Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் 23 இல் சம்பளம்

    கொழும்பு: அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் இம்மாதம் 23ஆம் திகதி (திங்கட்கிழமை) சம்பளத்தை வழங்குமாறு நிதி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அரசாங்க மற்றும் தனியார் பிரிவுகளுக்கு இன்று (19) வரை விடுமுறை வழங்கப்பட்டிருந்ததோடு, நாளை (20) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை அரசாங்க மற்றும் தனியார் பிரிவுகளுக்கு வீடுகளிலிருந்து கடமைகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • ஏப்ரல் 25 தேர்தல் இடம்பெறாது

    கொழும்பு: பொதுத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடாத்தப்படமாட்டாது என அறவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தலை எந்த காரணத்திற்காகவும் நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

  • ஹிஸ்புல்லாஹ்வுக்கும், அப்துர் ரஹ்மானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவு

  • ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் ஹிஸ்புல்லாஹ்வும், பசீரும் களமிறங்குகின்றனர்

    ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் MLAM. ஹிஸ்புல்லாஹ்வும், பசீர் சேகுதாவூதும்களமிறங்குகிறார்கள்.

  • காத்தான்குடி நகர முதல்வரின்அறிவித்தல்

    பொதுமக்கள் கூடுவதை தவிர்க்குமுகமாக உடன் அமுலுக்கு வரும்வகையில் காத்தான்குடி பொது நூலக வாசிப்புப் பகுதி, சிறுவர் பகுதி , கடற்கரை, ஆற்றங் கரை சிறுவர் பூங்காக்கள் என்பன மறு அறிவித்தல்வரை மூடப்படுவதோடு, பொதுமக்கள் அநாவசியமாக பொது இடங்களில், வீடுகளில் கூடுவதை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறும், வெளியில் சென்று வீடு திரும்புபவர்கள் கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுமாறும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

  • மேலும் 06 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 34: முழு விபரம் இணைப்பு

    கொழும்பு: கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணிக்குழுவினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, நேற்றையதினம் (16) 28 ஆக காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் 6 பேர் அதிகரித்து தற்போது 34 ஆக அதிகரித்துள்ளது. 17.03.2020 34. கட்டாரிலிருந்து வந்த உடுகம்போல பிரதேசத்தைச் சேர்ந்தவர்: 25 வயது33.…

  • “பாயசம் வைக்கவேணும் பானையிலோ அரிசி இல்லை”

    “பாயசம் வைக்கவேணும் பானையிலோ அரிசி இல்லை. முற்றிய நெற்கதிரே அரிசி கொஞ்சம் தருவாயோ?” இதற்கு நெற்கதிர் “நானெப்படித்தர முடியும்? என்னை வளர்க்கும் வயலிடம் போய்க் கேள்” என்றது… வயலிடம் போன எலியார்

  • இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகள் முடக்கம்

    கொழும்பு: இலங்கைக்கு வருகை தரும் அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் இடைநிறுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முடிவெடுத்துள்ளார் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (17) இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொடர்பான விசேட கூட்டமொன்றின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

  • கட்டார், பஹ்ரைன், கனடா பயணிகளுக்கு இலங்கை வரத் தடை

    கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் அனைத்துப் பயணிகளுக்கும் இலங்கைக்கு வருகை தருவதற்கான அனுமதி 14 நாட்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

  • இலங்கையில் சீனர்கள் ஏன் கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை?

    கொழும்பு: கொரோனா வைரஸ் தொற்று அச்சம் உலகம் முழுவதும் பரவி இருக்கும் சூழலில், சீனாவிலிருந்து வருகைத் தரும் சீன பிரஜைகள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனை மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்படாமை குறித்து இலங்கையில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

  • காத்தான்குடி நகர முதல்வரின் விசேட அறிவித்தல்.

    இன்றுமுதல் (13.03.2020) மறு அறிவித்தல்வரை காத்தான்குடி ஹிஸ்புள்ளா மண்டபம், ஏனைய பொது மைதானங்களில் இடம்பெற இருந்த சகல நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்படுகின்றன. SHM அஸ்பர் JPநகர முதல்வர்காத்தான்குடி

  • கொரோனா வைரஸ் – ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய அறிவிப்பு

    இவ்வுலகில் அனைத்து விடயங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றது என்பதை ஒவ்வொரு முஃமினும் நம்புவது அவசியமாகும்.“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன் என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக.” (அத்-தௌபா : 51) என்று அல்லாஹுதஆலா அல்-குர்ஆனில் கூறுகிறான்.

←Previous Page
1 … 40 41 42 43 44 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar