பீஜேயும் நோயும்

pjதூய இஸ்லாத்தை
துணிவுடன் உரைத்தவர்
பேயென்றும் பிசாசென்றும்
பிதற்றி உழைத்தோரின்
மாயைகளைக் களைந்தவர்
மறுமலர்ச்சி தந்தவர்
நோயில் விழுந்தாரெனும்
நொந்த செய்தி வந்தததும்
தீயவர் சிலர்கள்
தீன் வழி மறந்து
வாயினில் வந்தபடி
வசைகள் பாடுகிறார்.

நல்லவர்க்கு நோயை
நாயன் கொடுக்கான் என
உள்ளதா சொல்வீர்
உண்மையை உரைப்பீர்
அள்ளாஹ்வின் தூதர்கள்
அனுபவித்த நோய்கள்
உள்ளதே குர் ஆனில்
உணர மறுப்பதேன்?

கருத்தை கருத்தால்
கரைகாண இயலாதோர்
வருத்தத்தில் வீழ்ந்தவர்க்கு
வசைகள் பாடுகிறார்.
ஒருத்தரின் துன்பத்தில்
உற்சாகம் காண்பது
மிருகத்தின் குணம் கொண்ட
மிகக் கேவல நிலையே.

பிந்திய காலத்தில்
பீஜே கூறிய
‘அந்த’க் கருத்துக்களை
அடியேனும் ஏற்கவில்லை.
எந்த விடயத்திலும்
எதிர்ப்பதற்கு முறையுண்டு.
நிந்தனை செய்வோர்
நினைவில் கொள்ளட்டும்.
அந்த நோயையோ
அதை விடப் பெரிதாகவோ
சொந்த வாழக்கையில்
சோதனை வந்தால்
அந்த வேளையில்
அனைத்தும் புரியும்!

  • M. நிஷவ்ஸ்

Published by

Leave a comment