பாபர் மசூதி இடிப்பு: “நாங்கள் வெளிப்படையாகவே செய்தோம்”

uma bharathiஅயோத்தி: 1992-ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் வழக்கில், உமா பாரதி உள்ளிட்ட 13 பேர், அவர்கள் மீதான குற்றவியல் சதி குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உமா பாரதி, “குற்றச்சாட்டு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ராமர், அயோத்தியா மற்றும் கங்கைக்காக இந்திரப் பதவியாக இருந்தாலும் அதை விட்டு விலக நான் தயாராக இருக்கும் போது, அமைச்சர் பதவி என்பது பெரிய விஷயமில்லை”, என்றார் அவர்.

அயோத்தியில் டிசம்பர் ஆறாம் தேதியன்று தான் இருந்ததை ஒப்புக்கொள்ளும் உமா பாரதி, சதிக் குற்றச்சாட்டை மறுக்கிறார். “நான் அயோத்யாவில் இருந்தது உண்மை தான், ஆனால் இதில் சதி என்ற பேச்சுக்கே இடமில்லை”

uma bharathi

பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆசை தமக்கு இல்லை என்றும், தமது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைப்பார் என்றும் அவர் கூறினார்.

“அங்கு செய்ததை வெளிப்படையாகவே செய்தோம்”என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “ என்னுடைய ராஜினாமாவை கோர காங்கிரசுக்கு உரிமை இல்லை. ஏனெனில் அவர்கள் தான் நாட்டில் அவசரகால நிலையை கொண்டுவந்தார்கள், லட்சக்கணக்கான மக்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்தார்கள். 1984 இல் பத்தாயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர், அந்த சமயத்தில் ராஜீவ்காந்தியின் வீட்டில் இருந்ததால், சோனியா காந்தி, அதற்கு சதித்திட்டம் தீட்டியதாக சொல்லலாமா? “ , என்றார்.

“ உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பிறகு, இனி அற்புதமான ராமர் ஆலயம் கட்டுவதற்கான நேரம் வந்துவிட்ட்து“, என்றும் அவர் குறிப்பிட்டார். அயோத்தியைப் பொறுத்தவரை, நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் தான் சர்ச்சை இருக்கிறது, இது, நீதிமன்றத்திலும் தீர்க்கப்படலாம், நீதிமன்றத்திற்கு வெளியிலும் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

ராமருக்கும், அனுமாருக்கும் நன்றி செலுத்துவதற்காக, வியாழக்கிழமையன்று அயோத்யா செல்லவிருப்பதாகவும் உமா பாரதி கூறுகிறார். “ராமர் ஆலயம் கண்டிப்பாக கட்டப்படும், யாராலும் அதை தடுக்கமுடியாது” என்று உமா பாரதி தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s