-
2020 க்குப்பின் இலங்கையின் அதிகாரமிக்கவராக பிரதமரே திகழ்வார்: ஜனாதிபதி
அரசியலமைப்பின் பிரகாரம் 2020 க்குப் பின் இலங்கையின் அதிகாரமிக்கவராக பிரதமரே திகழ்வார் ஜனாதிபதி மைத்திரிபால மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது தேசிய சம்மேளனம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.
-
பலத்த பாதுகாப்புடன் இடம்பெறும் போரா மாநாடு
புதுக்கடை நீதவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று (01) முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் கூட்டங்கள் மேற்கொள்வதற்கு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட தேரர்கள் குழுவினருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள குறித்த உத்தரவில், இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நடத்தப்படுமாயின், சமாதான நடவடிக்கைக்கு எவ்வித குந்தகமும் ஏற்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முஹர்ரம் தலைப்பிறை தென்படவில்லை
கொழும்பு: இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை இன்றையதினம் (31) நாட்டின் எப்பாகத்திலும் தென்படவில்லை என, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய நிகழும் ஹிஜ்ரி 1440 இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக உலமா சபை அறிவித்துள்ளது.
-
முப்பெரும் நிகழ்வுகள்
– எம்.ரீ. ஹைதர் அலி இன்று (30.08.2019) கௌரவ சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்கள் நாங்கள் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க ஆரையம்பதி வைத்தியசாலைக்கும் மற்றும் மச்சந்தொடுவாய் யூனானி ஆராய்ச்சி வைத்தியசாலைக்கும் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்போது வைத்தியசாலைகளின் குறைபாடுகள் சம்பந்தமாகவும் எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது. மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலை தரம் உயர்த்துவது பற்றியும் ஆராயப்பட்டது.
-
நடுவானில் திரும்பிய விமானம்: நாடுகடத்தல் இரத்து!
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது. நடேஸ் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட பின்னர் நீதிமன்றம் அவர்களை வெளியேற்றும் உத்தரவைபிறப்பித்தது என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
-
“ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அத்தியாவசியம் என்பதனை எடுத்துக்காட்டுகிறது”-ஜனாதிபதி
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அவசியம் என்பதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
-
13 மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் இடைநிறுத்தம்
பதுளை மாவட்ட ஹாலிஎல – கலஉட பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உள்ளடங்களாக 13 மாணவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, அப் பாடசாலையின் விளையாட்டு மற்றும் கணித பாடங்களை கற்பித்த ஆசிரியர் (வயது 44 ) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஜனாதிபதி தேர்தலினூடாக ஹிஸ்புல்லாஹ் சாதிக்கப் போவதென்ன?
ஜனாதிபதி தேர்தல் களம் வரலாற்றில் ஒரு போதுமில்லாதவாறு சூடேற ஆரம்பித்துள்ளது. பெரிய தேசிய கட்சிகள், தங்களது வெற்றியை நோக்கி காய்களை நகர்த்துகின்றன. ஏனைய சிறிய கட்சிகளும், தனி நபர்களும் எங்கு சென்றால், எதைச் செய்தால் சாதிக்க முடியுமோ அவற்றை செய்வதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான நிலையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க சிந்திப்பதாக ஊர்ஜிதமான சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இதனை ஒரு புரளியாக கடந்து சென்றாலும், இனியும் அவ்வாறு கடந்து செல்ல முடியாதளவு, அச் செய்தி…
-
வியாழேந்திரன் உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்ற அழைப்பாணை
மட்டக்களப்பு கள்ளியங்காடு பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பு சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
-
தற்கொலைக் குண்டுதாரி ஆஸாத்
காத்தான்குடியை சொந்த இடமாகக் கொண்ட 34 வயதுடைய தற்கொலைக் குண்டுதாரி ஆஸாத், அம்பாறை மாவட்டம் – கல்முனை, இஸ்லாமாபாத் பகுதியில் 2012ஆம் ஆண்டு திருமணம் முடித்திருந்தார். அவரின் மனைவியின் பெயர் பைறூஸா. ஆஸாத் தற்கொலைத் தாக்குதலில் பலியான பின்னர், அவரின் மனைவி, சஹ்ரான் குழுவினரோடு இணைந்து சாய்ந்தமருதிலுள்ள வீடொன்றில் ஒளிந்திருந்தார். அதன்போது, அவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் சுற்றி வளைக்கப்பட்டனர். அதனால் அவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்து இறந்து போயினர்.
-
பொலிஸாரின் தடியடி தாக்குதலில் நால்வர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் நடுப்பகுதியில் வீதியை மறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இளைஞர்கள் பெண்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வீதியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
ஹிஸ்புல்லாவின் பல்கலைகழக கணக்கில் 4.4 பில்லியன் வரவு! நிலுவை 36,000 ரூபா
சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைகழகத்திற்கான நிதி பரிமாற்றம் தொடர்பான முழுமையான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கும்படி , நிதிக் குற்ற புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன பணித்துள்ளார்.