முகநூல் “தேங்காய்ப்பூ” சண்டியர்களுக்கு…

  • AF- 49

kandy attack mosqueஇனவாதத் தீ இலங்கையில் நள்ளிரவைத் தாண்டி பரவிக்கொண்டிருக்கிறது. இலங்கையில் குறுகிய காலப்பகுதிக்குள் தாக்கப்பட்டுள்ள அதிகளவான பள்ளிவாயல்கள் கண்டி மாவட்டத்தில் பதிவாகிக்கொண்டிருக்கிறது. இந்நேரத்தில் முகநூலில் வீர வசனம் பேசுவோர், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், வாகனங்களுக்குள் இருந்துகொண்டு “ஷெல்ஃபி” காணொளி வெளியிடுபவர்கள், பிறரை நையாண்டி செய்வோர் போன்றோர் இனியும் காலங்களைக் கடத்திக்கொண்டிருக்காமல், தங்களது கழுத்தில் கத்தியை வைப்பதற்கு முன் தங்களையும், தனது ஊரையும் எதிரியைச் சந்திப்பதற்கு தயாராக வைத்திருங்கள்.

அதிகாலை விடிவதற்குள் எத்தனை அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை அறிவதற்கு ஆவலாக இருப்பதைவிட, அச்சத்தில் இருக்கிறது எமது உம்மத்து.

அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவும், எமது 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிக்கு சோரம் போவதற்கே தங்களை அடகு வைத்திருக்கின்றனர்.  இவர்களால் பேச முடியாது. இனிமேல் இவர்களால் கியாமத் நாள் வரை எந்த விடிவும் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படப்போவதில்லை.

குறிப்பாக கடந்த 2012 இல் இருந்து, இலங்கை முஸ்லிம்கள் மீது பேரினவாதக் காடையர்களால் மேற்கொள்ளப்படும் மிருகத்தனமானக தாக்குதலை இதுவரையிலும் அ.இ.ஜம்மிய்யத்துல் உலமாவோ, எமது பாராளுமன்ற பிரதிநிதிகளோ பகிரங்கமாகக் கண்டிக்கவில்லை. அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை.

kandy attack mosque

yourkattankudy/kandy

சிரியாவுக்கு பிரிஸ்டல் போர்ட் பிடிப்பதற்கே இவர்கள் லாயிக்கு!

அரபு நாடுகளின் ஊடகங்களுக்கும், அரபு நாடுகளின் தூதுவராலயங்களுக்கும் அழுத்கம கலவரம் இடம்பெற்றபோது இலங்கை முஸ்லிம்கள் தாக்கப்படும் செய்தியினை நாம் மின்னஞ்சல் ஊடாக அனுப்பி இருந்தோம். இப்போதும் அதனை செய்து வருகிறோம்.

முகநூல் போராளிகள் இருக்கிற வீராப்புகளைவிட்டு விட்டு, ஆங்கில, அரபு மொழியில் ஆவனங்களை தயாரித்து அரபுலக தூதரகங்களுக்கு, அறிவித்து, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க கோருங்கள்.

நிச்சயமாக எம் அனைவரையும் காப்பாற்றுகிறவன் அல்லாஹ் ஒருவனே!

எமது செயற்பாட்டில்தான் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.

katugastota mosque attack

yourkattankudy/kandy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s