-
இப்தார் உணவில் நச்சுத்தன்மையா: 800 பேர் பாதிப்பு
மொசூல்: ஈராக்கில் மொசூலுக்கு அருகே குடிபெயர்ந்தோர் தங்கியிருந்த முகாமில் வழங்கப்பட்ட உணவில் இருந்த நச்சுத்தன்மையால்நூற்றுக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர். மேலும், இதில் ஒரு குழந்தை இறந்துள்ளது.ரமலான் நோன்பு வைத்தவர்கள் மாலையில் நோன்பை துறக்கும்விதமாக உணவு உண்டபோது, அவர்களுக்கு வாந்தி-பேதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
-
திஷார பெரேராவும் இலங்கை இரசிகர்களும்….
– MJ நேற்று இங்கிலாந்து, கார்டிஃப் மைதானத்தில் இடம்பெற்ற ஐ.சி.சி சம்பியன் கிண்ண முக்கிய போட்டியில் இலங்கையும், பாகிஸ்தானும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் சுவரின் மேல் உட்கார்ந்திருக்கும் பூனைபோல், இரு அணியினரதும் வெற்றி-தோல்வி நிர்ணயிக்கப்படக்கூடிய ஓர் உன்னதமான தருணத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அகமட்டின் பிடியை திஷார பெராரோ தவறவிட்டிருந்தார்.
-
அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்
கார்டிஃப்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. கார்டிஃப் சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
-
இலங்கைப் பணிப் பெண்ணுக்கு 15 வருடங்களுக்கு பின் கிடைத்த ரூ.49 இலட்சம்
றியாத்: சவூதி அரேபியாவிற்கு தொழில் புரிய சென்ற இலங்கைப் பணிப் பெண்ணுக்கு 15 வருடங்களுக்கு பின், மீளவும் சம்பளம் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த பெண்ணுக்கு சம்பளத் தொகையாக 49 லட்சத்து 36ஆயிரம் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
-
‘பாவத்திற்கான வரி’: சவுதியில் சிகரெட்டிற்கு இருமடங்கு விலை
றியாத்: சவுதி அரேபியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகளின்படி, புகைபிடிப்பவர்கள் இனிமேல் தங்கள் சிகரெட்டிற்கு இருமடங்கு விலை கொடுக்கவேண்டும் ‘பாவத்திற்கான வரி’ என்று கூறப்படும் இந்த வரி, சிகரெட்டுகளுக்கு மட்டுமல்ல, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களுக்கும் பொருந்தும்.
-
யுத்தமாக மாறும் கத்தார் நெருக்கடி
பேர்லின்: கத்தார் மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர நெருக்கடியானது யுத்தமாக மாறும் ஆபத்து இருப்பதாக ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் சிக்மர் கெப்பிரியல் தெரிவித்துள்ளார். ஜேர்மனிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
-
அப்பத்துடன் பல்டி
இன்றைய அரசியல் உலகில் பதவிக்காகவும் பணத்துக்காகவும் பல்டி அடிப்பதென்பது சாதாரண விடயம். தன் கட்சியோடு முரண்பாட்டுக் கொண்டு அடுத்த பக்கம் பல்டியடிப்பது அல்லது இறுதிவரைக்கும் கட்சியோடு- கட்சித் தலைமையோடு நல்லுறவைப் பேணிவிட்டு மறுநாளே சத்தமின்றி பல்டியடிப்பது என்று இரண்டு வகையான பல்டிகள் இன்று இடம்பெறுகின்றன.
-
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தாக்குதலும், கொல்லப்பட்ட 700க்கும் அதிகமான அதிகாரிகளும்…
MJ 11-06-1990. தமிழீழ விடுதலைப் புலிகளின் தையல் காரராக இருந்த முஸ்லிம் ஒருவரை, பொலிஸார் கைது செய்து வைத்திருந்தனர். அவரை விடுதலை செய்வதற்காகச் சென்ற விடுதலைப் புலிகள், தனது உறுப்பினரை பொலிஸார் விடுதலை செய்யாததால், மட்டு பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த இரு தமிழ் பொலிஸ் அதிகாரிகளை விடுதலை புலிகள் கடத்திச் சென்றனர்.
-
கடற்கரை வீதிக்கு புதிய வெள்ளை நிறத்திலான பாதசாரிகள் கடவைகளை இடும் நடவடிக்கைகள்
– எம்.ரீ. ஹைதர் அலி காத்தான்குடி: காத்தான்குடியிலுள்ள பிரதான வீதிகளுள் ஒன்றான காத்தான்குடி கடற்கரை வீதீயிலுள்ள பாதசாரி கடவைகளை புனரமைப்புச் செய்து புதிய வெள்ளை நிறத்திலான பாதசாரிகள் கடவைகளை இடும் நடவடிக்கைகள் 2017.06.06ஆந்திகதி மேற்கொள்ளப்பட்டது.
-
லண்டன் தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்த சவுதி அணி மறுப்பு
அடிலெய்ட்: அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற சவுதி அரேபியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக் கிண்ண கால்பந்து தகுதி ஆட்டத்தில், லண்டன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.இதில் சவுதி அணி பங்கேற்க மறுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
-
தங்கத்தையே ஆடையாக அணிந்த மணமகள்
சென்னை: தமிழகத்தில் இயங்கிவரும் பிரபல சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.திருமணம் என்றால் மணமகளின் ஆடை அதிக அளவில் கவனம் பெறும், விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு ஜொலிப்பார்கள்.
-
இலங்கை முஸ்லிம்கள் நோக்கி சுழற்றப்படும் இருபக்கமும் கூர்மையான கத்தியே சிங்களப் பேரினவாதமாகும்
இலங்கையில் முஸ்லிம் மக்களை நோக்கி சுழற்றப்படும் இருபக்கமும் கூர்மையான கத்தியே சிங்களப் பேரினவாதமாகும், இதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஒன்று கருத்து ரீதியானது, மற்றையது வன்முறை சார்ந்தது. இலங்கையில் அண்மைக்காலமாக “பொதுபலசேனா” “ராவணபலய” போன்ற அமைப்புகளின் இனவாத செயற்பாடுகளின் மூலதத்துவங்களே இனவாதக் கத்தியின் ஒரு கூர்மையான பக்கமாகும், கருத்து ரீதியான மூலதத்துவங்கள் குறித்து நாம் ஆராய்கின்றபோது அவை மிகவும் ஆபத்தானவை என்பதையும் நாம் அறியமுடியும். அவர்கள் முன்வைக்கும் மூலதத்துவங்களாக,