Category: Your Kattankudy
-
முப்படையினருக்கான வரவேற்பு மண்டபம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு
நீர்கொழும்பு கடல் ஏரி (களப்பு) பிரதேசத்தில் விமான படையினால் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடிகளைக் கொண்ட வரவேற்பு மண்டபம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவினால் திறந்துவைக்கப்பட்டது.
-
அமைச்சின் அனுமதியின்றி மாணவர்கள் வெளிநாடு செல்ல தடை!
கல்வி அமைச்சு மீள் சுற்றறிக்கை! வெளிநாட்டு பயிற்சிகளுக்கும் கலந்துரையாடல்களுக்கும் கல்வி அமைச்சின் அனுமதியின்றி பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லக் கூடாதென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
-
2012 மட்டக்களப்பு உள்ளுராட்சி மகுடம் விருது விழாவில் காத்தான்குடி நகர சபைக்கு நான்கு விருதுகள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் இன்று 04-03-2013 திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாநகர சபை நகர மண்டபத்தில் மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ந.சத்தியானந்தி தலைமையில் இடம்பெற்ற 2012 மட்டக்களப்பு உள்ளுராட்சி மகுடம் விருது விழாவில் காத்தான்குடி நகர சபைக்கு நான்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
-
2012 மட்டக்களப்பு உள்ளுராட்சி மகுடம் விருது விழா மட்டக்களப்பில் – கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் பிரதம அதிதி
– பழுலுல்லாஹ் பர்ஹான் 2012 மட்டக்களப்பு உள்ளுராட்சி மகுடம் விருது விழா இன்று 04-03-2013 திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாநகர சபை நகர மண்டபத்தில் மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ந.சத்தியானந்தி தலைமையில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது.
-
கிழக்கு மாகாண சபையில் பொதுபல சேனாவுக்கு அமீர் அலி சாட்டை!
– பழுலுல்லாஹ் பர்ஹான் கௌரவ தவிசாளர் அவர்களே, இன்று ‘ஹலால்’ சம்பந்தமாக இந்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைக்கு ஓர் பிரேரணை கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அடிப்படையில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள் கௌரவ தலைவி அவர்களே, முஸ்லிம்களை பொறுத்த வரையில் அவர்கள் வரையறையோடு வாழ வேண்டிதொரு சமூகம். அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக ‘புனித குர்ஆன்’ என்கின்ற நூல் இருக்கின்றது.
-
இலங்கையில் மேலும் இரு மசூதிகள் மீது தாக்குதல்
இலங்கையில் மேலும் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளதாக முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.
-
ஜெனிவாவில் இன்று இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் தாக்கல்- 30 நாடுகள் ஆதரவு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இன்று தாக்கல் செய்யும் தீர்மானத்துக்கு 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
-
ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூரில் ஒருவர் தீக்குளிப்பு!
இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி என்பவர் தீக்குளித்தார். அவர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
-
வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் மண்முனை ஆற்றுக்கு மேலால் சேவையில் ஈடுபடும் இரண்டு பாதையில் ஒரு பாதை கோளாறு காரணமாக மூன்று தினங்கள் இடைநிறுத்தம்-மக்கள் அவதி
– பழுலுல்லாஹ் பர்ஹான் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய திணைக்களத்தினால் கிழக்கில் படுவான்கரையயும் – எழுவான்கரையையும் இணைக்கும் முகமாக மண்முனை வாவிக்கு மேலால் சேவையில் ஈடுபடும் இரு இயந்நிர படகுகளில் ஒரு படகு (பாதை) 3தினங்களாக இயந்நிர படகிலுள்ள ஓட்டையில் ஆற்று நீர் புகுந்துள்ள காரணத்தால் சேவையில் ஈடுபடாமல் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நளாந்தம் பாதையை பயன்படுத்தும் பிரயாணிகள்; விசனம் தெரிவிக்கின்றனர்.
-
வங்காள விரிகுடா காத்தான்குடி கடலில் தாழமுக்கம்- மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
-பழுலுல்லாஹ் பர்ஹான் வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தினால் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச கடற்பகுதிகளில் கடல் காற்றுடன் சற்று அலை கொந்தளிப்பாக காணப்படுகின்றது. இதனால் மீனவர்கள் இன்று திங்கட்கிழமை மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. வெளியிடங்களிலிருந்து மீன்கள் கொள்வனவு செய்யப்பட்டு இங்கு கொண்டு வருவதால் குறித்த பிரதேசத்தில் கடல் மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
-
நேற்றிரவு தொடக்கம் மட்டக்களப்பில் மீண்டும் அடை மழை – தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில்
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை வழமை நிலைக்குத்திரும்பி வெள்ளம் வடிந்து மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்த நிலையில் மிகநீண்ட நாளைக்குப் பின்னர் நேற்றிரவிலிருந்து மீண்டும் அடை மழை பெய்துவருவதால் தாழ் நிலப்பிரதேசங்களில் மீண்டும் வெள்ளஅபாயம் ஏற்பட்டுள்ளது.
-
வன்னி மாவட்டத்துக்கு வெளி மாவட்டத்தில் இருந்து கடமையாற்ற வருகின்ற பிற மாவட்ட அதிகாரிகளுக்கு பிழையான தகவல்கைளை இங்கிருக்கின்ற சில அதிகாரிகள் வழங்குகின்றனர்
– இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் வன்னி மாவட்டத்துக்கு வெளி மாவட்டத்தில் இருந்து கடமையாற்ற வருகின்ற பிற மாவட்ட அதிகாரிகளுக்கு பிழையான தகவல்கைளை இங்கிருக்கின்ற சில அதிகாரிகள் வழங்கிவருவதினால், இம்மாவட்டத்தில் வாழும் மக்கள் பெரும் இழப்புக்களை சந்திக்க நேரிடுவதாக தெரிவித்துள்ள கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று புலிகள் இல்லாத நிலையில் அதனை வளர்ப்பதற்கு அன்று முதல் உதவி செய்துவருகின்ற பலர் இன்று இவ்வாறான நிலையினை மேற்கொள்கின்றனர் என்று கூறினார்.