WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கண்டி திகனயில் சகல வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதான தொகுதி திறந்து வைப்பு

    ஹாசிப் யாஸீன், அகமட் எஸ். முகைடீன் கண்டி: விளையாட்டுத்துறை அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட மத்திய மாகாணத்திற்கான விளையாட்டு மைதான தொகுதி கண்டி திகனயில் திறந்து வைக்கும் நிழகழ்வு  (01) புதன்கிழமை மிக கோலகலமாக நடைபெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரின் அழைப்பின் பேரில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டுத் தொகுதியினை திறந்து வைத்தார்.

  • அறிமுகமாகும் புதிய 1 பவுண்ட் நாணயம்

    லண்டன்: பிரித்தானியாவில்  எதிர்வரும் மார்ச் 28-ம் திகதி புதிய 1 பவுண்ட் நாணயம் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய 1 பவுண்ட் தாள் மற்றும் நாணயத்திற்கு பதிலாக புதிய நாணயம் வெளியிடப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய 1 பவுண்ட் தாள் மற்றும் நாணயம் கடந்த 1983-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

  • காணாமல் போன தங்க ஆபரண பொதியை எஜமானிடம் ஒப்படைத்த இலங்கைத் தொழிலாளி! இளவரசர் பாராட்டு!!

    றியாத்: காணாமல் போன தங்க ஆபரண பொதி ஒன்றைக் கண்டெடுத்த இலங்கையைச் சேர்ந்த பணியாளர் ஒருவர், அதனை தனது எஜமானிடம் கொடுத்தன் காரணமாக அவருக்கு பாராட்டு கிடைத்துள்ளது. சவூதி அரேபிய சுற்றுலா மற்றும் தேசிய உரிமைகளுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவர் இளவரசர் சல்மான் பின் சுல்தான் இலங்கை பிரஜையின் நேர்மையை பாராட்டியுள்ளார்.

  • தமிழ்நாட்டில் இன்று முதல் பெப்ஸி, கோக் விற்பனை நிறுத்தம்

    சென்னை: தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களான பெப்ஸி மற்றும் கோகோ கோலா விற்பனை நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை இந்த விற்பனை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி, பல வாரங்களுக்கு முன்பிருந்தே, இந்த விற்பனை நிறுத்தம் தொடர்பாக, தனது சங்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் அச்சங்கங்கள் ஈடுபட்டு வந்தன.

  • தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி கல்விக்காக புதிய தேசிய கல்வியற் கல்லூரி

    பா.திருஞானம் கொழும்பு: கொரியா குடியரசினால் வழங்கப்படும் 1911 மில்லியன் நிதியினால் குளியாபிட்டியவில் புதிய தொழில்நுட்பத்திற்கான தேசிய கல்வியற் கல்லூரி ஒன்று அமைக்கபடவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையொப்பம் இடும் நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், கொரியா குடியரசின் விசேட பிரதிநிதி Lee Dong Ku அவர்களின் பங்களிப்பில் கல்வி அமைச்சில் நடைபெற்றது. கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டயாராச்சி, கொரியா குடியரசின் விசேட பிரதிநிதி Lee Dong…

  • இலங்கை அணியில் முதன் முறையாக இடக்கை சுழற்பந்துவீச்சாளர்

    கொழும்பு: பங்களாதேஷ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பெயர்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் 7 துடுப்பாட்ட வீரர்கள் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இத்தொடருக்கு சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேராத் அணித்தலைவராக உள்ளார்.

  • பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கு நிரந்த வதிவிடம் பெறும் உரிமை ரத்து (?)

    லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியமையின் பின்னர், பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கு நிரந்த வதிவிடம் பெறும் உரிமை ரத்து செய்யப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக பிரித்தானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை விலக்குவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் பிரித்தானியாவில் வாழ்வதற்கான உரிமையை இழந்து விடலாம் என சில பிரித்தானிய ஊடகங்களும் தெரிவித்துள்ளன.

  • நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

    கொழும்பு: நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (28) மேல் முறையிட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதியன்று, ஊடகவியலாளர் பிரகித் எக்னளிகொட காணாமல் போனது தொடர்பான வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் முலம், கலகோட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சாட்டி கோமாகம மாஜிஸ்ட்ரேட் நீதிபதி…

  • யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும்,மலிவு விற்பனையும்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தங்களது சுய தொழில்களை இழந்து சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு,மீள்குடியேற்றம், இந்து சமய அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கிவரும் புனர்வாழ்வு அதிகார சபையில் சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்ற சுயதொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும், மலிவு விற்பனையும் 26-02-2017 நேற்று ஞாயிற்றுக்கிழமை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு அருகாமையிலுள்ள மட்டக்களப்பு மாநகர சபையின் பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  • பாதாளத்தை நோக்கிய இலங்கையின் வர்த்தகம்: 175 ரூபாவை நெருங்கும் டொலர்

    கொழும்பு: இலங்கையில் சமகாலத்தில் காணப்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக, உயர் வர்த்தகர்கள் அதிருப்பதி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நாற்பதுக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இலங்கையில் தற்போது காணப்படுகின்ற நிலைமை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு ஆலோசகர்கள் குழுவொன்று எதிர்வரும் வாரம் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.

  • “வீசா தடை விதிக்கப்பட்ட 8 நாட்களில் பணி நீக்கம் செய்யப்பட்டேன்”: ருமானா அகமட்

    வோஷிங்டன் DC: அமெரிக்க தலைநகர்  வோஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ருமானா அகமது என்ற பெண் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் வங்கதேசத்தைச் சேர்ந்த வம்சாவளி பெண் ஆவார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒபாமா அரசு நிர்வாகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். ருமானா பணியின் போது தலையில் ஹிஜாப் அணிந்து இருப்பார் என்று கூறப்படுகிறது.

  • புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் வருகிறது நோக்கியா 3310

    லண்டன்: நோக்கியாவின் 3310 வகை அலைபேசி மீண்டும் சந்தையில் அறிமுகமாகிறது; அறிமுகமான 17 வருடங்களுக்கு பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இந்த மறு அறிமுகம் நடைபெறுகிறது. நோக்கியாவின் பெயர்போன பாம்பு விளையாட்டும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் சேர்ந்து நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்களும் அறிமுகமாகின்றன.

←Previous Page
1 … 137 138 139 140 141 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar