WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கோத்தாவுக்கு ஆதரவு வழங்க தாயார்: ஜனாதிபதி

    குருணாகல்: நாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் சுதந்திர கட்சியின் தனித்துவத்தையும் கொள்கையையும் பாதிக்கும் வகையில் தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் அந்த ஆதரவை வழங்க தயார் இல்லை என்று ராஜபக்ஷக்களுக்கு தெளிவாகக் கூறிவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

  • சவுதி மன்னரின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை

    றியாத்: சவுதி அரேபிய மன்னரின் மெய்ப்பாதுகாவலர்  தனிப்பட்ட தகராறு காரணமாக அவரது நண்பரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சவுதி அரேபிய மன்னர் சல்மானின் மெய்ப்பாதுகாவலரான ஜெனரல் அப்தெல் பாகம் என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நண்பர் ஒருவரை பார்க்கசென்றவேளை எழுந்த தகராறினால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  • சவூதி அரேபியாவின் நஜ்ரான் பிரதேசம் வீழ்ந்தது.ஏராளமான சவூதி இராணுவத்தினர்கள் சரணடைந்துள்ளனர்

    – முகம்மத் இக்பால்  சாய்ந்தமருது  சவூதி அரேபியாவின் நஜ்ரான் பிரதேசம் வீழ்ந்தது. ஏராளமான சவூதி இராணுவத்தினர்கள் சரணடைந்துள்ளனர்.   சவூதி அரேபியாவின் நஜ்ரான் பிரதேசங்களை ஹௌதி இஸ்லாமிய படையினர்கள் கைப்பற்றி உள்ளதுடன், ஆயிரக்கணக்கான சவூதி இராணுவத்தினர்களை கைது செய்து, கனரக ஆயுதங்களையும் கைப்பற்றி உள்ளதாக ஹௌதி இயக்க பேச்சாளர் ஜெனெரல் சாரியாவை மேற்கோள்காட்டி சர்வதேச செய்திகள் கூறுகின்றன. 

  • சுற்றுலாப்பயணிகளுக்கு தனது கதவுகளை திறந்துள்ள சவுதி அரேபியா

    றியாத்: கச்சா எண்ணெய்யை சார்ந்திருக்கும் போக்கை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முதல் முறையாக சர்வதேச சுற்றுலாப்பயணிகளுக்கு தனது கதவுகளை திறந்துள்ளது சவுதி அரேபியா. அதுமட்டுமின்றி, இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 49 நாடுகளை சேர்ந்தவர்கள் எவ்வித விசாவும் இன்றி நேரடியாக சௌதி அரேபியாவுக்கு வருவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சவுதி அரேபியாவில் பெண்களுக்கு இருக்கும் கடுமையான ஆடை கட்டுப்பாடுகள் சுற்றுலாவுக்கு வரும் பெண்களுக்கு முற்றிலும் பொருந்தாது என்ற அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

  • அநுரா குமார திசாநாயக்கவின் வெற்றி வாய்ப்புகள் குறிப்பிடத்தக்கவையாக இல்லை, ஆனால் இரு பிரதான வேட்பாளர்களினதும் வாக்குப் பங்குகளில் பாதிப்பை அவரால் ஏற்படுத்தமுடியும்

    கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி அதன் மிகவும் பலம்வாய்ந்த வேட்பாளர் என்று சொல்லக்கூடிய சஜித் பிரேமதாசவை களமிறக்கியிருக்கிறது.  ஜனாதிபதி பதவிக்கான இந்த போட்டியில் ஒரு இரண்டாவது ராஜபக்சவுடன் ஒரு இரண்டாவது பிரேமதாச மோதுகிறார் என்று இந்தியாவின் பிரபல தேசிய ஆங்கில தினசரிகளில் ஒன்றான ‘ த இந்து ‘ நேற்று சனிக்கிழமை அதன் ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

  • “சமூகத்தை ஹராத்தை விட்டும் பாதுகாக்க மஸ்ஜித்களில் கடன் திட்டங்களை திட்டமிடுவோம்” – ஜூம்மா உபதேசத்தில் அஷ்ஷைக் யஹ்யா மௌலவி

    காத்தான்குடி மெத்தைப்பள்ளிவாயல் 27/09 ஜூம்மா உபதேசத்தில் அஷ்ஷைக் யஹ்யா மௌலவி எந்த ஊரில் வட்டியும், விபச்சாரமும் பகிரங்கமாக ஆகிவிடுமோ,  அவர்கள் அல்லாஹ்விடம் ” நாம் உனது தண்டனையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்” என அல்லாஹ்விடம் துணிவு கொள்வதற்கு சமம் எனவும் எனவே இவ்விரு விடயங்களில் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும் என மக்களுக்கு வட்டி மற்றும் விபச்சாரம்,

  • “முஸ்லீம்களிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் இலங்கையின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து”

    கடந்த 21/4 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கையில் முஸ்லீம்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கடுமையான ஆபத்தான நடவடிக்கைகளால் இலங்கையின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக  சர்வதேச நெருக்கடி குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச நெருக்கடி குழு இதனை தெரிவித்துள்ளது.

  • உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுதலை

    எனது மதிப்பிற்குரிய இஸ்லாமிய உறவுகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு எங்களது அன்புக்கும் கௌரவத்திற்குமுரிய உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் நீதிமன்றினால் இன்று விடுதலை செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன், அல்ஹம்துலில்லாஹ். இந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வை அதிகமதிம் துதிபாடி இஸ்திஃபார் செய்யுமாறு தருணம் இதுவென்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். மனித முயற்சிகளை தாண்டிய வெற்றிகளை தருவதற்குப் போதுமானவன் அல்லாஹ் ஒருவனே! அல்ஹம்துலில்லாஹ்.

  • விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு

    கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை 6.00 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்றுக்காக அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆராயப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அன்னம் சின்னத்தில் சஜித்

    கொழும்பு: ஐக்கிய தேசிய முன்னணியானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடும் என அமைச்சரும், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

  • ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்

    கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்க கட்சியின் செற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. சற்று முன்னர் சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சியின் விசேட செயற்குழு கூட்டத்தின் போதே இந்த  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

  • நிபந்தனைகளுக்கு அடி பணியவோ, கெளரவத்தை விட்டுக்கொடுக்கவோ முடியாது: சஜித்

    களுத்துறை: எனது அரசியல் வாழ்க்கையில் எனக்கென  தனியான அரசியல் அடையாளம் உள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு நிபந்தனைகளுக்கு அடி பணியவோ, கெளரவத்தை விட்டுக்கொடுக்கவோ முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நான் மற்றவர்களின் தேவைகளுக்கான செயற்படும் கைப்பொம்மையும் இல்லை. மக்களே எனது உறவினர்கள்.  அவர்களின் ஆணைக்கமையவே செயற்டுவேன். நான் இந்த  ஜனாதிபதி தேர்தலில் நேர்மையாகவே களமிறக்குகிறேன். மக்களுக்கு ஏற்ற மக்களுக்கான ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் புதிய யுகத்துக்கான…

←Previous Page
1 … 56 57 58 59 60 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar