-
கொரோனா தொற்று: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதி
பதுளை: தாய், தந்தை மற்றும் அவர்களது ஏழு வயது மகன் ஆகிய மூவரும் மேற்படி சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு விசேட சிகிச்சைபெற்று வருகின்றனர். இவர்களில் ஏழு வயது நிரம்பிய சிறுவனுக்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதும் பெற்றோர் அவரை பதுளை அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். இதையடுத்து அச்சிறுவனின் தாயும் தந்தையும் விசேட சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
முஸ்லிம் தலைமைகளின் விஷம, இனவாத பிரச்சாரங்கள் மொட்டுக்கு வாக்குகளை அதிகரிக்க செய்யும்
வெறும் பானைக்குள் புரியாணி தேடும் படலத்தை அண்மைய ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எமது முஸ்லிம் அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவது கவலையான ஒரு விடயம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைகள் தீர்மானம் எடுக்க முன்னர் அனுபவம் குறைந்த சில இளவயது பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து முந்திரிய விதை போன்று முந்திக்கொண்டு வந்து சந்தைப்படுத்தி இறுதியில் படுதோல்வியடைந்த விரக்தியில் இருந்து இன்னும் மீண்டுவராத இவர்கள்…
-
‘கள்வர்களை’க் கைது செய்ய உத்தரவு
கொழும்பு; மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்க , அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோரை கைது செய்யுமாறு பிடியாணை பெறுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ் உட்பட 12 பேரை பிடியாணை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா…
-
புத்தர் சிலை உடைப்பு; சந்தேகநபர்களுக்கு மார்ச் 16 வரை விளக்கமறியல்
மாவனல்லை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 30 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (03) மாவனல்லை நீதவான் உபுல் ராஜகருணா முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, எதிர்வரும் மார்ச் 16ஆம் திகதி வரை அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
-
21/4 தாக்குதல்தாரியின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு மார்ச் 13 வரை விளக்கமறியல்
கொழும்பு ஷங்ரி லா ஹோட்டல் மற்றும் சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை தாக்குதல்தாரிகளின் தந்தையான மொஹம்மட் யூசுப் மொஹம்மட் இப்ராஹிம் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இன்று (28) கொழும்பு பதில் நீதவான் சஞ்ஜீவ அன்டனி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் மார்ச் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
-
கொரோனா வைரஸ்: ஈரானில் 26 பேர் உயிரிழப்பு
ஈரானில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ள்தாக ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 245ஆக உயர்ந்துள்ளது.
-
டெல்லி: இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள் இடையே உண்டான மோதலால் ஞாயிறன்று தொடங்கிய வன்முறைகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
-
“பிரதமர் மோதி மிகுந்த மத நம்பிக்கையுள்ள தலைவர்”- ட்ரம்ப்
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், டெல்லி வன்முறைகள் குறித்த கேள்விக்கு அது பற்றி இந்தியாதான் முடிவு செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார். அவர் தமது பேட்டியின்போது பிரதமர் நரேந்திர மோதி மிகுந்த மத நம்பிக்கையுள்ள தலைவர் என்று தெரிவித்தார்.
-
சாஹிரா கல்லூரி விளையாட்டு விழா: அரபா இல்லம் சம்பியன்
– நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் 2020 ஆம் ஆண்டு இல்ல விளையாட்டு போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள்(21) இன்று பிற்பகல் வெகு விமர்சையாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
-
புர்கா போன்ற ஆடைகளை உடனடியாக தடை செய்யுமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை
முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான புர்கா போன்ற ஆடைகளை உடனடியாக தடை செய்யுமாறு இலங்கை நாடாளுமன்றத்தில் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு குழு, நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
-
மத்ரசாவில் கல்வி கற்கும் இந்து மாணவர்கள்
மேற்கு வங்க மாநிலத்தில் திங்களன்று நடந்த மதராசா போர்டு தேர்வு ஒரு புது சாதனையைப் படைத்தது. இந்த தேர்வில் கலந்து கொண்ட 70 ஆயிரம் மாணவர்கள் அதாவது 18 சதவீதம் பேர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். மதராசா போர்ட் நடத்தும் இந்த தேர்வு 10ஆம் வகுப்பு தேர்வுக்கு சமமானது. 2019ஆம் ஆண்டு இந்த தேர்வு 12.77% இந்து மாணவர்கள் எழுதினர். மேற்கு வங்கத்தில் 6000க்கும் அதிகமான அரசிடம் உதவி பெறும் மதராசாக்கள் உள்ளன.
-
சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம்
மக்கள்மைய பொருளாதாரத்தினை கட்டியெழுப்பி வறுமையை ஒழிப்பது தனது நோக்கமாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (20) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி அலுவலர்கள் சங்கத்தின் 22வது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். “சமூர்த்தி விவசாய உரிமைகளை உறுதிப்படுத்தும் பொதுஜன யுகம்” என்ற கருப்பொருளின் கீழ் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.