Author: yourkattankudy.com
-
யால சரணாலயத்திற்கு விஷேட அதிரடிப்படை பாதுகாப்பு
லங்காதீப – தமிழாக்கம். எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: யால சரணாலயத்தில் வேட்டையாடச் சென்றவர் எனத் தெரிவிக்கப்படும் நபரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததைத் தொடர்ந்து, வனசீவராசிகள் அலுவலகத்தில் கடமையாற்றுவோருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்தினையடுத்து பொலீஸ் விஷேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
அசாட்சாலி விடயத்தில் நான் முன்வைத்த காலை பின்வைக்கப்போவதில்லை உவைஸ்
(நேர்காணல், காணொளி) – ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் அஹமட் இர்ஸாட்:– உங்களுடைய மனைவி சம்பந்தமன பிரச்சனையான தேசியத்தில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சகல மக்களாலும் பேசப்படும் பிரச்சனையாக தற்பொழுது பெறுக்கெடுத்து வருக்கின்றது. நீங்கள் அதனை தற்பொழுது எந்தக் கோணத்தில் பார்க்கின்றீர்கள்?
-
ஜமிய்யத்துஸ் சபாப் நிறுவனம் 18 வது முறையாக ஏற்பாடு செய்த இலவச கண் சிகி்ச்சை முகாம் புத்தளம் குவைத் வைத்தியசாலையில்
புத்தளம் குவைத் வைத்தியசாலையிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: ஜமிய்யத்துஸ் சபாப் நிறுவனம் 18 வது முறையாக ஏற்பாடு செய்த இலவச கண் சிகி்ச்சை முகாம் புத்தளம் குவைத் வைத்தியசாலையில் 3 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை இடம் பெறுகின்றது. இம்முறை 500 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை மற்றும் கண்ணில் வெள்ளை படலத் திரையினை அகற்றுதல் என்பன இடம் பெறுகின்றது.நாடு தழுவிய முறையில் இந்த கண் சிகிச்சை முகாம் இடம் பெறுவதாக ஜமிய்யத்…
-
வெகுவிமர்சியாக நிறைவு பெற்ற சாய்ந்தமருது வாழ்வின் எழுச்சி உற்பத்தி கண்காட்சியும் விற்பனையும்
ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாழ்வின் எழுச்சி பயனாளிகளின் ‘முத்தான வியர்வை எனும் தொனிப்பொருளிலான வாழ்வின் எழுச்சி உற்பத்தி கண்காட்சியும் விற்பனையும் சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்ட வளாகத்தில் நேற்று வெகு விமர்சியாக இடம்பெற்றது.
-
மூவின மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் காதர் ஹாஜியார் – அனுதாபச் செய்தியில் பிரதி அமைச்சர் ஹரீஸ்
ஹாசிப் யாஸீன் கொழும்பு: மூவின மக்களின் நன்மதிப்பைப் பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம்.ஏ.காதர் ஹாஜியாரின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கும் நாட்டிக்கும் பேரிழப்பாகும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அனுதாபச் செய்தி தெரிவித்துள்ளார்.
-
காதர் ஹாஜியாரின் இழப்பு முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் இழப்பாகும்-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும்,நீண்ட காலம் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சராகவும் செயற்பட்ட மர்ஹூம் ஏ.ஆர்.அப்துல் காதர் ஹாஜியாரின் மறைவு குறித்து தான் ஆழ்ந்த துன்பமும் கவலையும் அடைவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும்,மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாமலின் கடத்தல் வியாபாரம்
கொழும்பு: சட்டவிரோதமான முறையில் சம்பாதிக்கும் மில்லியன் கணக்கிலான பணத்தை வர்த்தகங்களுக்கு பயன்படுத்தி நிதி சந்தையில் இணைத்துகொள்ளும் கடத்தல் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஈடுபடுவதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டு தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது. அவரின் உரிமைத்துவத்தின் கீழ் செயற்படுகின்ற 6 நிறுவனங்கள் இக் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.
-
சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கைக்குள் அனுமதியில்லை: ஜனாதிபதி மைத்திரி
கொழும்பு: இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகள், இலங்கையின் நீதித்துறைக்குள்ளே இடம்பெறுவதற்கான வழிகள் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விசாரணைகளின் போது எந்தவொரு வெளிநாட்டு சட்டத்தர ணிகளையும் நீதிமன்ற வாதங்களுக்கு இலங்கை அனுமதிக்காது என்று ஜனாதிபதியின் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
மட்டு மாவட்ட ஐ.தே.க. வின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் கவனம் செலுத்தப்படும் – கபீர் ஹாஷிம் உறுதி
– எம்.ஐ. அப்துல் நஸார் காத்தன்குடி: மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஜக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் எழுத்து மூலம் தனக்கு அறித்துள்ளதாக காத்தன்குடி ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழுவைச் சேர்ந்த எச்.எம்.எம். முஸ்தபா தெரிவித்தார்.
-
திரியதரு பிரணாம புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு
இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: திரியதரு பிரணாம புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று (03) மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,ராஜித சேனாரத்ன, வாசுதேவ நாணயக்கார எம்.பி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-
கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்ற உத்தியோகத்தர்களுக்கான இரு நாள் வதிவிடப் பயிற்சி நெறி
எம்.ஐ.அப்துல் நஸார் திருகோணமலை: புற நெகும செயற்திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்றங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான இரு நாள் வதிவிடப் பயிற்சி நெறி கடந்த 01ஆம் மற்றும் 02ஆந் திகதிகளில் திருகோணமலை முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது.
-
புத்தளத்தில் இடம்பெற்ற ஹஜ்ஜூப் பெருநாள் விளையாட்டுப் போட்டிகள்
இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: ஹஜ்ஜூப் பெருநாள் விளைாயட்டுப் போட்டிகள் இன்றும் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் நடை பெற்றது.மோட்டார் சைக்கிள், குதிரை, மற்றும் ரேஸ் கரத்தைகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றன. பிரதம அதிதியாக கைத்தொழில், வணித் துறை அமைச்சர் றிசத் பதியுதீன் கலந்து கொண்டு பரிசிள்களை வழங்கி வைத்தார்.