தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி கல்விக்காக புதிய தேசிய கல்வியற் கல்லூரி

  • பா.திருஞானம்

kuliyapitiya-collegeகொழும்பு: கொரியா குடியரசினால் வழங்கப்படும் 1911 மில்லியன் நிதியினால் குளியாபிட்டியவில் புதிய தொழில்நுட்பத்திற்கான தேசிய கல்வியற் கல்லூரி ஒன்று அமைக்கபடவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையொப்பம் இடும் நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், கொரியா குடியரசின் விசேட பிரதிநிதி Lee Dong Ku அவர்களின் பங்களிப்பில் கல்வி அமைச்சில் நடைபெற்றது. கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டயாராச்சி, கொரியா குடியரசின் விசேட பிரதிநிதி Lee Dong Ku ஆகியோர் ஒப்பந்தத்தில் கைசாத்து இட்டனர். இந் நிகழ்விற்கு அமைச்சின் அனைத்து செயலாளர்களும் உயர் அதிகதரிகளும் கலந்துக் கொண்டனர்.

புதிதாக அமைய இருக்கும் தொழில்நுட்பத்திற்கான தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

தற்போதைய அரசுக் கொள்கையினுள் தொழில்நுட்பத் துறையைப் பற்றி விசேட கவனம் செலுத்துவதோடு கல்வித்துறையில் திருப்புமுனையாக கருதக்கூடிய இத்தொழிற்துறை தேசிய கல்வியற் கல்லூரி இந்நாட்டிற்கு கிடைத்தது பெரும் பாக்கியமாகும். பரீட்சை அடிப்படையை மாத்திரம் கொண்ட சம்பிரதாய கல்விக்கு அப்பால் சென்று எதிர்கால உலகத்தின் தேவைக்கு ஏற்றவிதத்தில் பொருத்தமான தொழில்நுட்ப திறனுடன் கூடிய தொழிற்துறையை உருவாக்குவது தொலைநோக்கு தேசிய தேவையென அரசு இணங்கண்டுள்ளது.

இலங்கை கல்வி முறையின் திருப்பு முனையாக அமையக்கூடிய பாடநெறியானது தற்போது பாடசாலை அமைப்பிலிருந்தே நடைமுறைப் படுத்தப்படுகின்றது; அதற்கு தேவையான முக்கிய சாதகமாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கான தேசிய மட்டத்திலான தொழில்நுட்ப துறையை தேசிய கல்வியற் கல்லூரி ஒன்று இதுவரை ஸ்தாபிக்கப்படவில்லை.

kuliyapitiya-college

தொழில்நுட்ப பாடநெறியை கற்பிப்பதற்காக தேசிய கல்வியற் கல்லூரி ஒன்றை ஸ்தாபித்தல்¸ அச்செயற்பாட்டை யதார்த்தமாக்குவதற்கு தேவையான ஒரு சாதகமாகும் குறிப்பிட்ட தேசிய கல்வியற் கல்லூரியானது முதற்கட்டமாக உயிரியல் தொழிலநுட்பம் மற்றும் பொறியியல் தொழில்நுட்பத்தையும் கற்பிப்பதற்கான போதனா ஆசிரியர்களை பயிற்றுவிக்க இரண்டு பாநெறிகளை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன்¸ இந்த தேசிய கல்வியற் கல்லூரிகளை நரைடமுறை விவசாய செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப வேலைகளுக்கு தேவைசயான இட வசதிகளுடன் கூடிய சூழலும் தேவைப்படுகின்றது.

கால்நடை உற்பத்தி தொழிற்சாலை, விவசாய ஆய்வு நிலையம் அத்துமடன் விவசாய மற்றும் தோட்டத்துறை போன்ற பாடங்களுக்கு ஏற்ப வெ வ்வேறு கல்விகூடங்களிலிருந்து குறிப்பிட்ட தேசிய கல்வியற் கல்லூரிக்கு வளங்களை பெற்றுக் கொள்ள கூடியதுடன்,   தொடர்புடைய தற்போது வழமையிலுள்ள தொழில் துறை மற்றும் குறிப்பிட்ட  வெ வ்வேறு தொழில் நிலையங்கள் ஊடாக இந்த போதனா ஆசிரியர்களுக்கான நடைமுறை அறிவை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாகும். இந்த தேசிய கல்வியற் கல்லூரியின் போதனா ஆசிரியர்களை வேலைவாய்ப்பு, பயிற்சிக்காக அனுப்புவதால் பிரதேசத்தில் நிலவும் சம்பிரதாய பூர்வமான விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்துவத்றகு தகுந்த நேரடி மற்றும் மறைமுக கல்வியை அதிக இடவசதிகளை பிரதேசத்தின் மாணவ சமூகத்திற்கு கிடைப்பதுடன் அப்பிரதேசத்தின் விவசாய பொருளாதாரத்தில் புதிய எழுச்சியை எதிர்பார்க்க கூடியதாக அமையும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s