சவுதி: கேளிக்கை துறையை மேம்படுத்த 64 பில்லியன் முதலீடு

Riyadh, Saudi Arabiaறியாத்: பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை துறையை மேம்படுத்தும் வகையில்  சவுதி அரேபியா 64 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உத்தேசித்துள்ளது. மரூன் 5 மற்றும் சர்கியூ டூ சோலெயில் (Maroon 5 and Cirque du Soleil) உட்பட இந்த ஆண்டு மட்டும் 5000 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக பொது பொழுதுபோக்குத் துறை தலைவர் தெரிவித்தார். ரியாத்தில் நாட்டின் முதல் ஓபரா ஹவுஸ் கட்டுமானமும் தொடங்கிவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இளவரசர் முகமது பின் சல்மானால் வெளியிடப்பட்ட விஷன் 2030 என்ற சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதியாகும் இந்த முதலீடு.

நாட்டின் பொருளாதாரத்தை விரிவுபடுத்தவேண்டும், எண்ணெய் வர்த்தகத்தை மட்டுமே பொருளாதாரம் சார்ந்திருக்க்க்கூடாது, கலாசாரம் மற்றும் பொழுதுபோக்குத்துறையில் முதலீட்டை அதிகரிப்பது உட்பட பல மாற்றங்களை கொண்டுவர அவர் விரும்புகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேளிக்கை சினிமா மீதான தடையை தளர்த்தி இருந்தது  சவுதி அரசு. சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், லாஸ் வேகஸ் அளவிற்கான மிகப்பெரிய பொழுதுபோக்கு நகரத்தை ரியாத் அருகே நிர்மாணிக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்தது. இதுமட்டுமல்லாமல், சவுதி அரபியா பெண்கள் தொடர்பான தங்கள் கடுமையான சட்டத்தை தளர்த்தி உள்ளது.

பெண்கள் கால்பந்தாட்ட போட்டியை பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். ஜூன் மாதத்திலிருந்து பெண்கள் வாகனம் ஓட்டவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அனுமதித்து இருந்தது.

பட்டத்து இளவரசர் முகமது, ” அனைத்து சமய நம்பிக்கை, கலாசாரம் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளும் வண்ணம் செளதியை மீண்டும் மிதமான இஸ்லாமிய நாடாக மாற்றுவதுதான் தன் குறிக்கோள்” என்று தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s