-
அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்ற, பொறுப்பேற்காத முஸ்லிம் எம்.பி.க்கள்
கொழும்பு: தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சரவை அந்தஸ்துள்ள, இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளில் பதவிப்பிரமாணம் செய்தனர். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.
-
ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற சகோதரி நபூரா சஊதி மலிக் பைஸல் ஆஸ்பத்திரியில் காலமானார்
மக்கா: காத்தான்குடி ஸஹ்வான் ட்ரவல்ஸ் நிறுவணத்துடன் ( எம்முடன்) ஹஜ் கடமையை நகறைவேற்ற வந்த சகோதரி நபூரா அவர்கள் இன்று காலை மலிக் பைஸல் ஆஸ்பத்திரியில் வபாத்தானார்கள்…. இன்னாலில்லாஹ்….. உம்றாவை சிறப்பாக நிறைவேற்றியதுடன் ஹரத்தில் பல நாள் தொழுகையையும் நிறைவேற்றியிருந்தார்.
-
“PMGG உறுப்பினர்களையும் ஸஹ்ரானையும் விசாரித்தேன்”- மேஜர் ஜெனரல் எஸ்.எ.எ.எல் பெரேரா
கொழும்பு: கிழக்கில் நான் கட்டளை தளபதியாக இருந்த காலத்தில் சஹரான் மற்றும் சிலர் அடிப்படைவாத அமைப்புகளை உருவாக்கி மோசமான கருத்துக்களை பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அதன்போது சஹரானையும் தவ்ஹித் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர்களையும் வரவழைத்து எச்சரித்து அனுப்பினேன். ஆனால் அப்போது சஹரான் யாரென்று எனக்கு தெரியவில்லை என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் எஸ்.எ.எ.எல் பெரேரா தெரிவித்தார்.
-
பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் 8 பேருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவு
– பாறுக் ஷிஹான் கல்முனை: பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான 8 பேரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. முதல் தடவையாக கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் வியாழக்கிழமை (25) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
-
ரவுப் ஹக்கீமை சாய்ந்தமருது பள்ளிவாசல் குழுவினர் சந்தித்ததானது யாருக்கு கிடைத்த வெற்றி ?
முகம்மத் இக்பால் சாய்ந்தமருது சாய்ந்தமருது: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைமையிலான சுயேச்சை குழுவினர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியதுதான் நேற்றைய தலைப்பு செய்தியாகும். அரசியல் என்னும்போது இவைகளெல்லாம் ஆச்சர்யப்பட கூடிய விடயமல்ல. காலச் சுற்றோட்டத்தில் சாதாரணமாக நடைபெறுகின்ற விடயங்களாகும்.
-
தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்திய வெடிபொருட்கள் சட்ட ரீதியாக விநியோகிக்கப்பட்டவையா?
உயிர்த்த ஞாயிறு தினத்தில் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் போது பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள், வெலிசறை கடற்படை முகாமைன் கீழ் உள்ள வெடிபொருள் களஞ்சியத்தில் இருந்து சட்ட ரீதியான செயற்பாடுகளுக்காக, உரிய நடை முறைகளைப் பின்பற்றி விநியோகிக்கப்பட்டவையா என பாதுகாப்பு தரப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
-
‘அலியார் சந்தி’ தொடக்கம் ‘ஷங்ரி லா’ வரை (3)
உசேன்YKK 3. ‘முகமட் சைனி’க்கும் ‘அப்துல்லாஹ் ஹமவோஸ்த்’ முகநூல் கணக்கிற்கும் இடையில் ஏற்பட்ட முறுகள் பின்னர் ஊருக்குள் தொடர ஆரம்பித்தன. 2013 இல் ‘கப்ர்களை ஷியாரத் செய்வது கூடும்’ எனும் கருத்தில் அப்துர் ரஊப் மௌலவியின் மார்க்க உரையிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ‘கிளிப்’ இல் இருந்து காத்தான்குடியில் மௌலவி அப்துர் ரஊபிற்கு எதிரான கொள்கைப் பிரசாரங்களை தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரதான பேச்சாளராக இருந்த காசிம் முகமட் ஸஹ்ரான் தலைமையில் இவ்வமைப்பு முன்னெடுக்கிறது.
-
“மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சட்டத்துக்கு முரணான நிறுவனமாகும்”
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சட்டத்துக்கு முரணான நிறுவனமாகும். மீண்டும் இந்த நிறுவனத்தை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு கையளிக்க எவராவது முயற்சிப்பார்களாக இருந்தால் அதனை தான் எதிர்ப்பதாகவும் இந்த பல்கலைக்கழகம் தொடர்பில் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் பாராளுமன்ற மேற்பார்வைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைதொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அந்த குழுவின் தலைவர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.
-
உலகக்கோப்பையில் மிளிரத்தவறிய அந்த முக்கிய 5 வீரர்கள்
லண்டன்: உலகக்கோப்பைத் தொடருக்கு முன் ஒவ்வொரு அணியிலும் சில வீரர்கள் முக்கிய துருப்புச்சீட்டாக இருந்தார்கள். எதிராணிகளுக்கு கடும் குடைச்சல் தரக்கூடிய வீரர்களாக விளங்கிய அவர்களில் சிலர் உலகக்கோப்பைத் தொடரில் முற்றிலும் சோடை போனார்கள். சில தனி நபர்களின் மோசமான செயல்திறன் அணியின் வெற்றி வாய்ப்புகளையும் கடுமையாக பதம் பார்த்தது.
-
“உயர்தர பரீட்சையில் சித்திபெறும் அனைத்து இன மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சியினை வழங்க வேண்டும்”
அநுராதபுரம்: நாட்டில் ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர பரீட்சையில் சித்திப்பெறும் அனைத்து இன மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சியினை வழங்கி இலங்கையின் வரலாற்றை அவர்களுக்கு ஆழமாக கற்றுக்கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
-
திருமண வயதெல்லையை திருத்தினால், அல்-குராணையும் திருத்தும்படி பேரினவாதிகள் கூறுவார்கள். முஸ்லிம் எம்பிக்கள் தயாரா ?
முகம்மத் இக்பால் சாய்ந்தமருது முஸ்லிம்களின் தனியார் சட்டத்தினை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு பேரினவாதம் நீண்ட காலமாக குரல் கொடுப்பதுடன், அதன் செயல்பாடுகளை திட்டமிட்டு வருகின்றது. இவ்வாறு பேரினவாதிகளின் திட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை பதினெட்டாக நிர்ணயிப்பதற்கு எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை பௌசியின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானித்துள்ளார்கள்.
-
இங்கிலாந்தின் 44 வருடக்கனவு இங்கிலாந்தில் நனவாகுமா?
முகமட் ஜலீஸ், இங்கிலாந்து லண்டன்: ஐ.சி.சி. உலகக்கிண்ணம் 2019 இறுதிப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (14) கிரிக்கட்டின் இல்லம் என அழைக்கப்படும் உலகப்புகழ்பெற்ற லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் உள்ளுர் நேரப்படி காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகிறது. ஐ.சி.சி. உலகக்கிண்ணப் போட்டி முதன்முதலில் 1975 இல் இடம்பெற்றபோது அத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து தெரிவாகி, மேற்கிந்தியத்தீவுகளுடன் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியதிலிருந்து 1979 இறுதிப்போட்டி, 1992 இறுதிப்போட்டி ஆகிய 3 ஐ.சி.சி. உலகக்கிண்ணப்போட்டிகளிலும் இரண்டாமிடத்தைப் பெற்றது.