✨ அனைத்து முஸ்லிம்களின் திருமண வயது எல்லை 18ஆக அமைய வேண்டும். பெண்கள் காதிகளாகவோ, ஜுரிகளாகவோ, திருமணப் பதிவாளர்களாகவோ, காதிகள் சபை அங்கத்தவராகவோ நியமிக்கப்பட தகுதியுடையவர்களாக ஆக்கப்பட வேண்டும்.
✨ முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம், அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரே மாதிரியாக வேண்டும்.
✨ அனைத்து சட்ட ரீதியிலான திருமணங்களின் போது, மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரின் கையெழுத்து மற்றும் கைவிரல் அடையாளங்களை கட்டாயமாக பெற்றுக் கொள்ள வேண்டும். திருமண வயதை எட்டிய அனைத்து பெண்களுக்கும் சுயாதீனமாக திருமணத்தை தீர்மானிப்பதற்கு உறவு முறை ஆண்களின் அனுமதியை பெற வேண்டியது கட்டாயம் கிடையாது.
✨ திருமணம், சட்ட ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக, கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
✨ ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்ய முயற்சிக்கும் போது, விசேட காரணங்களின் அடிப்படையில், சாதாரண காரணங்களை கருத்தில் கொண்டு, நிதி இயலுமை, அனைத்து தரப்பினதும் சம்மதம் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதி உள்ளிட்ட உரிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.
✨ தலாக் மற்றும் பஸஹ் நடைமுறையின் கீழ் விவாகரத்து பெற்றுக் கொள்ளும் போது உரிய நிபந்தனைகள் விடுக்கப்பட வேண்டும். மேல்முறையீட்டு செயற்பாடுகளின் போது கணவர் மற்றும் மனைவி ஆகியோருக்கு விவாகரத்து நடைமுறை சமமாக காணப்பட வேண்டும். முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம், முபாரத் மற்றும் குலா ஆகிய விதத்தில் விவாகரத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
✨ கைக்கூலி (சீதனம்) தொடர்பான சரியான தகவல்களை பெற்று, விவாகரத்தின் போது, அதனை மீளப்பெற்றுக் கொள்ளும் விதத்தில் சட்டம் தயாரிக்கப்பட வேண்டும். திருமணத்தின் போது, சரியான முறையில் பதிவுகள் செய்யப்படாது, சீதனத்தை வழங்குதல் மற்றும் பெற்றுக் கொள்ளுதல் சட்டவிரோதமானது அல்லது தண்டனைக்குரிய குற்றம் என்ற விதத்தில் அமைய வேண்டும்.
✨ முஸ்லிம் தம்பதியினால் திருமணத்திற்கு முன்னர் திருமண உடன்படிக்கையில் உள்ளடக்க வேண்டிய விடயங்களை அறிவித்து, அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.