-
மாணவர், ஆசிரியருக்கு கணனி, Tab. வழங்கும் திட்டம் இடைநிறுத்தம்
கொழும்பு: கல்விப் பொதுத் தராதர உயர் தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெப் (Tablet PC) சாதனங்கள் மற்றும் கணனிகள் வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று(20) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
-
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி ஓர் ஆரோக்கியமான வாழ்வை ஏற்படுத்துவோம் (வீடியோ)
இலங்கை, இந்தியா மற்றும் உலகில் பல நாடுகளில் சீனி அல்லது சக்கரை வியாதி என்றழைக்கப்படும் நீரிழிவு (Diabetes) நோயாளிகள் அதிகம் காணப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நோயை கட்டுப்படுத்தி ஓர் ஆரோக்கியமான சமூகமொன்றை ஏற்படுத்தும் முயற்சியில் இந்த வீடியோவை உருவாக்கியுள்ளோம்.. நீரிழிவு நோய் என்றால் என்ன?
-
சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து, “வேரும் விழுதும் -2018” கலைமாலை விழா..! (அறிவித்தல்)
சூரிச்: சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம், “சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து”, எதிர்வரும் 17.03.2018 அன்று சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு, “வேரும் விழுதும் 2018” கலைமாலை விழா (ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்) மற்றும் “விழா மலர்” வெளியீட்டு நிகழ்வானது சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் (Varasithy Mahall, Hütenwiesen str-6, 8101 Dallikön -ZH) நடைபெறவுள்ளது.
-
ஓட்டமாவடியில் முஸ்லிம் காங்கிரசின் வெற்றிக்கு பாக்கீருடைய ஆசிரியர் தொழிலும், அரசியல் அனுபவமும் முக்கிய காரணமா..?
– ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் ஓட்டமாவடி: ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் வரலாறு கண்டிராத வெற்றியினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொள்வதற்கு சகோதரர் பாக்கீர் ஆசிரியருடைய பங்கானாது மிக முக்கியமான ஒன்றாக காணப்பட்டது. தேர்தல் காலத்தில், தான் காத்தான்குடியில் திருமனம் முடிந்திருந்ததும் மட்டுமல்லாமல் தினமும் ஏ/எல் மாணவர்களுக்கு தனது பிரத்தியேக வக்குப்புக்களை முடித்து விட்டு மாலை 7 மணிக்கு பின்னரே ஓட்டமாவடிக்கு வருகை தருவார்.
-
நாளை காத்தான்குடி தள வைத்தியசாலையில் பாரிய இரத்தான முகாம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் ஹாபிஸ் றிஸ்வானின் அனுசரனையுடன் தேசிய இரத்த வங்கி, காத்தான்குடி தள வைத்தியசாலை, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ,Thasbeeh Volunteers Network ,Norfolk Foods ,CARES – Kattankudy என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள பாரிய இரத்தான முகாம் 18-02-2018 நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி தொடக்கம் மதியம் 3 மணி வரை காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.
-
“பலமிருந்தால் நிரூபியுங்கள்- அதுவரை நானே பிரதமர்”- ரணில்
கொழும்பு: அரசியலமைப்பு விதிகளின்படி தானே பிரதமர் பதவியில் தொடர்வேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்.நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் பிரதமரின் ஐக்கிய தேசியக் கட்சி பெருத்த பின்னடைவை சந்தித்த பின்னர், பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தினார்கள்.
-
“விசாரணைகளை திசை திருப்பும் வகையில் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருக்கும் விசமத்தனமான கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்”- NFGG
NFGG ஊடக அறிக்கை “NFGG அலுவலக்கதின் மீதான குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் எதுவும் முடிவுறாத நிலையில் இதில் தனது ஆதரவாளர்களுக்கு எதுவித தொடர்பில்லையெனவும், இது NFGG க்கு உள்ளிருந்தே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது எனவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருக்கிறார். விசமத்தனமான நோக்கத்தோடு விசாரணைகளை திசை திருப்பும் வகையில் அவர் தெரிவித்திருக்கும் இந்த கருத்தை NFGG வன்மையாகக் கண்டிக்கிறது” என NFGG யின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மஹிந்தவுக்கு எதிராக 6.1மில். மக்கள் வாக்களிப்பு
கொழும்பு: 2015 ஜனாதிபதித் தேர்தலில் 5.77 மில்லியன் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 4.95 மில்லியன் வாக்குகளையே பெற்றுள்ளார். இதனால் எமக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வாக்களித்தவர்களை மட்டுமன்றி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்த 6.1 மில்லியன் மக்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகுமென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நேற்று தெரிவித்தார்.
-
மஹிந்தவின் வெற்றிக்கான காரணம்
கொழும்பு: வன்முறை, ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வீழ்த்தப்பட்டார். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கணிசமாக அவருக்கு எதிராக அப்போது வாக்களித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த உள்ளூராட்சி சபை தேர்தல்களில் அவரது பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றியை பெற்றிருக்கிறது.
-
ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான காத்தான்குடி மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட நன்றி
காத்தான்குடி: சகல வட்டாரங்களிலும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய காத்தான்குடி மக்களுக்கும், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் நன்றிகளையும்- பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
-
வாக்களிப்பு நிறைவு
நாடளாவிய ரீதியில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8325 மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு சில நிமிடங்களுக்கு முன் நிறைவுற்றது.
-
வாக்கெடுப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயம்
– எம்.எஸ்.எம்.ஸாகிர் கொழும்பு: நாளை (10) சனிக்கிழமை நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்கச் செல்வோர் தமது அடையாயத்தை உறுதிப்படுத்துவதற்கு கீழ்க்காணும் அட்டைகளுள் ஒன்றை எடுத்துச் செல்லல் வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச் சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரம், அரச சேசை ஓய்வூதிய அடையாள அட்டை, பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மதகுருமார்களுக்கான அடையாள அட்டை, தேர்தல் ஆணைக்குழுவினால்…