Category: Your Kattankudy
-
யார் இந்த டொனால்ட் டிரம்ப்? (வாழ்க்கை வரலாறு)
எந்த ஒரு பொது பதவியையும் வகிக்காத அல்லது ராணுவத்தில் பணி புரியாத முதல் அமெரிக்க அதிபராக டிரம்ப் இருப்பார் வோஷிங்டன் DC: தேர்தலில் அதிபர் பதவிக்காகப் போட்டியிட முடிவெடுக்க நீண்ட காலத்துக்கு முன்பே, டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் மிக பிரபலமான , சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்ட கோடீஸ்வரர். ஆரம்ப கட்டங்களில் அவர் வெல்வது அபூர்வம் என்று கருதப்பட்டது. ஆனால் இப்போது அவர்தான் அடுத்த அமெரிக்க அதிபர். குடிவரவுப் பிரச்சனையில் அவருடைய சர்ச்சைக்குரிய நிலைப்பாடு மற்றும் சினத்தைத் தூண்டிய…
-
ட்ரம்பிற்கு ஆதரவளித்தோர் அதிகமானோர் ஆண்கள்!
வோஷிங்டன் DC: அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றிக் கொடி நாட்டிய நிலையில், அவரது வெற்றிக்குக் காரணம் பெண்களா, ஆண்களா, முதியவர்களா, எந்த இனத்தவர் யார் பக்கம் நின்றார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஒரு சுவாரஸ்யமான புள்ளிவிவரம்தான் உங்களுக்காகக் கொடுக்கப்படுகிறது. ஆண்களில் பெரும்பான்மையானவர்கள் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், பெண்கள் ஆதரவில் பெரும்பங்கு ஹிலரிக்குத்தான்.
-
பணத்துக்கும், பகட்டுக்கும், பதவிக்கும், நாங்கள் அடிமைப்பட்டு இருக்கும்வரைக்கும் தயாகமகே போன்ற பணக்கார இனவாதிகளுக்கு வாசிதான்
முகம்மத் இக்பால், சாய்ந்தமருது கடந்த திங்கள் 07.11.2016 ஆம் திகதி அம்பாறை கச்சேரியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாணிக்கமடுவில் புத்தர் சிலை வைக்கப்பட்டது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விவகாரத்தினை நிகழ்ச்சி நிரழலில் சேர்த்துக்கொள்ளும் விடயத்தில் அமைச்சர் தயாகமகேவின் தடையையும் தாண்டி மன்சூரின் கடும் அழுத்தம் காரணமாகவே சேர்த்துக்கொள்ளப்பட்டது. இறுதியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மன்சூரை சிக்கலில் மாட்டிவிட முன்னாள் மாகான அமைச்சர்…
-
அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவு
அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
-
டுபாய்-அபுதாபி நகரங்களுக்கிடையே ஒலியைவிட வேகமான போக்குவரத்துத் திட்டம்
டுபாய்: டுபாயிலிருந்து அருகாமையில் உள்ள அபுதாபிக்கு ஏறக்குறைய இரண்டு மணி நேரமாக உள்ள பயணத்தை 12 நிமிடங்களாக குறைக்கும் ஒலி வேகத்தை விட துரிதமான (சூப்பர்சோனிக்) போக்குவரத்து அமைப்பை உருவாக்குவது தொடர்பாக மதிப்பீடு செய்யும் ஓர் ஒப்பந்தத்தில் அமெரிக்க நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்ய துபாய் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
-
இந்தியாவில் நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது – மோடி
டெல்லி: இன்றுநள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தவறுகளை களைய வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, கறுப்பு பணத்தை ஒழிக்க தனது அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: ஹிலாரி 47%, ட்ரம்ப் 43%
– இனியவன் வோஷிங்டன் DC: இன்று நவம்பர் 8ம் திகதி உலகின் கவனத்தைத் திசைதிருப்பியிருக்கும் அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறுகிறது. ஒரு வருடங்களுக்குள் அமெரிக்கர்களை மாத்திரமல்ல, முழு உலகையும் தனது பேச்சால் கவர்ந்திழுத்துள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ‘புன்னகை அரசி’ ஹிலாரி ஹிலிண்டன் ஆகியோருக்கிடையில் பலத்த போட்டிகள் 50 மாநிலங்களிலும் இடம்பெற்று வருகின்றன.
-
சவுதியில் மர்மமாக இறந்துள்ளதாக கூறப்பட்ட இலங்கை பணிப்பெண் அடையாளம் காணப்பட்டார்
மஸ்கெலியா: சவுதி அரேபியாவில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.மரணமடைந்த பெண், நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள பெருந்தோட்டமொன்றை சேர்ந்த 39 வயதான பழனியாண்டி கற்பகவல்லி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
-
நதியில் திரும்ப விடப்பட்ட ராட்சத முதலை
மாத்தறை: மாத்தறை பகுதியில் சுமார் 18 அடி நீளம் 1000 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டு மீண்டும் நில்வால நதியில் விடப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சிலர், இலங்கையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய முதலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என நம்புகின்றனர்.
-
மருத்துவ உதவி கோரல்
புத்தளம் நாகவில்லு ரசூல் நகரைச் சேர்ந்த அஷ்ஷெய்க் செய்யத் முஹம்மது தமீம் (தீனி) என்பவர் இரு சிறுநீரங்களும் பழுதடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக அவதிப்படுகிறார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கு உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்காக 10 இலட்சம் ரூபா தேவைப்படும் எனவும் இவரைப் பரிசோதனை செய்த வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
-
ஜனாஸா அறிவித்தல்
காத்தான்குடியைச் சேர்ந்தவரும்1973 ஆம் ஆண்டு முதல் ஜாமியாஹ் நாளீமியா மஸ்ஜித் பராமரிப்பாளராகவும் முஅத்தினாகவும் 43 வருடங்கள் பணி புரிந்த அல் ஹாஜ் அப்துல் கபூஃர் (கபூஃர்) நானா இன்று வபாத் ஆனார், இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்,
-
மகிந்த அணிக்குள் பிளவு
கொழும்பு: தற்போது கூட்டு எதிர்க்கட்சியின் பெரும்பான்மையினர் பசில் எதிர்ப்பு கொள்கையை பின்பற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எதிர்ப்பிற்கு முன்னணியில் இருப்பது மஹிந்தானந்த அலுத்கமகே என தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு ஆதரவாக வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, பவித்ரா வன்னியாராச்சி போன்ற உறுப்பினர்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமை எதிர்வரும் நாட்களில் கூட்டு எதிர்க்கட்சி பாரிய பிளவு ஒன்று ஏற்படக்கூடிய அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.