கும் மாவட்டத்திற்கு வெளியே கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை எழுதியமைக்காக பரீட்சைப்பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருந்த மாணவர்களுக்கான பெறுபேறுகளை வெளியிட பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எனினும் இம்மாணவர்களுக்கான மாவட்ட வெட்டுப்புள்ளி பரீட்சை எழுதிய மாவட்டத்தின் பட்டியலுக்கு உட்படுத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சில்லறைக் கடைக்குள் ஜனாதிபதி மைத்திரி

    பொலன்னறுவை: தனது சொந்த பகுதியான பொலன்னறுவை லக்ஷ உயனவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று விஜயம் மேற்கொண்டார். இதன்போது பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, தனது இளமை கால ஞாபகங்களை நினைவுபடுத்திக் கொண்டார். அவர் சிறு வயதில் வாழ்ந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டதுடன், அங்குள்ள மக்களிடம் நட்பு ரீதியாக உரையாடினார்.

  • பயணத்தடை மீண்டும் அமல்படுத்தப்படும்

    நியுயோர்க்: ஏழு முக்கிய முஸ்லிம் நாடுகள் மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த பயணத்தடையை அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று தாற்காலிகமாக ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை அதிபர் டிரம்ப் சீற்றத்துடன் கண்டித்துள்ளார்.

  • “சவுதி அரேபிய அரசு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நெருக்கமாக இணைந்து செயல்படும்”

    றியாத்: சவுதி அரேபிய அரசு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் என்று சவுதி அரேபிய எண்ணெய் வளத்துறை அமைச்சர் , காலித் அல்-ஃபாலி கூறியிருக்கிறார்.டிரம்ப் நிர்வாகம் புதைபடிவ எரிபொருட்களுக்குத் தரும் ஆதரவை பாராட்டினார்.

  • ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட கூட்டு பாலியல் வல்லுறவு

    ரோஹிஞ்சா: மியான்மாரில் உள்ள படையினர் பெரும் எண்ணிக்கையிலான வயது வந்தோர் மற்றும் குழந்தைகளை கொன்றிருப்பதாகவும், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளதாகவும் ஐ.நாவின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. மானுட குலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் மற்றும் இன சுத்திகரிப்பாகவும் இந்த வன்செயல்கள் கருதப்படக்கூடியவை என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

  • தாருல் அதர் அல் குர்ஆன் மத்ரஸாவின் இரண்டாவது கெளரவிப்பு நிகழ்வு

    அல்அதர் மீடியா காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் கீழ் இயங்கும் அல் குர்ஆன் மத்ரஸாவில் சென்ற வருடம் (2016) புனித அல்குர்ஆனை ஓதி பரீட்சையில் சித்தியடைந்து வெளியேறும் மாணவர்களையும் அவர்களை கற்பித்து நெறிப்படுத்திய முஅல்லிம்களையும் மற்றும் தாருல் அதர் ஹிப்ழ் மனனப் பிரிவில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு இன்று (03) வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையின் பின் காத்தான்குடி ஜாமியுல் அதர் ஜும்ஆ பள்ளிவாசலில் அதன் தலைவர் வை.பீ.ஏ. றஊப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

  • 6வது வெற்றி வருடத்தில் கால் பதிக்கிறது யுவர்காத்தான்குடி!

    அன்புள்ள வாசகர் நெஞ்சங்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். இதே போன்றதொரு இலங்கையின் சுதந்திர தினமான 04-02-2012 இல் www.yourkattankudy.com எனும் எமது தளம் இணையம் ஊடாக உலகை முதன் முதலில் வலம் வந்தது. ஓர் புகழ்பெற்ற நகரத்திற்குரிய அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி, எமது ஊரின் தனித் தகவல் தளமாகவே எமது இணையத்தளம் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டது.

←Previous Page
1 … 141 142 143 144 145 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar