Category: Your Kattankudy
-
ஷகிப், நூருல் ஹசனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
கொழும்பு: நேற்று (16) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஆறாவது 20 ஓவர் கிரிக்கட் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகீப் அல் ஹசன் மற்றும் மேலதிக வீரர் நூருல் ஹசன் ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த இருவருடைய போட்டிக்கான சம்பளத்தில் 25 சதவீதம் அபராதமாக அறவிடப்படவுள்ளதுடன் மறைபுள்ளியும் வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
-
ரிதிதென்ன-ஜெயந்தியாய பிரதேசங்களை இணைக்கும் வகையில் 80 மில்லியன் ரூபாய் செலவில் புதிய பாலம்
ரிதிதென்ன: யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான ஜெயந்தியாய மற்றும் ரிதிதென்ன ஆகிய பிரதேசங்களை இணைக்கும் வகையில் 80 மில்லியன் ரூபாய் செலவில் புதிய பாலம் அமைக்கும் வேலைத்திட்டம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கோறலைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
-
பங்காளியின் எல்லையற்ற மகிழ்ச்சியில் கண்ணாடிகள் உடைப்பு: இறுதிப்போட்டியில் இந்தியா-பங்களாதேஷ்
கொழும்பு: சுதந்திரக்கிண்ணத் தொடரின் நேற்றிரவு இடம்பெற்ற முக்கியமான போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் தோற்கடித்த பங்களாதேஷ் அணி இலங்கையின் சுதந்திரக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் மோதவுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இப் போட்டியில் ஆரம்பம் முதல் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிக்கப்பட ஒருகட்டத்தில் 41 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
-
நீங்கள் அறிந்திராத அந்த வயோதிபரின் வர்த்தக வரலாறு
ஹார்லேன்ட் டேவிட் சண்டேர்ஸ், இவர் பல பில்லியன் டொலர் மதிப்புள்ள துரித உணவகமான கென்டக்கி ஃபிரைட் சிக்கனின் (கேஎஃப்சி) நிறுவனர். சாண்டர்ஸ் இராணுவத்திற்கு சேவை செய்யவில்லை, ஆனால் கென்டக்கி கர்னல் என்று அழைக்கபெற்றார். அவர் தனது 49வது வயதில் “இரகசிய ரெசிபி”யை முடிவு செய்து, தனது 65 வயதில் அதனை வணிகமாக்க துவங்கினார். ஆனால் இந்த நிகழ்வுகளுக்கு முன்னால் கர்னல் வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு இனிமையானது அல்ல.
-
“பிரிட்டன் அதிகாரிகளை வெளியேற்றுவோம்” : ரஷ்யா
லண்டன்: பிரிட்டனில் பணியாற்றும், ரஷ்யாவைச் சேர்ந்த 23 ராஜீய அலுவலர்களை வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ரஷ்யாவில் பணியாற்றும் பிரிட்டன் அலுவலர்களும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.இந்த வெளியேற்றம் நிச்சயம் நடக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறியுள்ளார்.
-
இலங்கை கல்வி வரலாற்றில் முதற் தடவையாக தரம் 01, தரம் 02 மாணவர்களுக்கு ஆங்கில பாட புத்தகம் அறிமுகம்
பா.திருஞானம் மகரகம: இலங்கையின் கல்வி கொள்கைக்கு அமைய இதுவரை காலப்பகுதியில் பாடசாலையில் பாட திட்டத்தில் ஆங்கில கல்வியானது தரம் 03 இல் இருந்தே ஆரம்பமானது. தற்போது இப்பாட திட்டம் தரம் ஒன்றில் இருந்து ஆரபிப்பதற்கான நடவடிக்கையின் கல்வி அமைச்சு மேற் கொண்டு மகரகம தேசிய கல்வியற் நிறுவகம் அதனை (15.03.2018) முதல் அறிமுகம் செய்து அதற்கான பாட புத்தகமும் இருவட்டும் வெளியிட்டு உள்ளது.
-
“ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து என்பதே கிடையாது”- உலக சுகாதார நிறுவனம்
கொழும்பு: அம்பாறையில் முஸ்லிம்களின் உணவகத்தில் ஆண்மையிழக்கச் செய்யும் மருந்து கலந்த உணவு வழங்கப்பட்டதாகக் கூறி சிலர் அந்த உணவகத்தை தாக்கியதுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஏனைய சொத்துக்கள், பள்ளிவாசல் ஆகியவற்றையும் தாக்கினர். பின்னர் கண்டியில் வேறு ஒரு காரணத்தை காட்டி தொடங்கிய வன்செயல்கள் பெரிதாகி முஸ்லிம் மக்களுக்கு பெருத்த சேதத்தை உருவாக்கியது.
-
வைபர் தடை நீக்கம்
கொழும்பு: இன்று நள்ளிரவு (14) முதல் வைபர் (Viber) பிரத்தியேக செய்தி பரிமாற்ற செயலி பாவனைக்கான தடை நீக்கப்படவுள்ளது. வெளிநாட்டிலுள்ள உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்துவதில் சிரமம் தொடர்பில் கருத்திற்கொண்டு அரசாங்கம் குறித்த முடிவை எடுத்துள்ளதாக, ஊடக அறிவித்தலொன்றை விடுத்துள்ள அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
-
பெயர் குறிப்பிட விரும்பாத கண்டியைச்சேர்ந்த சகோதரர் ஒருவரூடாக பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு நிதியுதவி
– எம்.ரீ. ஹைதர் அலி ஓட்டமாவடி: பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்புக்கு இலங்கை கண்டியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத சகோதரர் ஒருவரின் முயற்சி மூலம் தான் செய்த உதவியை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பாத கட்டாரின் பிரபல நிறுவனமொன்றின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஒருவரிடமிருந்து சுமார் 3000 கட்டார் றியாழ்கள் (126356 இலங்கை ரூபாய்கள்) கிடைக்கப்பெற்றுள்ளன.
-
“1983 ஜூலை கலவரம் போன்றதே கண்டி முஸ்லிகள் மீதான தாக்குதல்” – அமைச்சர் ஹக்கீம்
கண்டி: இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டதுபோல, கண்டி மாவட்டத்தில் இப்போது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து சிங்கள இனவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களிடம் கூறியுள்ளார். இவர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பேசயபோது, இதன் மூலம் இலங்கையில் முஸ்லிம்களின் பொருளாதாரத்துக்கு கணிசமான பாதிப்பை இந்த வன்செயல்கள் ஏற்படுத்தியுள்ளன என்று கவலை வெளியிட்டார்.
-
இதற்கு மேல் என்ன வேண்டும்..?
– இர்ஷாட் ஏ. காதர் கொழும்பு: பேரினவாதக் குழு இலங்கை முஸ்லிம்களை நோக்கி திட்டமிட்டு நகர்த்தப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை சிரியாவுக்காக பேரளவில் குரல்கொடுத்துக்கொண்டிருந்த நாம், நமக்கு நாமே குரல் கொடுக்க முடியாமல் முடிக்கப்பட்டிருக்கிறோம் இன்று. இலங்கை வரலாற்றில் அதிகூடுதலான எண்ணிக்கையில் பள்ளிவாயல்கள் கடந்த 6 நாட்களுக்குள் தாக்கப்பட்டிருக்கின்றன. பெறுமதியான முஸ்லிம் வர்த்தகர்களின் சொத்துக்களும் தீ வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றையும் கடந்து ஒரு உயிர் பறித்தெடுக்கப்பட்டிருக்கிறது.
-
முகநூல் “தேங்காய்ப்பூ” சண்டியர்களுக்கு…
AF- 49 இனவாதத் தீ இலங்கையில் நள்ளிரவைத் தாண்டி பரவிக்கொண்டிருக்கிறது. இலங்கையில் குறுகிய காலப்பகுதிக்குள் தாக்கப்பட்டுள்ள அதிகளவான பள்ளிவாயல்கள் கண்டி மாவட்டத்தில் பதிவாகிக்கொண்டிருக்கிறது. இந்நேரத்தில் முகநூலில் வீர வசனம் பேசுவோர், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், வாகனங்களுக்குள் இருந்துகொண்டு “ஷெல்ஃபி” காணொளி வெளியிடுபவர்கள், பிறரை நையாண்டி செய்வோர் போன்றோர் இனியும் காலங்களைக் கடத்திக்கொண்டிருக்காமல், தங்களது கழுத்தில் கத்தியை வைப்பதற்கு முன் தங்களையும், தனது ஊரையும் எதிரியைச் சந்திப்பதற்கு தயாராக வைத்திருங்கள்.