-
இலங்கையில் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் ஏற்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்பட்ட திருத்தங்கள்
✨ அனைத்து முஸ்லிம்களின் திருமண வயது எல்லை 18ஆக அமைய வேண்டும். பெண்கள் காதிகளாகவோ, ஜுரிகளாகவோ, திருமணப் பதிவாளர்களாகவோ, காதிகள் சபை அங்கத்தவராகவோ நியமிக்கப்பட தகுதியுடையவர்களாக ஆக்கப்பட வேண்டும்.
-
முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை இந்து மயானத்தில் பொலிசார் புதைத்ததை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை மட்டு கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிசார் புதைத்ததை எதிர்த்து பொதுமக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(26) மாலை மயானத்தின் முன் வீதியை மறித்து வீதியில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
-
மட்டக்களப்பு பல்கலைக்கழக நிதி மோசடி: “ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் விசாரணைகள் முடிய வேண்டும்”
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு வெளிநாட்டில் இருந்து நிதி முறைகேடாக கையாளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார் பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலிய ரதன தேரர். நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் வெளிநாட்டு நிதி தொடர்பான சட்டம் அடிப்படைவாத செயற்பாடுகளளை ஊக்குவிக்கும் சக்திகள் பெருமளவான நிதியை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு வசதியாகவிருக்கிறது. இதற்கு ஜனாதிபதியும் , பிரதமரும் பொறுப்புக்கூறவெண்டும் என்றும் குறிப்பிட்டார் .
-
அவுஸ்திரேலிய வர்ணம்பூல் முதல்வருடன் கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் சந்திப்பு; இரட்டை நகர ஒப்பந்தம் கைச்சாத்து
– அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை மாநகரை, தனது சகோதர நகராக இணைத்து, அபிவிருத்தி செய்வதற்கு அவுஸ்திரேலியாவின் முன்னணி நகரங்களில் ஒன்றான வர்ணம்பூல் மாநகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள், வர்ணம்பூல் மாநகர முதல்வர் டொனி ஹெர்பட் அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (27) வர்ணம்பூல் மாநகராட்சி மன்ற செயலகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்து நடாத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு…
-
முகப்பூச்சுக்கள் – பெண்களே.. ! அவதானம்…!!!
நாட்டின் எல்லாப் பாகங்களிலும், பெரும்பாலாக பெண்களிடத்தில் சருமத்தை அழகுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் முகப்பூச்சுக்கள் (கிறீம் வகைகள்) தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது. தற்போது சந்தையில் உள்ள இவ்வாறான முகப்பூச்சுக்கள் (கிறீம் வகைகள்) குறிப்பிட்ட அளவிலும் பார்க்க ஆகக் கூடுதலான இரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளமை ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொள்ளப்படும் சுமார் ஆயிரம் தயாரிப்புக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
-
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றி
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது. இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்லசந்த அழகியவண்ண ஆகியோரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அக்கட்சியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ, தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ்…
-
எஸ்.பி. திஸாநாயக்கவின் பதவி லசந்த அலகியவன்னவுக்கு
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் (SLFP) வகித்த பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்னவுக்கு குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே தெரிவித்தார்.
-
ஊவா எல்லயில் காட்டுத்தீ
பதுளை: இலங்கையின் பிரதான சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக ஊவா மாகாணத்திலுள்ள எல்ல பகுதி திகழ்கின்றது. இயற்கையான மலைக்குன்றுகள், நீர்வீழ்ச்சிகள், குளுமையான வானிலை என உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை எல்ல சுற்றுத்தளம் ஈர்க்கின்றமை விசேட அம்சமாகும். குறிப்பாக அந்த பகுதியின் மலைத்தொடரும், அங்கு நிலவும் குளிர்ச்சியான வானிலையும் அனைவரும் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
-
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் தனித்துப் போட்டியிடுவது உசிதமா?
– வை எல் எஸ் ஹமீட் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சிறுபான்மையும் ஒன்றுபட்டு கடந்த ஆட்சியை அகற்றியது. இத்தேர்தலைப் பொறுத்தவரை அவ்வாறான ஓர் உணர்வு முஸ்லிம்களிடம் இல்லை. தற்போது மூன்று வகையான கருத்துக்கள் நிலவுகின்றன. அவை: (1) பிரிந்து பல வேட்பாளர்கட்கு வாக்களித்தல் (2) ஒருமித்து வாக்களித்தல் (3) தனித்துப் போட்டியிடல் பிரிந்து வாக்களித்தல்.
-
கடைகளில் எரிவாயு சிலின்டர்களை திருடி வந்த மூவர் கைது
கல்முனை: வீதியோரங்களில் கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எரிவாயு சிலின்டர்களை திருடி வந்த மூவரை கல்முனை பொலிஸார் வியாழக்கிழமை(22) மாலை கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்முனை சாய்ந்தமருது பகுதியில் கடைகளில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த சமையலுக்கு பயன்படுத்தப்படும் வாயு சிலின்டர்கள் திருடப்பட்டிருப்பதாக உரிமையாளர்களால் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தது.
-
கஞ்சிப்பானைக்கு 6 வருட சிறை மட்டுமே!!
கொழும்பு: கஞ்சிப்பான இம்ரானுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 6 வருட கடூழிய சிறை தண்டனை இன்று வழங்கப்பட்டுள்ளது. 5.300 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டிற்காகவே அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மரண தண்டனை இன்றி 6 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை இலங்கையின் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கியுள்ளது.
-
பைசல் ஹாஸிம், அலிசாஹிர் மௌலானா மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை பெறத் தீர்மானம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து தமது பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்களில் ஒரு சிலர் தமது அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் தமது பதவிகளை பொறுபேற்காமலிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் ஹாஸிம், அலிசாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.