தொடரும் தகாத உறவுகள்…. மற்றுமொரு பெண் மரணம்!

deathமட்டக்களப்பு: மட்டக்களப்பு கிராமங்களில் மத்தியகிழக்கு நாடுகளுக்கு உறவினர்களை அனுப்பி அவர்கள் அனுப்பு பணத்தை செலவழித்துக்கொண்டு தேவையற்ற சமூக கலாச்சார சீரழிவுகள் நடைபெறும் தொடர்ச்சியான எதிரொலி வந்தாறுமூலை பெண்ணிண் மரணம் வெளிப்படுத்துகின்றது.

கடந்த 14-04-2017 அன்று மாலை 04.30 மணியளவில் மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு உறவினர்களால் கொண்டு செல்லப்பட்ட இரு பிள்ளைகளின் தாயான “செல்வராசா சுலோஜினி (27) ” என்பவர் மரணமாகிவிட்டதாகவும், பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஏறாவூர் பொலிஸார் மாலை 07.00மணியளவில் ஏறாவூர் பற்று மரண விசாரணை அதிகாரிக்கு தொலைபேசிமூலம் தெரிவித்துள்ளனர்.

நீதிபதியின் அனுமதியை பெற்று வாருங்கள், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்ல வேண்டும் பொலிசாரை எனஅவர் பணித்ததை தொடர்ந்து இரவு 09.00 மணியளவில் நீதிபதி கொரணர்க்கு அளித்த உத்தரவின் பேரில், சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பாரப்படுத்துங்கள், நாளை (15-04-2017) மேலதிக விசாரணைகளை ஆரம்பிப்போம் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

death

15-04-2017 அன்று காலை 08.30 மணிக்கு ஏறாவூர் பொலிஸாருடன் மட்டக்களப்பு வைத்தியசாலை சென்று சடலத்தை பார்வையிட்டதும், மனதில் ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது அவருக்கு. சடலத்தின் உறவினர்கள் காலை 09.30 மணியளவில்தான் வைத்தியசாலைக்கு வந்தனர்.இவர்களது நேரம் பிந்திய வரவும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. உறவினர்களான சகோதரன் செல்வராசா கருணேசன், அம்மம்மா இளையதம்பி பூரணம் என்பவரது வாக்குமூலம் பெறப்பட்டபோது …

“இறந்தவருக்கு ஒரு மாதமாக காய்ச்சல் இருந்ததாகவும், மூன்று நாட்களாக காய்ச்சல் அதிகரித்து நேற்றுமாலை மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது மரணித்து விட்டதாக தெரிவித்தனர்.

மரணித்தவரின் கணவர் வெளிநாடு சென்று 18 மாதமாகிறது என்றும் தெரிவித்தனர். இவர்களது முறைப்பாட்டுக்கும், சடலத்தை அவதானித்தற்குமிடையில் வேறுபாடு காணப்பட்டதால் பிரேதபரிசோதனைக்கு சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பாக, “தடயவியல் பொலிஸாரை வரவழைத்து இறந்தவரின் வீட்டுச்சூழலையும், சடலத்தையும் பார்வையிட்டு அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு ” ஏறாவூர் பொலிஸாரை பணித்ததை தொடர்ந்து.

உடனடியாக தடயவியல் பொலிஸார் இறந்தவரின் ஆலையடி வீதி, வந்தாறுமூலையிலுள்ள வீட்டை பரிசோதனைக்குட்படுத்தி, சடலத்தையும் பார்வையிட்டு அயலவர்களின் வாக்கு மூலங்களும் பெறப்பட்டு முடிவுற்றதும் நேற்று (16-04-2017) காலை பிரேத பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் கணவர் கடந்த 18 மாதங்களாக மத்திய கிழக்கு நாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையிலேயே இந்த பெண் வயிற்றில் குழந்தையுடன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வந்தாறுமூலை கிராமத்தில் திடீரென மரணமடைந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 28 வயது பெண்ணொருவரின் உடற்கூற்றுப் பரிசோதனை (17) இடம்பெற்றது.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடற் கூற்றுப் பரிசோதனையில் பெண்ணின் வயிற்றில் 4 மாதங்களேயான பெண் சிசு இறந்த நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், பெண்ணுக்கு அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் உறவினர்கள் அளித்த வாக்குமூலத்திலும் முன்னுக்குப்பின் முரண்பாடுகள் காணப்பட்டதால் தடயவியல் நிபுணர்களின் அறிக்கையைப் பெறவும் இறந்த பெண்ணின் உடல் மாதிரிகளை இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

மரணமடைந்த பெண்ணின் உடற் கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறான ஓர் சம்பவத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் மரணமாகி இருந்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s