Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ரவுப் ஹக்கீம் ‘மாத்திரம்’ கலந்துகொண்ட UNP கூட்டம்

    கொழும்பு: இன்று (19) இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர் கூட்டத்தில் பங்காளி கட்சிகள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஆராய்வதற்கான செயற்குழு கூட்டம் இன்று மாலை அலரி மாளிகையில் இ்டம்பெற்றது.

  • ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி

    கொழும்பு: 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • அரச நிறுவனங்களில் 180 நாட்கள் பணிபுரிந்தோருக்கு நிரந்தர நியமனம்

    கொழும்பு: அரச நிறுவனங்களில் 180 நாட்கள் பணி புரிந்த தற்காலிக, நாள் சம்பள, ஒப்பந்த, நிவாரண, பதில் நியமன ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று (17) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இது தொடர்பான சுற்றுநிரூபத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர, அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

  • “Bபெட்டிகலோகெம்பஸ் தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது”

    கொழும்பு: “Bபெட்டிகலோ கெம்பஸ்” தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இன்று (17) கோப் குழு முன்னிலையில் தெரிவித்தது. Bபெட்டிகலோ கெம்பஸ் தனியார் நிறுவனம் தொடர்பில் இன்று கோப் குழுவில் விசாரணை நடைபெற்றது. 

  • “…… அங்கு திடீரென வந்த ஒருவர், வெட்டுக் காயங்களுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நஸாரை, துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடினார்”

    காத்தான்குடி: ஆசாத்தின் தந்தை நஸார் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்கிற போதும், அவரைப் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு காத்தான்குடியில் நாம் சந்தித்த அநேகர் தயக்கம் காட்டினர். சிலரை பெரும் பிரயத்தனங்களுக்குப் பின்னர் இது பற்றிப் பேசுவதற்கு இணங்கச் செய்த போதும், தம்மைப்பற்றிய அடையாளத்தை வெளியிடக் கூடாது என்கிற உத்தரவாதங்களை எம்மிடம் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

  • அறியாக்குழந்தைகள்

    – வை எல் எஸ் ஹமீட் “சஜித் பிரேமதாசவுக்குத்தான் ஆதரவு” என்பதன் சரி, பிழை ஒரு புறம் இருக்கட்டும். அவ்வாறு கூறமுன் அவருடன் ஏதாவது பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டதா? அல்லது அவ்வாறு பேசுவதற்கு முஸ்லிம்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லையா? த தே கூ அமைப்பைத் தனியாக சந்திக்கிறார்; சஜித். அவர்கள் தீர்வுத்திட்டத்திற்கு முன்னுரிமை தருபவர்களுக்கு ஆதரவு தருவோம்; என்கிறார்கள். முடிவைக்கூறவில்லை.

  • சஊதி அரம்கோ தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை 30 வருடங்களில் இல்லாத அளவு உயர்வு

    றியாத்: சஊதி அரசுக்குச் சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் கடந்த சனிக்கிழமையன்று ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. உலகளவில் செளதி அரேபியா மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஏழு மில்லியன் பரல்களை அந்நாடு ஏற்றுமதி செய்கிறது. தாக்குதலுக்குப் பிறகு அரம்கோ எண்ணெய் நிறுவனத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  • ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 15 அல்லது 23

    கொழும்பு: ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதி இடம்பெறலாமென சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அவசர சந்திப்பொன்றை  இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டிருந்தார்.

  • கட்சித்தலைமைத்துவம் தடைகளை விதித்தபோதும் அவற்றை உடைத்தெறிந்து தொடர்ச்சியாக கூட்டங்களை முன்னெடுத்துவரும் சஜித்

    கொழும்பு: ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தடாலடியாக செயற்பட ஆரம்பித்துள்ளன. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டு அவர் தனது பரப்புரைகளை வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றார்.

  • சவுதி அரேபியாவின் எண்ணெய் தொழிற்சாலைகள் மீது ஆளில்லா விமான தாக்குதல்

    றியாத்: சவுதிஅரேபியாவின் இரு முக்கிய எண்ணெய் தொழிற்சாலைகளின் மீது இடம்பெற்றுள்ள ஆளில்லா விமானதாக்குதல்களை தொடர்ந்து அந்த எண்ணெய் தொழிற்சாலைகளில் பாரிய தீ மூண்டுள்ளது. சவுதி அரேபியாவின் அரம்கோ நிறுவனத்திற்கு சொந்தமான Abqaiq, Alquraish (Dammam)எண்ணெய் தொழிற்சாலைகள் மீதே ஆளில்லா விமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

  • ‘மேக் புக் புரோ’ கையடக்க கணினியை விமானத்தில் கொண்டு செல்ல ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தடை விதிப்பு

    கொழும்பு: ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஆப்பிள் மேக் புக் புரோ என்ற கையடக்க கணினியை விமானத்தில் கொண்டு செல்ல ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தடை விதித்துள்ளது.  ஆப்பிள் மேக் புக் புரோ கணினியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படும் ஆவணம் இல்லாத பட்சத்தில், அதனை தமது விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படாது என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

  • 71 வருடகால தவறான அரசியல்தீர்மானத்தை மேற்கொண்ட மக்கள் இம்முறை தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: அனுரகுமார

    கொழும்பு: 71 வருடகால தவறான அரசியல்தீர்மானத்தை மேற்கொண்ட மக்கள் இம்முறை தவறை  திருத்திக் கொள்ள வேண்டும் என  மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தொழில் புரியும் மக்களின் மாநாடு இன்று (12) சுகததாச உள்ளக அரசங்கில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

←Previous Page
1 … 58 59 60 61 62 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar