-
2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட 644 மலையக மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கும் நிகழ்வு
பா.திருஞானம் நுவரெலியா: கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட 644 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கும் நிகழ்வு (25.06.2016) நுவரெலியா நடைபெறவுள்ளது.
-
இனமதவாத சக்திகளுக்குப் பின்னால் உள்ள அரசியல் நிகழ்ச்சி நிரல்
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் ஹலால் முதல் அழுத்கமை வரையிலான அனைத்து காழ்ப்புணர்வு வன்முறை கட்டவிழ்ப்புகளிற்கும் பின்னால் தேசிய பிராந்திய பூகோல அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இருப்பதனை அவ்வப்போது சுட்டிக்காட்டினோம். அதே போன்றே இந்தநாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துடன் அத்தகைய நிகழ்ச்சி நிரல்கள் ஒருபொழுதும் காலாவதியாவதில்லை என்பதனையும் நீறுபூத்த நெருப்பாக இருந்து காலத்துக்குக் காலம் சந்தர்பங்கள் சாதகமாக அமைகின்ற பொழுதெலாம் அவை தலை விரித்து தாண்டவமாடும் என்றும் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தோம்.
-
“மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்ன நடக்க உள்ளது என்பதை”- மகிந்த
கொழும்பு: புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட மாட்டாது, அவ்வாறு உருவாக்கப்பட்ட கூட்டு எதிர்கட்சி இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை இன்று பார்வையிட சென்ற போதே செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வெளியேற்றி 28வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா
ஹூஸ்டன்: கோபா அமெரிக்கா கிண்ண கால்பந்து தொடரில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்திய அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. அமெரிக்காவில் 45வது கோபா அமெரிக்கா கிண்ண கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஹூஸ்டன் நகரில் உள்ள என்.ஆர்.ஜி. மைதானத்தில் இன்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் 14 முறை சாம்பியனான அர்ஜென்டினா – அமெரிக்கா அணிகள் மோதின.
-
இந்தியாவில் மின்னல் தாக்கி 80 பேர் உயிரிழப்பு
டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில், கிட்டத்தட்ட 80 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்துள்ளவர்களில் பெரும்பாலானோர், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தொடர்ந்து பருவ மழை பெய்துவரும் நிலையில், விவசாய நிலங்களில் இவர்கள் பணி செய்து கொண்டிருக்கும் போது மின்னலால் தாக்கப்பட்டுள்ளனர்.
-
மல்வான, ரக்ஸபான ஜும் ஆ மஸ்ஜித் ஸகாத் குழு விடுக்கும் ஒரு முக்கிய வேண்டுகோள்
எமது பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி கூறிக் கொண்டு இவ் வேண்டுகோளை முன் வைக்கின்றோம். கடந்த பல வருடங்களாக எமது பள்ளி வாசல் மூலம் கூட்டு ஸகாத் அமுல் படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் இம்முறை வழமையை விட கூடுதலான ஸகாத் நிதியை சேகரித்து அதனை பகிர்ந்தளிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு நாம் தள்ளப் பட்டுள்ளோம்.
-
நிந்தவூரில் சிகிச்சைக்கு சென்ற சிறுமி வைத்தியரால் துஷ்பிரயோகம்!!!
நிந்தவூர்: நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள வைத்தியர் ஒருவரின் தனியார் சிகிச்சை நிலையத்திற்கு சிகிச்சைக்காகச் சென்ற ஏழு வயதுச் சிறுமியொருவரை துஷ்பிரயோத்திற்குள்ளாக்க முயற்சித்த வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சிறுமியின் வாயில் உள்ள காயத்திற்கு சிகிச்சை பெறும் வகையில் நேற்று (20) இரவு 7 மணியளவில் தனது தந்தையுடன் குறித்த வைத்தியசரின் சிகிச்சை நிலையத்திற்குச் சென்ற வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
-
கிளப் போட்டிகளில் ‘ஹீரோ’.. யூரோ தொடரில் ‘ஸீரோ’
பரிஸ்: ஐரோப்பிய கால்பந்து தொடரில் சில நட்சத்திர வீரர்கள் ஒரு கோல் கூட அடிக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக உள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐரோப்பிய கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2012ம் ஆண்டை விட இந்த தொடரில் கூடுதலாக 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.
-
இராணுவத்திடம் மண்டியிடுகிறதா அரசு?
எம்.ஐ. முபாறக் மைத்திரி-ரணில் அரசு உருவானது முதல் அது எதிர்கொண்டு வந்த பல சவால்களை அது சுலபமாக வெற்றி கொண்டுவிட்டது. ஆனால்,மிகப் பெரிய சவாலாக-ஆட்சியின் இருப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சவாலாக இருப்பது இந்த அரசு தொடர்பான இராணுவத்தின் நிலைப்பாடுதான்.அது மறைமுகமான சவாலாகவே இருக்கின்றது.
-
ரங்காவின் கேவலமான அரசியல் நாடகம் அம்பலம்
அப்துல் ரெஸா சக்தி டீவியின் மின்னல் தயாரிப்பாளர் ஸ்ரீரங்கா கடந்த வருடம் ஜூலை மாதம் ஐந்தாம் திகதி நடாத்திய நிகழ்ச்சியின் போது கெமரா ஆன் இல் இருந்ததால் அவருடைய திருகு தாளங்கள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. அரசியல் நிகழ்ச்சியொன்றை இவர் எவ்வாறு தனக்கு ஏற்றவாறு சொல்லிக்கொடுத்து செய்கின்றார் என்பது அப்பட்டமாக வெளிவந்தது. அன்றைய நிகழ்ச்சியில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மாகாணசபை உறுப்பினர் சக்திவேலுக்கு கூத்தாடி ரங்கா இப்படிச் சொல்லுங்கள் அப்படிச் சொல்லுங்கள் என்று மிகவும் தெளிவாக கற்றுக்…