திஷார பெரேராவும் இலங்கை இரசிகர்களும்….

Malinga srilanka– MJ

நேற்று இங்கிலாந்து, கார்டிஃப் மைதானத்தில் இடம்பெற்ற ஐ.சி.சி சம்பியன் கிண்ண முக்கிய போட்டியில் இலங்கையும், பாகிஸ்தானும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் சுவரின் மேல் உட்கார்ந்திருக்கும் பூனைபோல், இரு அணியினரதும் வெற்றி-தோல்வி நிர்ணயிக்கப்படக்கூடிய ஓர் உன்னதமான தருணத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அகமட்டின் பிடியை திஷார பெராரோ தவறவிட்டிருந்தார்.

மலிங்க வீசிய பந்தில் லாவகமாக திஷார பெரேராவின் கைக்குள் வந்து சேர்ந்த பந்து, கீழே விழுந்தது.

இப்பிடியுடன், இலங்கை அணியின் களத்தடுப்பு வீரர்களின் வெற்றி நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக நழுவிச்சென்று, பின்னர் தோல்வியைத் தழுவியது இலங்கை அணி.

Malinga srilanka

இந்நிலையில், திஷார பெரேரா பிடியைத் தவறச் செய்ததைத் தொடர்ந்து, பெரேராவை சமூகவலைத்தளங்களில் இலங்கை இரசிகர்கள் திட்டி, பழிதீர்த்து வருகின்றனர்.

பிடி எடுப்பதும், தவற விடுவதும், சதம் அடிப்பதும், டக்கில் போவதும் கிரிக்கட்டைப் பொறுத்தவரை சகஜமானதே!

ஆனால் பாகிஸ்தானுடனான இந்தப் போட்டியில் இலங்கை அணியின் இரசிகர்கள் திஷார பெரேராவை மட்டும் பழி தீர்ப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.

நான் துடுப்பாட்டத்தில் எத்தனை தடவை ஓட்டமே பெறாமல் ஆட்டமிழந்திருப்பேன், நான் எத்தனை பிடிகளை தவறவிட்டிருப்பேன் அல்லது எத்தனை விக்கட்டுக்களை வீழ்த்தாமலேயே ஓவரை வீசியிருப்பேன் என்பதை ஒவ்வொருவரும் தனது மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லவேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s