ஷகிப், நூருல் ஹசனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

bangladesh srilanka nidhahas 2018கொழும்பு: நேற்று (16) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஆறாவது 20 ஓவர் கிரிக்கட்  போட்டியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகீப் அல் ஹசன் மற்றும் மேலதிக வீரர் நூருல் ஹசன் ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த இருவருடைய போட்டிக்கான சம்பளத்தில் 25 சதவீதம் அபராதமாக அறவிடப்படவுள்ளதுடன் மறைபுள்ளியும் வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

ICC விதிமுறை மட்டம் 1 ஐ மீறியமை தொடர்பில் அவர்கள் இருவருக்கும் தலா ஒரு மறை புள்ளி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இலங்கையின் 70வது சுதந்திரதின நிமித்தம் நேற்று (16) நடைபெற்ற ஆறாவது 20 ஓவர் கிரிக்கட் போட்டியின் இறுதி ஓவரில் நடுவரால் நோபோல் (No Ball) சமிக்ஞை செய்யப்படவில்லை என தெரிவித்து குழப்பம் விளைவித்ததுடன் மிக மோசமான முறையிலும் நடந்துகொண்டனர்.

bangladesh srilanka nidhahas 2018

இப்போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றதோடு, நாளை (18) இந்தியாவுடன் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s