அத்துமீறிய பகிடிவதை

peradeniyaகண்டி: பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் புதிய மாணவர்கள் எட்டு பேரையும் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியதோடு, தாக்கியுள்ளனர் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. விவசாயப் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் பேராதனை பொலிஸ் பிரதேசத்தில் மெகொட கலிகமுவ என்ற இடத்தில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகின்றனர். இவர்களில் சிலர் புதிய மாணவர்கள் 8 பேரை கடத்திச் சென்று இந்த வாடகை வீட்டில் வைத்து நிர்வாணமாக்கி பல வகையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதுடன் தாக்கியுமுள்ளனர்.

இப் பகிடிவதை குறித்து பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் குறிப்பிட்ட வாடகை வீட்டை சோதனையிட்டு பகிடிவதை புரிந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 15 மாணவர்களை பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த மாணவர்களுக்கு மார்ச் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ள நிலையில் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது.

விவசாய பீடத்தின் புதிய மாணவர்கள் எட்டு பேரையும், விவசாயப் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கட்டிவைத்து, நிர்வாணமாக்கி துன்புறுத்தியதுடன். தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் பல்கலை மாணவர்களிடத்திலும் சமூகத்தின் மத்தியிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னரும் களனி பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்கள் மீது பழைய மாணவர்கள் மேற்கொண்ட அத்துமீறிய பகிடிவதை காரணமாக பல மாணவர்கள் கைது செய்யப்பட்டதுடன், பகிடிவதைக்கும் தடை விதிக்கபபட்டிருந்தது.

அதிலும் இந்த அளவிற்கு கொடூர தாக்குதல்களையும் துன்புறுத்தல்களையும் மேற்கொள்ளவில்லை.

பேராதனை பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன். பகிடிவதையின் தாக்கம் உச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக சேர்ந்துகொள்ளும் மாணவர்களுடன் பழகுவதற்கும் அவர்களது பயத்தை போக்குவதற்கும் சக மாணவர்களுடன் சகஜமாக பழகுவதற்குமே இந்த பகிடிவதை விளையாட்டாக மேற்கொள்ளப்படுகின்றது.

ஆனால் இங்கு மாணவர்கள் பகிடிவதை என்ற பெயரில் எதற்காக இவ்வாறான கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன், இவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கப்போகின்றது பற்றியும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s