யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும்,மலிவு விற்பனையும்

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

hizbullah-exibitionமட்டக்களப்பு: யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தங்களது சுய தொழில்களை இழந்து சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு,மீள்குடியேற்றம், இந்து சமய அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கிவரும் புனர்வாழ்வு அதிகார சபையில் சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்ற சுயதொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும், மலிவு விற்பனையும் 26-02-2017 நேற்று ஞாயிற்றுக்கிழமை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு அருகாமையிலுள்ள மட்டக்களப்பு மாநகர சபையின் பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் என்.பத்மநாதன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சுயதொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியையும்,மலிவு விற்பனையையும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும் ,புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இக் கண்காட்சியில் வடக்கு -கிழக்கு மாகாணங்களின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட 8 மாவட்டங்களையும் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

hizbullah-exibition

இங்கு காட்சிக்காவும்,விற்பனைக்காகவும் வைக்கப்பட்ட பொருட்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தங்களது சுய தொழில்களை இழந்து புனர்வாழ்வு அதிகார சபையில் சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்ற சுயதொழில் முயற்சியாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.

இக் கண்காட்சி அங்குரார்பண நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டப்ளியு.எம்.பி.சி.விக்கிரமசிங்க, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் உட்பட புனர்வாழ்வு அதிகார சபையின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

hizbullah-exibition-jpg-1

பெப்ரவரி நேற்று 26 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த கண்காட்சியும், மலிவு விற்பனையும் இன்று 27 திங்கட்கிழமை நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s