Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘இலங்கை மக்கள் முகமூடி அணியத் தேவையில்லை’ – அமைச்சர் பந்துல

    கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள முகமூடி அணிய வேண்டிய நிலை, தற்போது இலங்கையில் இல்லை என்று, தேசிய தொற்று நோயியல் பிரிவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

  • சீன சுற்றுலா பயணிகளுக்கு வீசா இடைநிறுத்தம்

    கொழும்பு: சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வருகை தரு வீசா (On arrival visas) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார்.

  • 8 தமிழர்களை கழுத்தறுத்து கொன்றவர் பொது மன்னிப்பில் விடுதலை!

    கொழும்பு: மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்புக்கு இணங்க அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தமிழ் மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை போன்று அமைந்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. சிறிநேசன் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

  • நவமணியின் ரழமான்பரிசு மழைபரிசளிப்பு நிகழ்வு இன்று: வெற்றியாளர்கள் விபரங்கள் இணைப்பு

    ⁃ எஸ்.எஸ்.எம்.ஸாகிர் நவமணிப் பத்திரிகை ஜம்இய்யத்துஷ் ஷபாப் உடன் இணைந்து 06 ஆவது முறையாக நடாத்திய ரமழான் பரிசு மழை 2018 இன் பரிசளிப்பு விழா நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் 3.30 மணிக்கு மருதானையில் அமைந்துள்ள ஜம்இய்யத்துஷ் – ஷபாப் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

  • கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள விளம்பரப் பதாகையை அகற்ற ஷிப்லி பாறூக் கடிதம்

    எம்.ரீ. ஹைதர் அலி மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையினை மேம்படுத்தும் முகமாக மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் விளம்பரப் பதாகை ஒன்று கிழக்கு மாகாண சுற்றுலாத் துறை பணியகத்தினூடாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கை பல்லின சமூகங்கள் மிக உயர்ந்த பண்பாடுகளுடனும் தமக்கான பிரத்தியேக கலாச்சாரத்தையும் ஒழுக்க ரீதியான உயர்ந்த கோட்பாடுகளை கொண்ட நாடாகும். அந்த வகையில் அரசாங்கம் என்பது இவைகளை பாதுகாத்து தமது முன்னெடுப்புக்களை செய்ய வேண்டிய கடமைப்பாட்டில் உள்ள மிகப்பெரிய நிறுவனமாகும்.

  • சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகள் அனுமதி

    – அஸ்லம் எஸ்.மௌலானாசாய்ந்தமருது: சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய தினம முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை சாய்ந்தமருது பொலிவேரியன் நகரில் அமைந்துள்ள கல்லூரியின் நிர்வாக காரியாலயத்தில் இந்நேர்முகப் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

  • ராஜித CID இல் வாக்குமூலம்

    குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அங்கிருந்து வெளியேறியுள்ளார். மூன்று மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக வாக்குமூலம் வழங்கியதை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கல்குடா அரசியல் கள நிலைமை! கல்குடா முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவது சிரமமானதா?

    – எம்.ரீ. ஹைதர் அலி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா தேர்தல் தொகுதியில் 115,974 மொத்த வாக்காளர்களில் 35,338+ முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். (KPW & KPC) (இதில் புணானை கிழக்கு வாக்காளர்கள் உள்ளடக்கப்படவில்லை) இவ்வாக்காளர் தொகையானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏனைய இரு முஸ்லிம் பிரதேசங்களான காத்தான்குடி, ஏறாவூர் உடன் ஒப்பிடும்போது கணிசமானளவு அதிகமாகும்.

  • “பொருளாதார சுதந்திரத்திற்காகவும், முழு நேர பணிக்கு செல்லவுமே அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தோம்”

    லண்டன்: பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்கல் அறிவித்துள்ளனர். இந்த முடிவை எடுப்பதற்கு முன்னதாக, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் யாரையும் அவர்கள் கலந்தோசிக்கவில்லை என கூறப்படுகிறது. இருவரின் இந்த முடிவு, பிரிட்டன் அரச குடும்பத்தினருக்கு வருத்தத்தை அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

  • ஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்: அமெரிக்கா

    ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. “ஈரான் ராணுவத் தளபதி காசெம் சுலேமானீயை தற்காப்புக்காகவே கொலை செய்தோம்” என்று ஐக்கிய நாடுகள் அவைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

  • முஸ்லிம் விவாக சட்டம் தொடர்பில் ரத்தன தேரரினால் இரு திருத்தங்கள்

    முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை இரத்து செய்வதற்கான திருத்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் அத்துரலிய ரத்தன தேரர் எம்.பியினால் இரு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குதல் மற்றும் திருமண கட்டளைச் சட்டத்தை திருத்துதல் ஆகிய இரு திருத்தங்களை அவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

  • ஈரானின் 52 இடங்களை நாங்கள் குறி வைத்துள்ளோம்: டொனால்ட் டிரம்ப்

    இரானின் 52 இடங்களை நாங்கள் குறி வைத்துள்ளோம். ஒரு வேளை ஈரான் அமெரிக்கர்களையோ அல்லது அமெரிக்க சொத்துகளையோ தாக்கினால், எங்களது எதிர்தாக்குதல் மிக மோசமான மற்றும் வேகமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.

←Previous Page
1 … 44 45 46 47 48 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar