பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.இச் சம்பவம் குறித்து மேற்கு யோர்க்ஸர் பொலிஸ் மற்றும் குற்றவியல் துறை ஆணையர்கள் வெளியிட்ட அறிக்கையில், நேரில் பார்த்த பல சாட்சிகளிடம் போலீசார் விரிவான விசாரணை நடத்தியிருப்பதாகவும், கொலைக்கான காரணத்தைக் கண்டறிய முழு அளவிலான விசாரணை நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் டேவிட் கமரன், கிப்ரால்டருக்கு செல்லவிருந்த தனது திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார்.
ஜோ காக்ஸ் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள டேவிட் கமரன், ”ஜோ காக்ஸ் மரணம் ஒரு துயரச் சம்பவம். அவர், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட, அக்கறை கொண்ட எம்.பி. அவரது கணவர் பிரேண்டன் மற்றும் இரண்டு இளம் குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் தெரஸா மே உள்பட மேலும் பல தலைவர்கள் ஜோ காக்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்

Leave a comment