-
சூனியம் தொடர்பான நிலைப்பாடு ரமழானின் பின்னர் அறிவிக்கப்படும்- NTJ
முஹம்மது நியாஸ் நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டதாக இடம்பெறக்கூடிய ஹதீஸ்கள் மற்றும் அல் குர்ஆனுக்கு முரண்படக்கூடிய ஸஹீஹான அறிவிப்புக்கள் தொடர்பான தமது மீளாய்வின் இறுதிக்கட்ட நிலைப்பாட்டினை ரமழான் மாதம் முடிந்ததன் பிற்பாடு வெளியிடுவதாக தேசிய தௌஹீத் ஜமாஅத் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
-
காலி முகத்திடலில் பகிரங்கமாக கஞ்சா புகைப்பிடித்துக் கொண்டிருந்த 20 இளைஞர்கள் கைது
கொழும்பு: காலி முகத்திடலில் பகிரங்கமாக கஞ்சா போதைப்பொருளை புகைப்பிடித்துக் கொண்டிருந்த 20 இளைஞர்கள் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட நபர்களை இன்று (20) கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, ஒவ்வொருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
-
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் ப. மா. சங்க கொழும்பு கிளையின் வருடாந்த ரமலான் ஓன்று கூடலும் இப்தார் நிகழ்வும்
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் வருடாந்த ரமலான் ஓன்று கூடலும் இப்தார் நிகழ்வும் எதிர்வரும் சனிக்கிழமை 25.06.2016 ஆம் திகதி மாலை 05.00 மணி முதல் வெள்ளவத்தை மெரைன் ரைவில் அமைந்துள்ள மியாமி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
அல்மனார் நடாத்தும் புனித றமழான் விசேட அறிவியல் போட்டி
அல் மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி அல்மனார் நிறுவனம் நடாத்தும் புனித றமழான் விசேட அறிவியல் போட்டிக்கான வினாக்கொத்துகள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனியின் வழிகாட்டலில் நடைபெறும் இச்செயற்றிட்டத்தின் மூலம் இப்புனித மாதத்தில் குர்ஆன், ஹதீதுகளுடன் தொடர்பு பட்ட ஒரு சமூக குழாமொன்றை உருவாக்கி அதன் பலனை அவர்களது வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வாழும் உயரிய பணி இதனூடாக கட்டியெழுப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
-
பீஜேயும் நோயும்
தூய இஸ்லாத்தை துணிவுடன் உரைத்தவர் பேயென்றும் பிசாசென்றும் பிதற்றி உழைத்தோரின் மாயைகளைக் களைந்தவர் மறுமலர்ச்சி தந்தவர் நோயில் விழுந்தாரெனும் நொந்த செய்தி வந்தததும் தீயவர் சிலர்கள் தீன் வழி மறந்து வாயினில் வந்தபடி வசைகள் பாடுகிறார்.
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப் பட்டுள்ள மாத்திரை: பெண்கள் அவதானம்!
முகமட் சில்மி (கிழக்குப் பல்கலைக்கழகம்) ரொகிப்னோல் என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு குடுத்தால் சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார். இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…! பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு புடிக்க முடியாது.
-
காத்தான்குடி சமூக மதிப்பீட்டிற்கான அமைப்பினது வறிய குடும்பங்களுக்கான உலர் உணவு விநியோகம்
எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டிற்கான அமைப்பினது விஷேட தேவையுடையோர் மற்றும் வறிய குடும்பங்களுக்கான உலர் உணவு விநியோகம் சனிக்கிழமை புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் அமைப்பின் தலைவர் இல்மி அஹமட்லெவ்வை தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா கலந்துகொண்டார்.
-
டேவிட் கமரூனுக்கு உதவுவதற்காக நான்கு அமைச்சர்கள் பிரித்தானியா பயணம்
கொழும்பு: பிரித்தானியாவில் நடைபெறவுள்ள கருத்து கணிப்பு வாக்கெடுப்பு தொடர்பில் அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூனுக்கு உதவுவதற்காக இலங்கையில் இருந்து நான்கு அமைச்சர்கள் பிரித்தானியா சென்றுள்ளனர். சுசில் பிரேமஜயந்த, ஹரின் பெர்ணான்டோ, ஹர்ச டி சில்வா மற்றும் டிலான் பெரேரா ஆகியோரே பிரித்தானியா சென்றுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை தவிர முன்னாள் அமைச்சர் ரோசி சேனாநாயக்கவும் பிரித்தானிய பிரதமருக்கு ஆதரவு வழங்குவதற்காக அங்கு சென்றுள்ளார்.
-
காத்தான்குடி கடலில் நீராடுவதற்குத்தடை
M.T. ஹைதர் அலி காத்தான்குடி: தொடர்ச்சியாக காலத்திற்கு காலம் காத்தான்குடி கடலில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வருபவர்கள் நீராடுவதற்காக கடலுக்கு செல்லும்போது ஓரிருவர் மரணமடையும் நிலை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை கருத்தில் கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸ்ஸம்மில் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி
-
புல்மோட்டையில் 450 பயணாளிகளுக்கான இலவச குடிநீர் திட்டமும் இப்தார் நிகழ்வும்
M.T. ஹைதர் அலி புல்மோட்டை: திருமலை மாவட்டத்தின் புல்மோட்டை பிரதேசத்தில் இலவச குடிநீர் விநியோகத்திற்கான வவுச்சர் மற்றும் இப்தார் நிகழ்வும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரின் தலைமையில் 17.06.2017ஆந்திகதி பி.ப.4.00 மணியளவில் நடைபெற்றது. புல்மோட்டை பிரதேசத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட 450 பயனாளிகளுக்கு இலவசமாக குடி நீர் இணைப்பினை சவூதி அரேபிய நாட்டைச் சேர்ந்த பைசல் மிலாஹியின் அனுசரணையில் இலங்கைக்கான நிதாயுள் ஹைரா நிறுவனம் மற்றும் பீட் நிறுவணும் புல்மோட்டை அரஹுமா நிறுவனம் ஆகியன இணைந்து ஏற்பாடுகளை…
-
காத்தான்குடியில் இரவு வேளைகளில் சிவில் உடையில் பொலீஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிப்புப் பணியில்
எம்.ஐ. அப்துல் நஸார் காத்தான்குடி: மோசமான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சம்மேளனத்தினால் 2016.06.14ஆந் திகதியிட்டு தலைவர் பொறியியலாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.தௌபீக், அதன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி ஆகியோரின் கையொப்பத்துடன் வெளிடப்பட்டுள்ள பொதுமக்களுக்கான அறிவித்தலிலேயே இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்
பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.