Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “வாக்குவாதம் நடந்து முடிந்து சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு வாகனங்களில் வந்தவர்களே பள்ளிவாயல் தாக்குதலை நடாத்தினார்கள்”

    அம்பாறை: அம்பாறை நகரில் ஒரு குழுவினரால் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகளும் ஒரு பள்ளிவாசலும் தாக்கபட்டதை அடுத்து அங்கு ஒரு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.  அப்பகுதி முஸ்லிம்கள் வழங்கிய தகவலின்படி கடந்த இரவு அங்கிருக்கும் முஸ்லிம்களின் உணவு விடுதி ஒன்றுக்கு வந்த சிங்கள மொழியில் பேசிய சிலர், உணவு அருந்திவிட்டு, உணவில் இருந்த கோதுமை மாவின் அவியாத சில பகுதிகளை காண்பித்து “கடைக்காரர்கள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்தை கலந்திருப்பதாக” கூறி குற்றஞ்சாட்டியுள்னர்.

  • பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஹிஸ்புல்லாஹ் அவசர கடிதம்

    அம்பாறை நகரில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல், முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணையொன்றை நடத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.

  • புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சு தொடர்ந்தும் ஹிஸ்புல்லாஹ் வசம்

    புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கீழ் உள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சுப் பதவிகளில் செய்யப்பட்ட மாற்றத்தின் போதும் குறித்த இராஜாங்க அமைச்சுப் பதவி எவ்வித மாற்றங்களுமின்றி தொடர்ந்தும் அவர் வசமே உள்ளது. எனினும், குறித்த இராஜாங்க அமைச்சுப் பதவி அஜித் பீ. பெரேராவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ள போதிலும் அதில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை.

  • பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின் அமைச்சரவையில் இன்று மாற்றம்

    கொழும்பு: தேசிய அரசாங்கத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில்  இன்று (25) ஞாயிறு முன்னெடுக்கப்படவுள்ள அமைச்சரவை மறுசீரமைப்பின்போது இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய மற்றும் அதிகூடிய பொறுப்புக்கள் வழங்கப்படவிருப்பதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, அமைச்சரவை மறுசீரமைப்பின்போது சட்டம் மற்றும் ஒழுங்கு, நெடுஞ்சாலைகள், பொது நிறுவன அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்பு ஆகிய அமைச்சுப் பதவிகளில் பாரிய மாற்றங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • 12 சிறுமிகள் துஷ்பிரயோகம்: 2 பிக்குகள் கைது

    குருநாகல்:  ரஸ்ணாயகபுர, உடஹேதகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருக்கும் 12 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டில் பிக்குகள் இருவர் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 8 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

  • மக்கா ஹரத்தில் பெண்கள் சீட்டு விளையாடியதால் சர்ச்சை!

    MJ மக்கா: கடந்த வெள்ளிக்கிழமை இரவு பதினொரு மணியளவில் மக்கா ஹரத்திற்குள் முகமூடிய நான்கு பெண்கள் உட்கார்ந்து சீட்டு விளையாடியதால் இவ்விடயம் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அல்லாஹ்வினாலும், நபி (ஸல்) அவர்களினாலும் புனித, பிரதானமான ஆலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இவ்விடத்தில் பொழுது போக்கும் இப்பெண்களின் இவ்விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  • சவுதி: கேளிக்கை துறையை மேம்படுத்த 64 பில்லியன் முதலீடு

    றியாத்: பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை துறையை மேம்படுத்தும் வகையில்  சவுதி அரேபியா 64 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உத்தேசித்துள்ளது. மரூன் 5 மற்றும் சர்கியூ டூ சோலெயில் (Maroon 5 and Cirque du Soleil) உட்பட இந்த ஆண்டு மட்டும் 5000 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக பொது பொழுதுபோக்குத் துறை தலைவர் தெரிவித்தார். ரியாத்தில் நாட்டின் முதல் ஓபரா ஹவுஸ் கட்டுமானமும் தொடங்கிவிட்டது.

  • அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தின் 2018- வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு இன்று

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தின் 2018 வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு 23  வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.மணிக்கு காத்தான்குடி -05 ஆற்றங்கரையிலுள்ள காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

  • நிர்பந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளிற்காக வங்கிகளூடாக அரசு வழங்கும் சேவைகளை இஸ்லாமியர்கள் பெற்றுக் கொள்ளலாம்

    ஷெய்க் இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன் “அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் – ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்.” (ஸுரத்துல் அன்ஆம் :119)

  • பேருந்தில் வெடிப்பு -19 பேர் காயம்

    பண்டாரவளை: யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ நோக்கி சென்ற ஒரு பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பில் 12 படையினர் உட்பட 19 பேர் காயமடைந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது.காயமடைந்தவர்களில் 7 ராணுவத்தினரும் 5 விமானப்படையினரும் அடங்குவர். இரு படையினரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

  • இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு

    கொழும்பு: புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான இழப்பீடுகள் அடுத்தவாரமளவில் வழங்கப்படவுள்ளன.

  • சிரியாவில் தொடரும் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 120 பேர் பலி

    டமஸ்கஸ்: சிரியாவில் தலைநகர் டமஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதியின் மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டு முற்றுகைக்கு பின்னர் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் மிகவும் கொடூரமான நாட்களில் திங்கள்கிழமையும் ஒன்றாகும்.

←Previous Page
1 … 100 101 102 103 104 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar